பூவுலகு

“பூவுலகு” சுற்றுச்சூழல் இதழ் வெளியீட்டு விழா, நாள்: 13–06–09 மாலை 6 மணிக்கு நடக்கிறது. வாய்ப்பு இருப்பவர்கள் அவசியம் கலந்துகொள்ளவும்.

இடம்: ரஷ்ய கலாச்சார மையம், 74, கஸ்தூரி ரங்கன் சாலை,
ஆழ்வார்பேட்டை, சென்னை – 600 018

விவசாயிகளின் தற்கொலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் தேடும் “I want my father back“ என்ற குறும்படம் திரையிடப்படவிருக்கிறது.

—-

கலைஞர் கருணாநிதியின் 86வது பிறந்தநாள் இன்று. அறிவாலயம் களைகட்டியது. காலையில் இருந்து பார்த்த சிலவற்றை தருகிறேன்.

  • ஆண்டு தோறும் கலைஞர் கையால் நடப்படும் மரக்கன்று இந்த முறை நடப்படவில்லை.
  • கோபாலபுரம் வீட்டுக்கு காலையிலேயே வாழ்த்தி, ஆசி பெற வந்தவர்களில் மு.க. முத்துவும் ஒருவர். அவரை அடையாளம் தெரியாததால்.. போலீஸ்காரர்கள் உள்ளே விடவில்லை. சில நிமிட தள்ளு, முள்ளுக்குப் பின், கலைஞரின் பி.ஏ எட்டிப்பார்த்து, ஓடி வந்து உள்ளே அழைத்துச்சென்றார்.
  • அறிவித்தபடி 7மணிக்கு ஷார்ப்பாக அண்ணாசமாதியிலும், 7.15க்கு ஷார்ப்பாக பெரியார் சமாதியிலும் அஞ்சலி செலுத்தினார் கலைஞர் கருணாநிதி.
  • சரியாக 8.57க்கு அரங்கினுள் வந்தார் கலைஞர். மேடையின் நடுவில் வந்து, தொண்டர்களைப் பார்த்து, கையசைத்து, வணக்கம் தெரிவித்த போது மணி சரியாக ஒன்பது. நேரத்தை சரியாக கடைப்பிடிப்பதில் கலைஞருக்கு நிகர் அவர் தான்.
  • தயாநிதி மாறன் காலையில் இரு இடங்களிலும் இருந்தார். அறிவாலையத்தில் ஆளையே காணோம்.
  • டி.ஆர்.பாலு கண்ணில் படவே இல்லை. மனுசன் டெல்லியிலேயே டேரா- வாம்!
  • திருப்பதி தரிசனத்திற்கு கட்டப்பட்டிருக்கும் வளைவு தடுப்புகள் போல.. ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜர்கண்டி..ஜர்கண்டி சொல்லாதது தான் குறை!
  • வந்திருந்தவர்களிடமிருந்து பரிசுப் பொருட்களை துணை-முதல்வர் ஸ்டாலின் தான் பெற்றுக்கொண்டிருந்தார். முதல்வரோ.. கை கூப்பி வணக்கம் தெரிவித்தபடி இருந்தார்.
  • துணைமுதல்வர் பொறுப்புக்கு வந்த பின் ஸ்டாலின் முகத்தில் ஒருவித புன்னகை இயல்பாக தொற்றிக்கொண்டுள்ளதை கவனிக்க முடிந்தது.
  • மத்திய அமைச்சர் ஆ.ராசா ஹெர் ஸ்டைலை மாற்றி, மிகவும் இளமையான தோற்றத்தில் தெரிந்தார்.
  • வழக்கமாக வைக்கப்படும் உண்டியலும் இம்முறை மிஸ்ஸிங்..!
  • பொன்னேரியைச்சேர்ந்த ஒரு ஜோடி அங்கே திருமணம் செய்து விட்டு நேரடியாக தலைவனிடம் ஆசி வாங்க வந்திருந்தார்கள்.
  • திருவண்னமலை மாவட்டத்திலிருந்து வந்திருந்த தொண்டர்கள் அனைவரது கைகளிலும் பரிசுப்பொருள்கள் இருந்தது.
  • வலது பக்கம் ஒருகாலும், கையும் இழந்த பெண்மணி, கணவருடன் வந்திருந்தார். அவர் தத்தி தத்தி சென்றது எல்லோர் மனதையும் என்னவோ செய்தது. வரிசையில் இருப்பவர்கள் அவருக்கு முன்னே போக வழி விட, அவர் மறுத்து, தன் வரிசையிலேயே வந்தார்.
  • தொடர்ந்து நான்கு மணி நேரம் ஒரு இடத்தில் அமர்ந்து தொண்டர்களை பார்த்து சிரித்து, கையசைத்து, டாடா காட்டி உற்சாகமாகவே இருந்தார் கலைஞர். (இடையில் 30நிமிடம் ஓய்வு எடுத்துக்கொண்டார்) இப்படி தொண்டனை சந்திக்கும் ஒரு தலைவனை ஒருபோதும் தொண்டர்கள் கைவிடமாட்டார்கள்.
  • கடைசியில் செய்தியாளர்களிடமும் பேசினார்.

முன்பு தொகுத்த ஒரு செய்தி: இங்கே


Comments

6 responses to “விடுபட்டவை 03/ஜூன்/2009”

  1. படங்களிருந்தால் போடவும்..

    பதிவு எப்போதும் போல அக்மார்க் தல பதிவுதான்

  2. சி.ஐ.டி காலணி வீட்டில மரம் நட்டாரு,
    உண்டியல் இருந்துச்சு அப்டின்னு தட்ஸ் தமிழ்ல போட்ருந்தான் அண்ணாச்சி.

  3. ஜோசப்,
    சி.ஐ.டி காலனியில் குழி வெட்டி வச்சு இருந்தாங்க.. ஆனா.. மரம் நடவில்லை. அதே போல.., உண்டியலும் இல்லை.

    அப்படி வெளியான செய்திகள் தவறானவை.

  4. //கோபாலபுரம் வீட்டுக்கு காலையிலேயே வாழ்த்தி, ஆசி பெற வந்தவர்களில் மு.க. முத்துவும் ஒருவர். அவரை அடையாளம் தெரியாததால்.. போலீஸ்காரர்கள் உள்ளே விடவில்லை//

    ம்ம்ம்… எப்படி இருந்திருக்க வேண்டியவர்? 🙁

  5. அபிஅப்பா Avatar
    அபிஅப்பா

    ஆஹா தல எப்படி மிஸ் பண்ணினேன் இந்த பதிவை!

    ஜோசப் சொல்வது போல சி.ஐ.டி காலணியிலே மரக்கன்று நட்டார்.

    நல்ல பகிர்வு தல!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *