Category Archives: கவிதை

ஆட்டிசம்: சில புரிதல்கள்- நூல் வெளியீடு அழைப்பிதழ்

எங்கள் பையனின் வளர்ச்சி எல்லாம் சரியாகத்தான் இருந்ததாக நாங்கள் நம்பிகொண்டிருந்தோம். ஒன்னரை வயதில் மருத்துவரும், ஓர் ஆட்டிசக்குழந்தையின் தகப்பனாகிய நண்பர் ஒருவரும் தான் கனி கண்ணோடு கண் பார்க்கவில்லை அதனால் ஆட்டிசக் குறைபாடு இருக்கலாம் என்று சந்தேகத்தைச் சொன்னார்கள். தொடக்கத்தில் நாங்கள் நம்பவில்லை. அதற்கு காரணமுமிருந்தது. பொதுவாக ஆட்டிசக் குழந்தைகள் யாரையுமே கண்ணோடு கண் காண்பதில்லை. … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், அப்பா, ஆட்டிசம், ஆட்டிஸம், கவிதை, குழந்தை வளர்ப்பு, மதியிறுக்கம் | Tagged , , , , , , , , , , , , , , | 7 Comments

ஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-2

”இப்படி சமநிலை குலைகையில் நான் மிகவும் வினோதமாக நடந்து கொள்கிறேன். ஒரே நேரத்தில் 40 தொலைகாட்சி அலைவரிசைகளை ஒருசேரப் பார்த்தால் எப்படியிருக்குமோ அது போல் குழப்பமாகவும், அசௌகரியமாகவும் உணர்கிறேன்”  – சென்சரி ஓவர் லோட் எனும் நிலையைப் பற்றிய ஒரு ஆட்டிச பாதிப்புடையவரின் வாக்குமூலம் இது. நம்மைப் போல சராசரி வாழ்கை வாழும் மனிதர்களுக்கு இந்நிலையைக் … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அஞ்சலி, ஆட்டிசம், ஆட்டிஸம், கவிதை, குழந்தை வளர்ப்பு, தகவல்கள் | Tagged , , , , , | 2 Comments

தகப்பனாய் உணர்தலும் சுகமே!

— உறக்கத்தில் கடிகார முட்கள் போல கட்டிலில் சுற்றி வந்தாலும் பசியெடுக்கும் நடுசாமத்தில் சரியாக அவன் அம்மாவை அடையாளம் கண்டு எழுப்பி விடுகிறான் பசியை உணர்ந்தவள் தாய் தான் என எப்படித்தான் உணர்ந்துகொள்கின்றனவோ குழந்தைகள் — இன்னுமா உன் மகன் பேசவில்லை என்ற சுற்றத்தாரின் கேள்விக்கு பயந்து உயிரற்றவைகளையும், உயிருள்ளவைகளின் பெயர்களையும் சொல்லிக்கொடுக்கிறேன் தினம் அவனுக்கு. … Continue reading

Posted in கவிதை | Tagged , , , | 7 Comments

கவிதைகள்..

பார்வைகள் கத்தியின் பிடிகளை ஆராய்கிறாய் நீ அது பட்டுப்போய் வந்திருக்குமா பச்சையாய் வந்திருக்குமாவென யோசிக்கிறதென் மனம். ~~~~ இருப்பு மடக்கிய குடையுடன் பேசியபடியடைந்தோம் மரத்தடியை மழை இப்போது தூறலாய். ~~~ அடையாளம் தூசுகளால் நிறைந்த கண்ணாடி கதவில் பெயரெழுதிச் செல்கிறது கோடைச்சாரல். ~~~ இலக்கு உனக்கும் எனக்குமான பாதை ஒன்றுதான் ஆனால் எதிரெதிர் திசைகளில் போய்க்கொண்டிருக்கிறோம் … Continue reading

Posted in கவிதை | Tagged , , | 3 Comments

கல்யாணியக்கா

கல்யாணியக்காவின் பதினாறாம் வயதில் என்னை பெற்றெடுத்தாள் அம்மா. பாலூட்டி, குளிப்பாட்டி, சீராட்டி என்னை வளர்த்ததெல்லாம் கல்யாணியக்காதான். விபரம் தெரிந்த நாளிலிருந்தே அப்பா வேலைக்கு போய் பார்த்ததில்லை. அண்ணனும் வீட்டுக்கென பணம் செலவழித்ததில்லை. அதனால் எப்போதும் முணுமுணுப்புகள் அதிகமாகவே இருக்கும் வீட்டில். சம்பள நாளான மாதத்தின் ஏழாம் தேதி அன்று மாத்திரம் அமைதியாக அவளின் வருகையை ஏதிர் … Continue reading

Posted in கவிதை, புனைவு | Tagged , | 3 Comments