Category: அரசியல்

  • முதல்வரின் வாழ்த்தும் எனது கோரிக்கையும்

    மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூலுக்கு சிறார் இலக்கியத்தின் உயரிய விருதான சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்காருக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து (28.09.2021) வாழ்த்தும் பாராட்டும் பெற்றேன். முதல்வரை சந்திக்கும் வாய்ப்பில், தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மாற்றுத்திறன் குழந்தைகளின் மேம்பாட்டிற்கு அரசு சில முன்னெடுப்புகளை செய்தால் நன்றாக இருக்கும் என எனக்குத் தோன்றியதை, ஒரு மனுவாக எழுதி எடுத்துச்சென்று, முதல்வரின் கைகளில் நேரடியாகச் சேர்த்தேன். உறைக்குள் வைத்து கொடுத்த மனுவை உடனடியாக…

  • மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோரின் சுயமரியாதை

      அரங்கில் நிறைந்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அறிவுசார் பலவீனங்கள்(Intellectual Impairment) எனும் குடையின் கீழ் பல்வேறு குறைபாடுகள் பட்டியலிடப் பட்டுள்ளன. பொதுவாக சமூகம் “லூசு” என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கிவிடும் இந்தப் பட்டியலில் இருக்கும் எண்ணற்ற குறைபாடுகளைப் பற்றி இங்குள்ள நண்பர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? கற்றல் குறைபாடு, ஆட்டிசம், டவுன் சிண்ட்ரோம், செரிபரல் பால்சி, மனவளர்ச்சிக் குறைபாடு என நீளும் பட்டியல் சற்றே பெரியது. இந்த உலகில் இருக்கும் எல்லாக்…

  • தகவல் அறியும் உரிமைச்சட்டம்- ஓர் அறிமுகம்

    தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும். சட்டம் எதற்கு? அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் கடிதம் குப்பைக்கு கூட செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு தகவல் தர மறுத்தால் சட்டத்தை மீறுவதாகும்.…

  • மாற்று எரிசக்தி..

    முதலில் கருணாநிதியை குற்றம் சாட்டினார்கள்.. இப்போது ஜெயலலிதாவைக் குற்றம் சாட்டுகிறார்கள்.. நாம் செய்ய வேண்டியவை/ அறிந்து வைத்திருக்க வேண்டியவை என எனக்குத் தோன்றும் சில கருத்துக்களின்/விடயங்களின் பட்டியல் இதோ.. தினம் எட்டுமணி நேரம் மின்வெட்டு என இன்று (08.02.12) அறிவித்திருக்கிற அரசு. அப்படியே மாற்று எரிசக்திக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப் போறோம்னும் சொல்லி இருக்கலாம்/ சொல்லவேண்டும். வழிப்பாட்டுத் தலங்கள், அரசு/ அரசியல் விழாக்கள், வணிக நிறுவனங்கள் என சீரியல் பல்பு எரியவிடுவதைத் தடை செய்யலாம். அப்படியும் அவர்கள்…

  • அணு உலைக்கு எதிராக அதிரடி நோட்டீஸ்!

    100 நாட்களுக்கு மேலாக தொடர்ந்துகொண்டிருக்கிறது… கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம். இந்தபோராட்டைத்தை மழுங்கடிக்க அணு உலைக்கு ஆதராவாகவும் போராட்டங்கள்…பிரஸ்மீட்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.”அணு உலை பாதுகாப்பானதுதான். ஏற்கனவே… அணு உலை இயங்கிவரும் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை சுற்றியுள்ள மக்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கிறார்கள்.அணு உலையால் எந்த ஆபத்தும் இல்லை” என்று  அணுசக்தித்துறை விஞ்ஞானிகள், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், அஸ்பியர்(ASPIRE) தொண்டு நிறுவனத்தின் காரணிவியல் டாக்டர்.மஞ்சுளா தத்தா, மத்திய ஆய்வுக்குழுவினர், அடையார் புற்றுநோய் மைத்தின் இயக்குனர் சாந்தா…