வலைப்பதிவரோடு BAR-க்கு போறீங்களா.. ஒரு நிமிசம்..!

டிஸ்கி:- இந்த பதிவில் வரும் வார்த்தைகள் எதுவும், தனி நபரையோ, குழுவையோ அல்லது எவரையும் யாரையும் குறிப்பிடுபவன அல்ல. இவை அனைத்தும் நிகழக்கூடிய சாத்தியங்கள் இருப்பதால்.. கற்பனையாக எழுதப்பட்டவைகளே.. உஷாரா இருக்க வேண்டியது அவரவர் பொறுப்பு!

Image and video hosting by TinyPic

1. தண்ணியடிக்க பதிவர் யாரவது வலிய வந்து கூப்பிட்டால்.. அதுவும் தொடர்ந்து சில நாட்கள் வற்புறுத்தினால் கொஞ்சம் யோசிப்பது நல்லது.

2. வலிய வந்து அழைப்பவருடன் பாருக்கு செல்வது என்பது தவிர்க்கவே முடியாது என்றால்.. தலையில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு போகவும். தண்ணியடிக்கும் போது கூட ஹெல்மெட்டை கழட்ட வேண்டாம். ஸ்ட்ரா(straw) போட்டு குடிக்கவும்.

3. பால்யகாலத்து நண்பர் அல்லாதவர்களுடன் தண்ணியடிக்கப் போகும் போது உங்களின் ரத்த உறவுகளை உடன் அழைத்துச்செல்வது நல்லது. அதிலும் கூட மனைவின் தம்பி, அண்ணன் மாதிரியான உறவுகள் இன்னும் பாதுகாப்பானது. (தங்கள் சகோதரிகள் விதவையாவதை எந்த சகோதரனும் விரும்புவதில்லை)

4. தண்ணியடிக்கப் போகும் பார் அருகில் மருத்துவமணைகள் இருப்பது மாதிரியான இடங்களை தேர்வு செய்வது மிகவும் நல்லது.

5. போதையில் இருக்கும் போது, தோள் தட்டி யார் கூப்பிட்டாலும் உடனடியாக திரும்பி விடாமல்.. இரண்டு அடிகள் முன்னே சென்றபின் திரும்பிப்பார்ப்பது மூக்குக்கு நல்லது.

6. உங்களுக்கு எதிரில் இருப்பவர் எத்தனை ரவுண்ட் அடிக்கிறாரோ.. அதே அளவுடன் நீங்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒரு மூடி கூட அதிகப்படியாக குடித்து விடாமல் இருப்பதே தேக ஆரோக்கித்திற்கு நல்லது.

7. சின்ன பேனா-கத்தி போன்ற சாதனங்களை நீங்கள் உங்களுடன் எடுத்துப் போவது தற்காப்புக்கு உதவும்.

8. பெயர் குறிப்பிடாமல் நீங்கள் தாக்கப்பட்டதாக ஒரு புகார் மனு எழுதி, பாக்கெட்டில் வைத்திருக்கவும். தேவைப்படும் சமயத்தில் உடனடியாக பெயரை மட்டும் எழுதி, அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகாரை பதிவு செய்துவிடுவது.. இன்னும் சிறந்தது.

Image and video hosting by TinyPic

இப்போதைக்கு தோன்றியவை இது தான். மேலும் சில டிப்ஸ்களோடு தம்பி குசும்பன் களத்தில் குதிக்கவேணுமாய் வேண்டி, விரும்பி கேட்டுக்கொள்கிறேன். (மற்றவர்களும் எழுதலாம்)

This entry was posted in அனுபவம், பதிவர் சதுரம் ;-)) and tagged , . Bookmark the permalink.

17 Responses to வலைப்பதிவரோடு BAR-க்கு போறீங்களா.. ஒரு நிமிசம்..!

 1. தல என்னாச்சு..

  எனிதிங்க ஹேப்பண்ட்???…

 2. வரைபட சித்திரங்கள் அருமை.. மற்றபடி நிகழ்வை நகைச்சுவையாகப் பார்ப்பதில் எனக்கு அவ்வளவு ஏற்புடையதாகத் தெரியவில்லை!

 3. தமிபி சென்ஷி.. இதன் உள்குத்து புரியாட்டி.. என் எழுத்தில் தவறு. மன்னிக்கனும்.

  மற்றபடி.. நான் யாரையும் கிண்டலடிக்கவில்லை.

 4. சாரி தல.. வெளிப்படையா வரைபடச் சித்திரத்துல ஒ(ரே)ரு ஆள் நிறைய்ய பேர அடிக்குற மாதிரி இருந்ததைப் பார்த்ததும் இதுல உள்குத்து ஏதும் இல்லை போலன்னு நினைச்சுக்கிட்டேன் 🙂

 5. kuppan_yahoo says:

  please done make comedy or fame out of that Jyovraam sundar and Rosaa vansath isue.

  Let us forget that bad incident.

 6. //உங்களுக்கு எதிரில் இருப்பவர் எத்தனை ரவுண்ட் அடிக்கிறாரோ.. அதே அளவுடன் நீங்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒரு மூடி கூட அதிகப்படியாக குடித்து விடாமல் இருப்பதே தேக ஆரோக்கித்திற்கு நல்லது//

  எதிரில் இருப்பவரை விட குறைவாக அட்ட்ப்பது சிறந்தது.

 7. குசும்பன் says:

  அண்ணே நேற்று விசயத்தை கேட்டதில் இருந்து கொஞ்சம் பதட்டமாக இருந்தது! இதை வெச்சு காமெடி செய்ய மனசு வரமாட்டேங்குது.

  பி.ந வாதிகள் தண்ணி அடிக்கும் பொழுது கூட உட்காந்து பராக்கு பார்க்கும் நமக்கு காதில் இருந்து வரும் இரத்தத்துக்கும், அவர்கள் பதிவை படிக்கும் பொழுது கண்ணில் இருந்து வரும் இரத்தத்துக்கும் எப்படி அண்ணா பழிவாங்குவது?

 8. குசும்பன் says:

  விரைவில் ஊருக்கு வருவதால் இதுபோல் பதிவு எழுதி என் அங்கத்துக்கு பங்கம் வர விரும்பவில்லை:)

  ஏற்கனவே நாம ரொம்ப அழகு, இதுல மூக்கும் சைனா காரன் மாதிரின்னா அவ்வ்வ் நினைச்சு பார்த்தா உங்களை விட டெரர் எபக்ட் வரும்:)

 9. அத்திரி says:

  )))))))))……….(((((((((((

 10. குப்பன்,
  வலை உலகின் இது போன்ற தரம் தாழ்ந்த போக்குகள் எனக்கும் மிகுந்த அயர்ச்சியைத் தருகின்றன.

  யாரையும் காயப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல இப்பதிவு. மனதை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளவே இதனை எழுதி இருக்கிறேன்.

 11. //ஏற்கனவே நாம ரொம்ப அழகு, இதுல மூக்கும் சைனா காரன் மாதிரின்னா அவ்வ்வ் நினைச்சு பார்த்தா உங்களை விட டெரர் எபக்ட் வரும் :)//

  கிர்ர்ர்ர்ர்ர்

 12. //ஜே கே | !J K says:
  October 10, 2009 at 7:53 pm
  தல என்னாச்சு..

  எனிதிங்க ஹேப்பண்ட்???…
  //

  காந்தி செத்துட்டார்

  அதுக்கு முன்னால் ராஜராஜசோழன் செத்துட்டார்

 13. //காந்தி செத்துட்டார்

  அதுக்கு முன்னால் ராஜராஜசோழன் செத்துட்டார்//

  ஆனாலும் டாக்டர் சார் குசும்பு ஜாஸ்தி ஒங்களுக்கு.. ! 🙂

 14. இவ்வளோ விசயம் இருக்கா …

  எனது பதிவு

 15. மனசாட்சி says:

  சிவப்பா சண்டை போடுகிறாரே அவருதான் ரோசாவா..?

 16. பீர் says:

  இத்தகைய பதிவு வரும் என்று எதிர்பார்த்தேன்.. ஆனால் உங்களிடமிருந்தல்ல… 🙁

 17. kanagu says:

  இந்த பதிவு உண்மையை புரிய வைத்து இருக்கிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.