எச்சரிக்கை: ON LINE FRAUD

கடந்த ஆகஸ்ட் மாதம் http://www.indiavarta.com/ இணையதளத்தின் மூலம் ஒரு பொருள் வாங்க ஆடர் செய்தேன். பொருளின் விலை ரூ. 1.799.00/-. ஐசிஐசிஐ வங்கி மூலம் பணம் செலுத்தினேன். பணம் செலுத்திய சில நிமிடங்களியேயே ஏதோ எரர் காட்டி, அந்த பக்கம் வேலை செய்ய வில்லை. அதனால் இன்னொரு முறை http://www.indiavarta.com/ தளத்தில் குறிப்பிட்ட பொருளுக்கு இன்னோரு முறை பணம் செலுத்தி, ஆடரை உறுதி படுத்தினேன். (இதற்குள் முதல் தடவையே வங்கில் இருந்து பணம் எடுக்கப் படிருந்தது. )

முதல் தவை பணம் எடுக்கப்பட்டது தெரியாமல், இரண்டாவது முறையும் பணம் கட்டினேன்.

கொஞ்ச நேரத்திலேயே http://www.indiavarta.com/ தளத்தில் இருந்து, ஒரு அம்மணி போன் செய்து, எத்தனை பொருள் உங்களுக்கு வேண்டும் என்று கேட்டார். அதற்கு நான், ஒரு பொருள் தான் வேண்டும் என்று கூறி, நடந்த தகவல்களை அணைத்தையும் கூறினேன். அவரும் ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைக்கும் படி சொன்னார், இரண்டு நாட்களுக்குள் பணம் வந்துவிடும் சார் என்று சொல்லி, தொடர்பை துண்டித்து விட்டார். மின்னஞ்சலும் அன்றே அனுப்பியும் வைத்தாயிற்று.

ஒரு வாரம் கழித்து, பொருள் வந்தது. ஆனால்.. கூடுதலாக கட்டிய பணம் வரவில்லை. அடுத்த திரும்பவும் போன் செய்து விபரம் சொன்னேன். அந்த பணம் வங்கி கணக்குக்கு வந்துவிடும் என்றும், அதை சரிபார்க்கவும் சொன்னார்கள். மேலும் சில நாட்கள் ஓடியது. தினமும் காலை, மதியம், மாலை, இரவு என நேரம் கிடைக்கும் போதெல்லாம் வங்கியின் கணக்கை ஆன் லைன் மூலம் சரி பார்த்துக் கொண்டே இருந்தேன். பணம் வரவில்லை.

மீண்டும் அக்டோபர் 31ம் தேதி ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். கிணற்றில் போட்ட கல். ஒரு தகவலும் இல்லை.  சரியான பதில் இல்லாத காரணத்தினாலயே இப்பதிவு எழுத வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறேன். இத்தனைக்கும் http://www.indiavarta.com/ தளம் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தளம்.

இரண்டு முறை மின்னஞ்சல் அனுப்பியும், நான்கு முறைக்கு மேலாக போன் செய்தும் ஒரு பதிலும் இல்லாததால்.. நுகர்வோர் நீதிமன்றம் போகலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

என் அனுபவங்களை அலுவலக நண்பர் ஒருவரிடம் பகிர்ந்து கொண்ட போது,  ஆன் லைனில் இது போன்ற தில்லு முல்லுகள் அதிகமாகிவிட்டதாக சொன்னார்.

மொபைல் ரீசார்ஜர், டிடிஎச் ரீசார்ஜர், ஆன் லைன் பர்சேஸ் என எல்லா இடங்களிலும் இப்படியான கொள்ளைச்சம்பவங்கள் நடப்பதாகக் கூறினார்.

இணையம் பரவலாகி, கடைகளுக்கு நேரடியாக போகமுடியாமல் மக்கள் இருக்கும் இச்சமயங்களில் மக்களின் நுகர்வுத் தன்மையை லாபமாக்கிக் கொள்வதோடு, திருட்டுத்தனங்களிலும் ஈடுபடும் நிறுவனங்களை அரசு ஒழுங்கு படுத்த வேண்டிய சரியான தருணம் இது என்றே தோன்றுகிறது.

———–

தொடர்புடைய பதிவு

DUPLICATE CREDIT CARD- ஓர் எச்சரிக்கை!! (Exclusive Visual)

This entry was posted in அனுபவம், சமூகம்/ சலிப்பு, விளம்பரம், Flash News and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to எச்சரிக்கை: ON LINE FRAUD

  1. ராஜூ says:

    ஆயிரந்தான் இருந்தாலும், நீங்க அந்த அம்மணியை ’அணைத்து’ சொல்லிருக்க்க் கூடாத் தல!
    தப்பு.
    🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.