Category: சிறுகதை

  • அப்துல்லாவின் கிளிகள் – சிறுவர் கதை

    “எங்கே இருந்து கிடைச்சுச்சுடா…?” என்று கேட்டான் தமிழ்ச்செல்வன். இடம் : தந்தை பெரியார் மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானம். “நாங்க குடி இருக்கிற வீட்டு மாடியிலடா…!” என்று கூறும்போதே அப்துல்லாவின் குரலில் ஒரு பெருமிதம் தெரிந்தது. “எப்படிடா கிடைச்சது..?” “மாடியில காயப்போட்ட துணிகளை எடுத்து வந்துடுன்னு சொல்லிவிட்டு, எங்க அம்மா வீட்டு வேலைக்குப் போயிட்டாங்க. நானும் மாடிக்குப் போனேன். அங்கே காக்கைகள் கூட்டமாக அமர்ந்து, ‘கா..கா..’ன்னு கரைஞ்சுகிட்டு இருந்துச்சு. என்னடான்னு பார்த்தேன். ரெண்டு கிளிக் குஞ்சுகளை அதுங்க…

  • சுழல் – சிறுவர் கதை (டைம்லூப் சிறுகதை)

    சுழல் வீட்டின் வாகனம் நிறுத்துமிடத்தில், அப்பாவின் இருசக்கர வாகனத்திற்கு அருகில், காகிதங்களால் பொதியப்பட்டு நிறுத்தப்பட்டிருந்ததைப் பார்த்ததுமே தெரிந்தது, அது மிதிவண்டி என்று. அதைப்பார்த்ததும் ஏற்பட்ட சந்தோஷம் சுதாகரனை திக்குமுக்காடச் செய்தது. அடுத்த வாரம் வரவுள்ள அவனது பிறந்தநாளுக்கு, வெளிநாட்டில் வசிக்கும் அவனது மாமாவின் அன்பு பரிசு அது. அவர் இணையம் வழியாக ஆர்டர் போட்டுவிட, நேரடியாக இவன் வீட்டுக்கு வந்து, மிதிவண்டியைக் கொடுத்துவிட்டது, தயாரிப்பு நிறுவனம். அதன் மீது சுற்றி இருந்த ஜிகு ஜிகு பிளாஸ்டிக் தாள்களை…

  • சட்டம்

    தங்கள் குடிசைக்கபகுதிக்கு அருகில் கட்டப்படும் கட்டுமான நிறுவனத்தில் காவலாளியாக வேலைக்குச் சேர்ந்தார் பரமசிவம். அவரது மகன் வேலன் ஏழாம்வகுப்பு படித்துவந்தான். திடீரென பரவிய தீக்கிருமியால், வேலனின் பள்ளி வாழ்க்கை முடிவுக்கு வந்தது. கொரோனா கால ஊரடங்கினால் மக்கள் பலவிதங்களில் பாதிக்கப்பட்டனர். அடுத்த சில மாதங்களில் கட்டடப்பணிக்கு அரசு அனுமதி அளித்ததும், வேலை மீண்டும் தொடங்கியது. ஆனாலும், பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால் வீட்டில் இருந்த வேலன், கட்டட வேலைகள் நடப்பதை வேடிக்கை பார்க்கப்போவான். சில நாட்கள் தன் அப்பாவுக்கு…

  • தாத்தா பயந்த கதை

    தாத்தா பயந்த கதை கோடை விடுமுறையில் கிராமத்திற்கு வந்திருந்தான் ஆதவன். அவன் தாத்தாவும், அம்மாச்சியும் மற்ற கிராம மக்கள் போலவே விவசாயம் செய்துவந்தனர். பகலில் வயலுக்குச்செல்லும்போது ஆதவனையும் உடன் அழைத்துச்செல்வர். மாலையில் வீடு திரும்பியதும், முன் வாசல் பக்கம் அமர்ந்துகொண்டு, தினம் தினம் கதை கேட்பது இவனின் வழக்கம். அம்மாச்சி ரத்தினமோ, தாத்தா மாரிமுத்துவோ இருவரில் ஒருவர் சமையல் செய்யப் போய்விடுவர். மற்றொருவர் இவனுக்கு கதை சொல்வார்கள். அன்று மாலை திடீரென மின் வெட்டு. அகல்விளக்கை ஏற்றிவைத்தார்…

  • மேன்மை இதழில் வெளியான நேர்காணல்

    சிறார்களிடம் தொடர்ந்து உரையாடுவது காலத்தின் கட்டாயம் யெஸ்.பாலபாரதி – தொடர்ச்சியாகச் சிறார் இலக்கியத்தில் இயங்கி வரும் இவர்,  ‘ஆமை காட்டிய அற்புத உலகம்’, ‘சுண்டைக்காய் இளவரசன்’, ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ மற்றும் ‘புதையல் டைரி’ ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். தனது படைப்புகளில் கதை சொல்வதோடு நின்றுவிடாமல் சிறார்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் முன்னிறுத்துவதால், தனக்கென ஒரு தனித்த அடையாளத்தைப் பெற்றுள்ளார். பெற்றோரிடையே ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘ஆட்டிசம் –…