
மரப்பாச்சி சொன்ன ரகசியம் – நான் எழுதிய சிறுவர் நாவல். 2018ஆம் ஆண்டு வெளியானது.
குழந்தைகளின் மீது நிகழ்த்தபப்டும் பாலியல் அத்துமீறலை எதிர்த்து குரல்கொடுக்க, பிள்ளைகளை ஊக்கப்படுத்தும் கதைக்களம்.
பள்ளி விடுமுறையில் பாட்டி வீட்டுக்குச் செல்லும் ஷாலினி என்னும் சிறுமிக்கு ஒரு மரப்பாச்சி பொம்மை கிடைக்கிறது. அந்த பொம்மை உயிர்பெற்று ஷாலினியோடு பேசுகிறது. அவளின் தோழி பூஜாவுக்கு ஒரு பிரச்னை வரும்போது மரப்பாச்சி பொம்மை அதிலிருந்து விடுபட வழிகாட்டுகிறது.
ஓவியர் ராஜனின் அழகான ஓவியங்கள் கதை வாசிப்பை மேலும் சுவாரஸ்யப்படுத்தின. வானம் பதிப்பகம் அழகுற அச்சிட்டிருந்தது.
பரவலான கவனத்தைப் பெற்ற இந்நூலுக்கு ஏற்கெனவே சிறந்த சிறுவர் நாவலுக்கான விருதை வாசகர் வட்டம் அமைப்பும், ஆனந்தவிகடனும் விருதுகளை வழங்கி கௌரவித்தன.
தற்போது, மத்திய அரசின் சாகித்ய அகாடமி வழங்கும் 2020ஆம் ஆண்டுக்கான பாலசாகித்ய புரஸ்கார் விருதையும் மரப்பாச்சி பெற்றிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன். சாகித்திய அகாடமிக்கும் தேர்வுக்குழுவுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விருது பெற்றமைக்கு தமிழக முதல்வர் டிவிட்டர் மூலம் வாழ்த்துக்களைப் பகிர்ந்திருந்தார். உள்ளபடியே எதிர்பார்க்காத மகிழ்ச்சி அது!
இன்று காலை (13.11.2021) ஹாலோ FM வில் உங்கள் நிகழ்ச்சியை கேட்டேன் 👌
👍மிகவும் சிறப்பாக & பயன் உள்ளதாக இருந்தது 👌
வாழ்த்துக்கள் 👍