Category Archives: வாழ்த்து

புதுவருட நல்வாழ்த்துகள் 2013

பதிவுகளில் எப்போதுமே கொசுவர்த்தி சுத்துவதுதான் வேலை என்பதால்.. டிசம்பர் 31ம் தேதியோ, ஜனவரி 1ம் தேதியோ திரும்பிப் பார்க்கிறேன்; சைடுல பார்க்கிறேன்; ஓரமாக பார்க்கிறேன்; மேலே ஆகாயம், கீழே பூமிங்கிற ரோஞ்சுல எழுத என்னிடம் புதிதாக ஏதுமில்லை. தொடர்ந்து ஃபர்பாக்ஸ் பயனர் என்பதால் அவங்களின் போஸ்டருடன், நானும் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறேன். அத்துனைபேரும் புதுவருட நல் வாழ்த்துகள்!!

Posted in அனுபவம், வாழ்த்து | Leave a comment

நாஞ்சில் நாடனுக்கு பாராட்டுவிழா- ஓர் இனிமையான அனுபவம்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் நாஞ்சில் நாடனுக்கு சென்னையில் பாராட்டுவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ரஷ்யன் கலாச்சார மையத்தில் மாலை 6.30மணிக்கு என்று அறிவித்திருந்தார்கள். கொஞ்சம் முன்னதாகவே போய்ச்சேர்ந்தோம். நண்பர்கள் ரங்கசாமி, கே.ஆர்.அதியமான் போன்றவர்கள் எனக்கு முன்னமே வந்திருந்தனர். அப்படியே அவர்களோடு பேசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவராக வரத்தொடங்கினார்கள். விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தினர் எல்லோரும் வேட்டியில் வந்து அசத்தியிருந்தனர். புளியமரம் தங்கவேலுவையும் பார்த்தேன். … Continue reading

Posted in அனுபவம், தகவல்கள், புகைப்படம், வாழ்த்து | Tagged , , , , , , , , , | 3 Comments

ஜனவரி-3, சென்னையில் நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா

நாஞ்சில் நாடன் இவ்வாண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தாமதம் தான் என்றாலும் சரியான நபரை விருதுக்குழு தேர்வு செய்திருப்பது கொஞ்சம் ஆசுவாசத்தை தந்தது. சந்தேகமில்லாமல் எதிர்வரும் புத்தகக்கண்காட்சியில் இம்முறை நாஞ்சில் நாடனின் நூல்கள் அதிகம் விற்பனையாகும். ’டாப் செல்லர்’ அண்ணாச்சி தான் . ஒரு வாசகனாகவும், முன்னாள் புத்தக விற்பனையாளனகவும் நான் பார்த்த … Continue reading

Posted in அனுபவம், தகவல்கள், வாழ்த்து, விளம்பரம் | Tagged , , , , , | 5 Comments