சொற்களற்ற சூன்யவெளியில்..

ஒருபோதும் சோர்ந்து போனதில்லை
மனிதர்களிடம் பேசும் பொழுதுகளில்

சோகங்கள்
துரோகங்கள்
வருத்தம்
மகிழ்ச்சி
என எதுபற்றியேனும்
பேசிக்கொள்ள நேர்ந்திருக்கிறது
பல சமயங்களில்

முன் சிரித்து
பின் கூறு போடுபவர்கள்
இருக்கின்ற போதிலும்
இவர்களை ஒதுக்கிவிட
தோன்றியதில்லை

பூனை,நாய்,கிளி
ஏன் கடவுள்களே கூட
பதில் பேசாமலிருக்கையில்
ஏதாவது பேசும்
மனிதர்களை புறந்தள்ள முடிவதில்லை.


Comments

7 responses to “சொற்களற்ற சூன்யவெளியில்..”

  1. அண்ணாத்தே!

    உங்க பின்நவீனத்துவ பெருங்கடலில் தொபுக்கடீர்னு எகிறிக்குதிச்சி மூச்சி முட்டுது. சொறா நீச்சல், பொறா நீச்சல்னு எல்லாத்தையும் அடிச்சிப் பாத்துட்டேன். மேலே வரும் வழி தெரியலே. தயவுசெஞ்சி காப்பாத்துங்க :-(((((((((

  2. அப்பா.. சுடுது சாமியோவ்..

  3. //உங்க பின்நவீனத்துவ பெருங்கடலில் //

    லக்கி.. ஏனிந்த கொலவெறி! நீயாக ஏதாவது சொல்லப் போய்.. அதுக்குன்னு இருக்குற ஆளுங்க வந்து என்னைய சாத்தவா..? 🙁

  4. தேடி சோறு நிதம் தின்று சின்னஞ் சிறு கதைகள் பேசி,

    வாடி துன்பம் மிக உழன்று,பிறர் வாட பல செயல்கள் செய்து,

    கொடுங்கூற்றுக்கு இரையின பின் மாயும் சில வேடிக்கை மனிதர்களினை விட

    பேசாத பூனையும்,நாயும்,கிளியும்
    கேட்காத(பேசாததுமான) கடவுளும்
    எவ்வளவோ மேல் என்பேன்.

    பின்குறிப்பு:
    ஆமா, கடந்த பதிவர் சந்திப்பு நடந்த அன்றிரவு எழுதப்பட்ட கவிதை(!!??)யா இது???

  5. <![CDATA[வெற்றி]]> Avatar

    /* சோகங்கள்
    துரோகங்கள்
    வருத்தம்
    மகிழ்ச்சி
    என எதுபற்றியேனும்
    பேசிக்கொள்ள நேர்ந்திருக்கிறது
    பல சமயங்களில் */

    பாலாபாரதி,
    நல்ல கவிதை.

  6. போதி மரத்தடி புத்தன் கூட எழுந்து வந்து மக்களிடையே பேசிக் கொண்டிருந்தார். நாமெல்லாம் எந்த மூலைக்கு 🙂

    புத்தர் பாலபாரதிக்கு ஒ!

    அன்புடன்,

    மா சிவகுமார்

  7. மனதிற்கு ஆறுதல் சொல்லும் வரிகளாய் இருந்தது இந்த கவிதை. விடுபட்டவைகளை புறந்தள்ளி பாஸுட்டிவ்களை அடுக்கி கொள்வதே சிறப்பு. ஒரு பத்து நிமிஷத்திற்காகவது தாங்கும் இந்த முனைப்பு. எதாவது நல்ல டீவி விளம்பரம் பார்க்கும் வரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *