Category: பதிவர் சதுரம் ;-))

  • ஈரோடு சங்கமம் – எவ்வளவு முடியுமோ அவ்வளவு லேட்டா..

    ஈரோடு சங்கமம் நிகழ்ச்சியில் விருது வழங்க என் பெயரை தேர்வு செய்திருப்பாதாகவும், விழாவில் கலந்துகொள்ள ஒப்புதல் கேட்டும் மின்னஞ்சல் வந்த்தும் கொஞ்சம் மிரண்டு தான் போனேன். சும்மாவே மெல்லுவாய்ங்க.. ஈரோடு ஆட்கள் பக்கோடா கொடுக்கப்பாக்குறாய்ங்களேன்னு தான் முதலில் தோணிச்சு. நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன், எதுக்கும் கொஞ்சம் யோசிக்க அவகாசம் வேணும்னு கேட்டு கதிருக்கு பதில் அனுப்பினேன். அவரோ 24மணி நேரம் கெடு கொடுத்தார். வலை உலகின் மூலம் அறிமுகமாகி, உடன் பிறந்த அண்ணன் போலாகிவிட்ட, மா.சிவக்குமாரிடம்…

  • பஸ்ஸு தொல்லைகள்

    வயது வந்தோர்க்கான எழுத்துக்கள் கோவைக்கு போய் இருந்த போது நண்பரின் வீட்டில் தான் தங்கி இருந்தேன். பகல் முழுக்க வீட்டிலேயே கிடந்தாலும்,இணையம், கணினி என வசதிகள் இருந்த போதிலும் வலைப்பதிவுகளின் பக்கம் வருவதற்கு எனக்கு துணிவு இல்லை. அப்படியே ரீடர் வழி பதிவுகளை படிக்கலாம் என்றாலும் அதற்கும் ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. நண்பரின் வீட்டினர் எவராவது எனக்கு பின்னால் வந்து நின்று நான் படிக்கும் வலைப்பதிவுகளில் (புதிய நண்பர்கள் பலரின் வலைப்பதிவுகளும் இப்படி இருப்பது வேதனை)…

  • கென்னுக்கும், சாந்தாமணிக்கும் டும் டும் டும்

    வெகு நாட்களாக டபாய்த்துக் கொண்டிருந்த சாந்தாமணியை கிட்னாப் செய்து வந்து இன்று கென் தலையில் கட்டியாகிவிட்டது. ஸ்ஸப்ப்ப்ப்ப்….பா… இனியாவது அவனின் புலம்பல்கள் குறையுமென்று நம்புகிறேன். இனி விழும் அடிகளெல்லாம் வெறும் உள்காயங்களையே தரும் என்பதாலும், கென்னும் ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் என்பதாலும் வெளிப்படையாக புலம்பும், கெட்ட வார்த்தைகளால் அர்ச்சிக்கும் அவனது உரிமை இன்று முதல் ரத்து செய்யப் படுகிறது. இனிமேல் சுந்தரும், ஆசிப்பும் பப்ளிக்கா கென்கிட்ட ஐ லவ் யூ சொல்ல முடியாது… சொல்லிட்டு தப்பிக்கவும் முடியாது…. 🙂…

  • சாதனை: தன்னம்பிக்கையும், தமிழும் தந்த வெற்றி! (ஒரு பதிவரின் வெற்றிக் கதை)

    தன்னம்பிக்கையும், லட்சிய வேட்கையும் கொண்ட எவரொருவரையும் வறுமையும், சூழ்நிலையும் அடிமையாக்கி வெற்றிகண்டிட இயலாது என்பதற்கு கார்த்திக் ஒரு உதாரணம். யார் அந்தக் கார்த்திக்? ஐ.ஏ.எஸ். தேர்வில் 4 முறை நேர்முகத் தேர்வுக்குச் சென்று தோல்வியே மிஞ்சிய நிலையில் தொடர்ந்து உறுதியுடன் போராடி, தனது கடைசி வாய்ப்பில் (7-வது வாய்ப்பு) வெற்றி பெற்ற கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞர்தான் கார்த்திக். தமிழைப் பேசுவதும், படிப்பதும் இழிவு என்று எண்ணும் இக்காலத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழை விருப்பப்பாடமாக எடுத்துப் படித்து வெற்றிக்…

  • சிந்தனைக்கு இரு படங்கள்..

    1. இது குமுதம் பாலா-வரைந்த கார்ட்டூன்.. இதனை பார்க்கும் போது செந்தழல்ரவி-யின் பதிவுக்கும் நினைவுக்கு வருகிறது… 🙂 அதையும் பாருங்க! — 2. ஒரு கவுஜர், கவிமட நிறுவனர், வலை உலகில் நல்லா இருங்கடே-க்கு சொந்தக்காரர். கரப்பான்பூச்சி விருது கமிட்டி தலைவர்&நிறுவனர் இப்படி பல்வேறு சாதனைகளைத் தொடர்ந்துகொண்டிருக்கும்.. நம்ம அண்ணாச்சியை ஒரு குறுகிய சதுரத்துக்குள் சிக்க வைக்க நினைக்கும் சன் டிவி-யின் செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். 🙂 அப்ப.. நீங்க..! (அண்ணாச்சி முன்னாள் எழுத்தாளர் தானேன்னு…