Tag Archives: சிறார் இலக்கியம்

அபூவின் செல்லக்குட்டி – புதிய சிறார்நாவல்

Posted in சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை | Tagged , , , | Leave a comment

அப்துல்லாவின் கிளிகள் – சிறுவர் கதை

“எங்கே இருந்து கிடைச்சுச்சுடா…?” என்று கேட்டான் தமிழ்ச்செல்வன். இடம் : தந்தை பெரியார் மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானம். “நாங்க குடி இருக்கிற வீட்டு மாடியிலடா…!” என்று கூறும்போதே அப்துல்லாவின் குரலில் ஒரு பெருமிதம் தெரிந்தது. “எப்படிடா கிடைச்சது..?” “மாடியில காயப்போட்ட துணிகளை எடுத்து வந்துடுன்னு சொல்லிவிட்டு, எங்க அம்மா வீட்டு வேலைக்குப் போயிட்டாங்க. நானும் … Continue reading

Posted in சிறுகதை, சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை | Tagged , , , , , , | Leave a comment

மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார் நாவல் -13]

அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா என எல்லோரும் சமாதானம் சொல்லிப் பார்த்துவிட்டனர். ஆனால் ஷாலுவால் மரப்பாச்சி கை நழுவிப் போனதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தங்கும் விடுதிக்கு வந்த பின்னும் அழுது அழுது முகமெல்லாம் வீங்கி இருந்தது. யாரோடும் பேசாமல் கட்டிலின் ஓரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். “இதோ பார் ஷாலு… இப்படியே மூஞ்சியைத் தூக்கி வச்சுகிட்டு உட்கார்றதுல … Continue reading

Posted in சிறுவர் இலக்கியம், மரப்பாச்சி சொன்ன ரகசியம் | Tagged , , , , , , | 1 Comment

மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார் நாவல் -12]

காரில் இருந்து இறங்கியதும் சுற்றிலும் பார்த்தாள் ஷாலு. அந்த இடம் மலையில் இருந்தாலும் சமதளமாக இருந்தது. மைதானம் போன்ற அந்த இடத்தின் முடிவில் மலையின் சரிவு தொடங்கியது. அதனால் அங்கே சில மைல்கல் நட்டு, மஞ்சள் வண்ணம் பூசி இருந்தனர். அங்கே இவர்களைப்போலவே பாராகிளைடிங்கில் பறக்க பத்துக்கும் மேற்பட்டவர்கள் நின்றிருந்தனர். அவர்களின் குடும்பத்தினர் தங்கள் வந்த … Continue reading

Posted in சிறுவர் இலக்கியம், மரப்பாச்சி சொன்ன ரகசியம் | Tagged , , , , , , | Leave a comment

மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார் நாவல் -11]

மறுநாள். பொழுது புலர்ந்து சூரியன் சோம்பல் முறிக்கும் முன் பெரியவர்கள் எல்லோரும் தயாராகிவிட்டார்கள். ஷாலு, ஹரி, சூர்யா மூவரையும் தூக்கத்திலேயே காரில் ஏற்றி விட்டனர். செல்வம்தான் காரை ஓட்டினார். நகரைக் கடந்து கார் நெடுஞ்சாலையில் ஓடத்தொடங்கியது. ஹெட்லைட் போட்டுக்கொண்டு அந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் சீறிப் பாய்ந்துகொண்டிருந்தன. சாலைக்கு அந்தப்பக்கம் வரும் வாகனங்களின் ஹெட்லைட் வெளிச்சம் கண்ணைப் … Continue reading

Posted in சிறுவர் இலக்கியம், மரப்பாச்சி சொன்ன ரகசியம் | Tagged , , , , , | Leave a comment