Category: புனைவு

  • துலக்கம் – மறுபதிப்பு

    2014ஆம் ஆண்டு விகடன் பதிப்பகத்தின் வழியாக வெளியானது துலக்கம் நாவல். அமெரிக்காவில் காணாமல் போன ஆட்டிச நிலையாளச் சிறுவன் ஒருவனை மூன்று நாட்களுக்குப்பின் வசிப்பிடத்திலிருந்து 64 கிலோமீட்டர் தூரத்தில் கண்டுபிடித்ததாகவும்; அப்படிக் கண்டுபிடிக்க அவர்கள் அடைந்த சிரமத்தையும் விவரித்தது செய்தி.மற்ற நாடுகளை விடக் கொஞ்சம் புரிதல் உள்ள அமெரிக்கா மாதிரி மேலைநாடுகளிலேயே ஆட்டிச நிலையாளச் சிறுவர்கள் காணாமல் போவதும், அவர்களைக் கண்டுபிடிக்க அந்தக் காவல்துறை திணறுவதுமான பல செய்திகள் காணக் கிடைத்தது. போதிய விழிப்புணர்வு இல்லாத நம்…

  • பூமிக்கு அடியில் ஒரு மர்மம் – சிறார் நாவலுக்கான முன்னுரை.

    புதியகதையுடன் உங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி! இக்கதையின் களம் நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் நடைபெறுகிறது. சிலஇடங்கள் நிஜத்தில் உள்ளவை. மற்றவை வழக்கம்போலக் கற்பனையானவை. இதுவொரு சாகச, த்ரில்லர், சஸ்பென்ஸ் வகைக்கதை. எனது முந்தைய கதைகளைப் போலவே இதுவும் பதின்பருவத்தினருக்கான கதைதான். இதில்சில நண்பர்கள் சேர்ந்து, ஒரு சுரங்கத்தைக் கண்டறிகின்றனர். அதன் உள்ளே இருப்பதை அறியவும் சுரங்கத்தின் இன்னொரு வாசலைத்தேடியும் அவர்கள்அதற்குள் நுழைகின்றனர். அங்கே அவர்களுக்கு என்ன நேர்கிறது? அங்கே எதையெல்லாம் பார்க்கிறார்கள் என்பதைப் படித்து…

  • மந்திரச் சந்திப்பு- 6

    காகிதப் பாப்பா சொன்னபடியே, சூர்யாவும் ஷாலுவும் மொட்டைமாடிக்கு வந்துவிட்டனர். மயிலும் குமாரும் வெட்டவெளியில் நின்றனர். மயிலுக்கு ஓர் அடி இடைவெளியில் தரையில் பரப்பப்பட்டிருந்தது காகிதப்பாப்பா. ஆள் நடமாட்டம் இல்லாத அரண்மனையின் உடற்பயிற்சி மைதானத்தில் நின்று கொண்டிருந்தான் சுந்தரன். மெதுவாக காற்று வீசத்தொடங்கியது. தரையில் விரித்துவைக்கப்பட்டிருந்த காகிதப் பாப்பா, இங்குமங்கும் காற்றில் ஆடியது. மெல்ல மெல்ல,, அப்படியே மேலே எழுந்து பறக்கத்தொடங்கியது. அது பறப்பதையே எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இப்போது காற்று சற்றே பலமாக வீசியதுபோல இருந்தது. எல்லோரின்…

  • நல்ல சூழல் என்பது நாம் நம் குழந்தைகளுக்குத் தரும் நல்ல சிந்தனைகளே! -ஆர்.எம். கெளரி (ஓய்வு பெற்ற ஆசிரியர்)

    (ஆமை காட்டிய அற்புத உலகம்- நூல் குறித்து, தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கும் ஆசிரியர் அம்மா கௌரி அவர்களுக்கு நன்றி) ================ ஒரு தாய் தன் குழந்தைகளுக்குக் கதை சொல்லி மகிழ்விப்பாள். ஆனால் எனக்கு என் பிள்ளைகள் கதை சொல்லி அதை நான் கேட்கும் வாய்ப்புக் கிடைத்துவிட்டது. என் பிள்ளை போன்ற யெஸ்.பாலபாரதியின் சிறார் நாவல் “ஆமை காட்டிய அற்புத உலகம்” படிக்கும் போது நானும் ஒரு குழந்தையாகவே உணர்ந்தேன். பாலா – பொதுவுடைமைவாதி. தன் சிந்தனையைப் படைப்பில் கொண்டுவரும்…

  • தானே தெளியும்!

      எப்போதும் பிஸியாக இருக்கும் பெரிய தொழிலதிபர் ராமு, மிகவும் பிரபலமான அந்த மருத்துவரைப் பார்க்கக் காத்திருந்தார். இவரது முறை வந்தது. கல்லூரியில் சேர்த்துள்ள தனது மகன் எப்போதும் விளையாட்டில் கவனம் செலுத்துவதாகவும், தனக்குப் பிறகு தனது தொழிலை அவன் கவனித்துக்கொள்வான் என்ற நம்பிக்கை அற்றுப்போய் விட்டதாகவும், அவனாலேயே தன் உடல் நிலையும் மன நிலையும் தனக்கு மோசமடைந்து வருவதாகவும் பெரிய புகார் பட்டியலை வாசித்தார் ராமு. எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட மருத்துவர், மகனை அழைத்துக்கொண்டு அடுத்த வாரம்…