Category Archives: கட்டுரை

புரிந்துகொள்ளுங்கள் மக்களே!

நம்மில் பலரும் உடலியக்கம் அளவில் மகிழ்ச்சியான வாழ்வே வாழ்கின்றோம். அதனால் தான் பிறர் வலியை உணர்வதே இல்லை. ஆம்! மாற்றுத்திறனாளிகள் என்ற சமூகத்தில் வலியும் கனவுகளைப் பற்றியும் அறியாதவர்களாகவும் அதுபற்றிய பிரக்ஞை கூட இல்லாதவர்களாகவுமே உள்ளோம். பல இடங்களிலும் எல்லோரையும் உள்ளடக்கிய சூழல் உருவாக வேண்டும் என்பதைப் போலவே சில இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தனிப்பட்ட … Continue reading

Posted in அனுபவம், எதிர் வினை, கட்டுரை, சமூகம்/ சலிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

நாற்றங்காலை வலுப்படுத்துவோம்!

நாற்றங்காலை வலுப்படுத்துவோம்! -யெஸ்.பாலபாரதி தமிழ் இலக்கிய உலகில் பல குழுக்கள் உண்டு. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவர், ஆசான் எல்லாமும் உண்டு.  அவர்களில் பலரும் ஒரே குரலில் சொல்லுவது, ’தமிழனுக்கு இலக்கியம் படிக்கிற வழக்கமே இல்லை. தமிழ்நாட்டில் இலக்கிய புத்தகமே விற்க முடியாது. அல்லது இலக்கிய புத்தகங்கள் விற்பனையே ஆக மாட்டேங்குது. எங்கள மதிக்கவே மாட்டேங்கிறாங்க’ … Continue reading

Posted in கட்டுரை, சிறுவர் இலக்கியம் | Tagged , , , , , , | 1 Comment

சிறார் இலக்கியம் செழிக்க முற்போக்காளர்களின் பங்கு!

என்னுடைய பால்யத்தை வண்ணமிக்கதாக மாற்றியவர்கள் அப்போதைய சிறார் எழுத்தாளர்கள்தான். திக்குவாய் குறைபாடும், கற்றல்குறைபாடும் சேர்ந்து இருந்த ஒரு மாணவன் நான். இக்குறைபாடுகளினால் பிறரின் கேலிக்கும் கிண்டலுக்கும் எப்படி எல்லாம் ஆட்பட்டுப் போயிருப்பேன் என்பதை இதனை வாசிப்பவரின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். பிறரின் கேலிக்கு ஆட்படும்போதெல்லாம் உள்ளுக்குள் உடைந்து அழுவேன். இதன் காரணமாகவே தனித்து இருக்கத் தொடங்கினேன். அந்த … Continue reading

Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சிறுவர் இலக்கியம் | Tagged , , , , , , , | Leave a comment

முதல்வரின் வாழ்த்தும் எனது கோரிக்கையும்

மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூலுக்கு சிறார் இலக்கியத்தின் உயரிய விருதான சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்காருக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து (28.09.2021) வாழ்த்தும் பாராட்டும் பெற்றேன். முதல்வரை சந்திக்கும் வாய்ப்பில், தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மாற்றுத்திறன் குழந்தைகளின் மேம்பாட்டிற்கு அரசு சில முன்னெடுப்புகளை செய்தால் நன்றாக இருக்கும் என … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், அரசியல், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சிறுவர் இலக்கியம், தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு | Tagged , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூலுக்கு -பாலசாகித்ய புரஸ்கார்

மரப்பாச்சி சொன்ன ரகசியம் – நான் எழுதிய சிறுவர் நாவல். 2018ஆம் ஆண்டு வெளியானது. குழந்தைகளின் மீது நிகழ்த்தபப்டும் பாலியல் அத்துமீறலை எதிர்த்து குரல்கொடுக்க, பிள்ளைகளை ஊக்கப்படுத்தும் கதைக்களம். பள்ளி விடுமுறையில் பாட்டி வீட்டுக்குச் செல்லும் ஷாலினி என்னும் சிறுமிக்கு ஒரு மரப்பாச்சி பொம்மை கிடைக்கிறது. அந்த பொம்மை உயிர்பெற்று ஷாலினியோடு பேசுகிறது. அவளின் தோழி … Continue reading

Posted in கட்டுரை, சிறுவர் இலக்கியம், வாசிப்பனுபவம், புத்தகங்கள், வாழ்த்து, விடுபட்டவை | Tagged , , , , , | 1 Comment