Category: மரப்பாச்சி சொன்ன ரகசியம்

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 8]

    பள்ளியில் வந்து இறங்கியதும், நேராகப் பூஜாவின் வகுப்பறைக்குச் சென்றாள் ஷாலு. அவளது இருக்கை காலியாக இருந்தது. யாரிடமும் பேசாமல் தன்னுடைய வகுப்பறையில் வந்து அமர்ந்து கொண்டாள். ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தாலும் ஷாலுவின் கவனம் அதில் பதியவே இல்லை. பூஜா அமரவேண்டிய இடம் காலியாக இருப்பதையே நினைத்துக் கொண்டிருந்தாள். முதல்நாள் பயந்த அவளது முகம் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது. அவள் இல்லாத வெற்றிடம் மனதை சங்கடப்படுத்தியது. யாரிடம் விசாரிப்பது என்றும் தெரியவில்லை. பூஜாவின் வீட்டிற்கு அருகில் இவள்…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 7]

    முதல் மாடியில் இருந்து பார்ப்பது போல் இல்லாமல், பலமாடி கட்டடத்தின் மிகவும் உயரமான ஜன்னல் வழியாக, கீழே பார்ப்பது போலிருந்தது. என்ன செய்வது மரப்பாச்சியின் உருவம் அப்படி! வீட்டில் இருந்து வெளியே வர உதவிய கேபிள் டிவியின் வயர் எங்கே செல்கிறது என்று கவனித்தது மரப்பாச்சி. அது கீழ்வீட்டுக்குச் சென்றது. ஐடியா… இந்த வயரையே பிடித்துக் கீழ்வீட்டுக்குச் சென்று அங்கிருந்து நாம் வெளியேறிவிடலாம் என்று திட்டமிட்டது. இந்தக் கீழ்வீட்டில் தானே அந்தத் தாத்தாவும், பாட்டியும் இருக்கிறார்கள். அவர்களையும்…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 6]

    பூஜா வீட்டுக்குள் நுழையும் போதே, அப்பா ஹாலில் அமர்ந்து வெங்காயம் வெட்டிக்கொண்டிருந்தார். இது தினப்படி வழக்கம். காய்கறிகளை அப்பா வெட்டினால் அம்மா சமையல். அம்மா வெட்டினால் அப்பா சமையல். இன்று அம்மா கிச்சனில் இருந்தார். கதவு திறந்த சத்தம் கேட்டு, ஹாலுக்கு வந்த அம்மாவின் முகம் கடுகடுவென இருந்தது. “எங்கடி போயிட்டு வர்ற..?” “டான்ஸ் கிளஸுக்கும்மா..” “அது தெரியுது… ஆனா… ஸ்கூல் விட்டு வீட்டுக்கே வரலையாம்மே… கீழே தாத்தா சொன்னாரே…” என்று அம்மா கேட்டார். பதில் ஏதும்…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 5]

    மரப்பாச்சி சொன்ன அதன் கதையை எல்லாம் கேட்ட பிறகும் பூஜாவால் நம்ப முடியவில்லை. இமைகளை மூட மறந்து அப்படியே அமர்ந்திருந்தாள். “ஏய்… என்னடி… இப்படி உட்கார்ந்திருக்க…?” என்றபடியே பூஜாவின் தோள் தொட்டு உலுக்கினாள் ஷாலு. “என்ன சொல்லுறதுன்னே தெரியலையேடி… இப்படி ஒரு மரப்பாச்சி பேசினால்… ஷாக் ஆகாம இருக்க முடியுமா?” “ஹா…ஹா…” என்று சிரித்த மரப்பாச்சி, “பூஜா நீ இன்னும் ஷாலுவின் கேள்விக்குப் பதில் சொல்லவே இல்லையே…? எதுவானாலும் சொல்லு. நான் உனக்கு உதவுகிறேன்” என்று சொன்னது.…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 4]

    நடன வகுப்பு முடிந்தது. சுவரில் சாய்ந்து ஓரமாக அமர்ந்திருந்த பூஜாவை அழைத்துக்கொண்டு, மண்டபத்தில் இருந்து வெளியே வந்தாள் ஷாலு. ஷாலுவின் ஷோல்டர் பேக் அவளின் முதுகில் சவாரி செய்தது. மரப்பாச்சி பொம்மையைக் கையில் வைத்திருந்தாள். பூஜாவும் தனது ஸ்கூல் பேக்கை முதுகில் மாட்டி இருந்தாள். மறுகையில் அவளது சாப்பாட்டுக்கூடை இருந்தது. “ஆமா… இன்னிக்கு சுடிதார் போடாமல், ஸ்கூல் யூனிபார்ம்லயே ஏண்டி வந்துட்ட…” என்று கேட்டாள் ஷாலு. “அதுவா… ம்…” என்று சிறிது யோசித்த பூஜா, “ஸ்கூல் வேன்…