Category Archives: அனுபவம்

பிறர் ஏற்படுத்தும் காயங்களின் வலி!

நூல்: கையறுநதிஆசிரியர்: வறீதையா கான்ஸ்தந்தின் வெளியீடு : கடல்வெளி பதிப்பகம், தொடர்புக்கு: 24332924 விலை : ரூ 220/- கையறுநதி: நாவல் மொழியில் எழுதப்பட்டிருக்கும் ஒரு தந்தையின் தன் வரலாற்று பக்கங்கள் எப்போதும் படிப்பது போல இந்த நூலையும் என்னால் ஒரே மூச்சில் படித்துமுடித்து முடியவில்லை. சில இடங்களில் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானேன். சில … Continue reading

Posted in அனுபவம், மதிப்புரைகள், வாசிப்பனுபவம், புத்தகங்கள் | Tagged , , | Leave a comment

பிறந்தநாள் வாழ்த்துகள் தோழர்

எனது முதல்நாவலான ’அவன் -அது +அவள்’ நாவலை வெளியிட முதலில் அணுகியது வயதில் முதிர்ந்த அந்த தலைவரைத்தான். அவருக்கு என்னை நேரடியாகத் தெரியாது என்றபோதும் நிகழ்வுக்கு வர ஒப்புக்கொண்டார். நான் அழைத்தபோது நாவல் அச்சகத்தில் இருந்தது. நூல் கையில் கிடைத்ததும் அதை எடுத்துக்கொண்டு அந்த தலைவரைப் பார்த்து கொடுத்துவிட்டு, நிகழ்வுத்தேதியை நினைவுபடுத்திவிட்டு வந்தேன். ரெண்டாவது நாள் … Continue reading

Posted in அனுபவம், ஆவணம், வாழ்த்து | Tagged , , , , | Leave a comment

ஆட்டிச நிலையாளர்களும் மனிதர்கள் தான்!

நேற்று மாலை ஒர் ஆட்டிசக்குழந்தையின் தாயார் போன் செய்திருந்தார். அவருடைய 17வயது மகனுடன் ஒரு ஷாப்பிங் மால் போய் இருக்கிறார். வாகனம் நிறுத்துமிடத்தில் தனது காரை பார்க்கிங் செய்துவிட்டு, பையனுடன் வெளியில் வந்துகொண்டிருக்கும் போது, ரிவர்ஸ் எடுத்த ஒரு காரில் இருந்த ஹார்ன் சத்தம் இவனை தொந்தரவு செய்துவிட்டது. சில அடிகள் தூரம் நடந்து, மாலின் … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், குழந்தை வளர்ப்பு, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு | Leave a comment

புரிந்துகொள்ளுங்கள் மக்களே!

நம்மில் பலரும் உடலியக்கம் அளவில் மகிழ்ச்சியான வாழ்வே வாழ்கின்றோம். அதனால் தான் பிறர் வலியை உணர்வதே இல்லை. ஆம்! மாற்றுத்திறனாளிகள் என்ற சமூகத்தில் வலியும் கனவுகளைப் பற்றியும் அறியாதவர்களாகவும் அதுபற்றிய பிரக்ஞை கூட இல்லாதவர்களாகவுமே உள்ளோம். பல இடங்களிலும் எல்லோரையும் உள்ளடக்கிய சூழல் உருவாக வேண்டும் என்பதைப் போலவே சில இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தனிப்பட்ட … Continue reading

Posted in அனுபவம், எதிர் வினை, கட்டுரை, சமூகம்/ சலிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

ஒடிசா பயணமும் டெங்கு காய்ச்சலும்

சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கும் விழா, நவம்பர் 14ஆம் தேதி ஒடிசாவின் புவனேஸ்வரத்தில் என்றதுமே ஒருவித உற்சாகம் தொற்றிக்கொண்டது. வரலாற்றுச்சிறப்பு மிக்க இடங்களின் சிலவற்றையாவது பார்த்துவிடவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.  நவம்பர் 13ஆம் தேதி மாலை இங்கிருந்து ஒடிசா கிளம்பும்போதே.. சற்று உடல்நலமில்லைதான். புட் பாயிசன் என்ற அளவில் மருத்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டு, … Continue reading

Posted in அனுபவம், மனிதர்கள் | Tagged , , , , , | Leave a comment