Category: புனைவு

  • நகரம் (சிறுகதை)

    ’எலேய்.. எந்தி நாஷ்டா வேண்டாமா?’ சத்தம் போட்டபடி உலுப்பிய அண்ணாச்சியை கண்ணைத் திறந்து பார்த்தான். கண்கள் திறக்க முடியாமல் எரிச்சலைத் தந்தது. கண்களை கசக்கி விட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான். அண்ணாச்சி குளித்து, முடித்து பளிச்சென்று இருந்தார். கடைக்குப் போகும் முன் இங்கே வந்து எட்டிப் பார்த்துவிட்டு போவது அவரது வழக்கம். அப்படி வந்தவர், தூங்கிகொண்டிருந்தவனை எழுப்பிவிட்டார். ‘இல்ல அண்ணாச்சி.. வேணாம். அப்பறம் நானே வந்து பார்க்கலாம்னு நெனைச்சேன். ஊர்ல இருந்து தோஸ்த்து ஒருத்தன் வந்திருக்கான். மலாடுல…

  • சாமியாட்டம்- சிறுகதை

    ஆடி மாதம் முழுவதும் சென்னையில் இருக்கும் எல்லா அம்மனுக்கும் பாலாபிஷேகம் நடக்கிறதோ இல்லையோ நிச்சயம் கூழாபிஷேகம் நடந்துவிடுகிறது. தெருவுக்கு தெரு இருக்கும் சின்னஞ்சிறு அம்மன் கோவிலிலும் கூழ் ஊற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மொட்டை போடுவதாக நேர்த்தி செய்வது போல, கூழ் ஊற்றுவதை நேர்த்தி செய்து ஆடிமாதத்தில் நிறைவேற்றுகிறார்கள். தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் ராமேஸ்வரம் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் தொடங்கி புரட்டாசி மாத இறுதி வரை பல்வேறு திருவிழாக்களால் களைகட்டும். அதில் மிகவும் விசேஷமானது ராமநாதசாமியின் திருக்கல்யாணமும், தபசுத்திருவிழாவும்.…

  • பேய் வீடு

    உங்களுக்கு பேய்கள் பற்றித் தெரியுமா? பேய் கதைகள் கேட்டு இருக்கிறீர்களா..? புளிய மரத்தில் தூக்கு போட்டுக் கொண்ட சின்னையன் பேய், புருசன் கொடுமை தாங்காமல் கிணற்றில் குதித்து செத்துப்போன பொன்னம்மா பேய், காதல் மறுக்கப்பட்டதால் விஷம் குடித்து மரித்துப்போன கல்யாணி பேய்.. இப்படி பெயர் தெரிந்த பேய்கள் ஒரு புறமிருக்க. மோகினிப் பேய், ரத்தக் காட்டேரி, கொள்ளிவாய்ப் பிசாசு என  விதவிதமான பேய்கள், எல்லா பேய்களுக்கும் ஒவ்வொரு வித்தியாசமான கதைகள் எதற்கும் பஞ்சம் இருந்ததில்லை  அல்லது இருப்பதில்லை…

  • நம்பிக்கை (சிறுகதை)

    பஞ்சுப் பொதிகள் போல மேகங்கள் பாண்டியின் முகத்தில் அறைந்தன. வலிக்கப்போகிறது என்று கண்களை இறுக்கிக்கொண்டான்.. வலிக்கவில்லை. மேகங்களைக் கடந்து வந்து பறந்து கொண்டிருந்தான். வரிசையாய் பறக்கும் கொக்கு கூட்டம் ஒன்று இவனைக் கடந்து சென்றது. இவனும் அவைகளை முந்த வேண்டும் என்று நினைத்து கைகளை வேகமாக அசைத்தான். ஆனாலும் அவைகளின் வேகத்திற்கு ஈடு கொடுத்துப் பறக்க முடியவில்லை. ‘ட்டண்டனக்..ட்டண்டனக்.. ட்டண்டனக்கட.. ட்டண்டனக்..’ ‘ட்டண்டனக்..ட்டண்டனக்.. ட்டண்டனக்கட.. ட்டண்டனக்..’ கொக்குகளின் வரிசையில் கடைசியாகப் பறந்துகொண்டிருந்த ஒரு கொக்கு இவனைப் பார்த்து…

  • இலக்கியவாதியாக காட்டிக் கொள்ள சில வழிகள்…

    ஆள்பாதி ஆடை மீதி க்ளோஸ் அப்ல ஒரு போட்டோ. அல்லது பேனா கொண்டு மூக்கை குத்துவது போலவோ, கண்ணத்தில் கை வைத்து மோட்டு வளையை பார்த்த மேனிக்கோ, ஒருவாரமோ, ஒரு மாசமோ மழிக்காத தாடி மீசையுடன் இருந்தால் சிறப்பு. பிரதி மட்டுமே மிச்சம். ஆசிரியன் செத்துவிட்டான்னு சொல்லிகிட்டாலும் நாளைக்கு நீங்க புத்தகம் போடும் போது கடைசி அட்டையில போட்டோ போட இதுமாதிரி புகைப்படங்கள் உதவும். பேண்ட் சட்டை எல்லாம் வேலைக்கு ஆவாது. அதனால.. நல்லதா நாலு ஜோடி…