முதலில் கருணாநிதியை குற்றம் சாட்டினார்கள்..
இப்போது ஜெயலலிதாவைக் குற்றம் சாட்டுகிறார்கள்..

நாம் செய்ய வேண்டியவை/ அறிந்து வைத்திருக்க வேண்டியவை என எனக்குத் தோன்றும் சில கருத்துக்களின்/விடயங்களின் பட்டியல் இதோ..

தினம் எட்டுமணி நேரம் மின்வெட்டு என இன்று (08.02.12) அறிவித்திருக்கிற அரசு. அப்படியே மாற்று எரிசக்திக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப் போறோம்னும் சொல்லி இருக்கலாம்/ சொல்லவேண்டும்.

வழிப்பாட்டுத் தலங்கள், அரசு/ அரசியல் விழாக்கள், வணிக நிறுவனங்கள் என சீரியல் பல்பு எரியவிடுவதைத் தடை செய்யலாம்.
அப்படியும் அவர்கள் எரிய விடுவேன் என்று சொன்னால்.. இப்போது வாங்கும் பணத்தை 100 சதவ்கிதம் அதிகரித்து வாங்கலாம்.

மின்சார சேமிப்பு பற்றி உண்மையில் அக்கறைஇருந்தால், கட்சிகள் இனி கொஞ்ச நாளைக்குப் பொதுக்கூட்டங்களை பகலில் நடத்தலாம்.

பகலில் தேவையற்று எரியும் தெருவிளக்குகளை முறையாக அணைத்து வைத்தாலே.. சில ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை சேமிக்க முடியும்னு தோணுது.

குண்டு பல்புகளுக்கு.. முற்றிலுமாக தடை விதிக்கலாம்.

சூரிய சக்திக்கு கூடுதலாக நிதி ஒதுக்கி, சூரிய சக்தி விளக்குகளையே அரசு அலுவலகங்களில் பயன்படுத்தும் திட்டத்தையும் தொடங்கலாம்.

பெரிய பெரிய கார்பரேட் நிறுவனக்கள்,  ஐடி நிறுவங்கள், ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் குறைந்தது 20 சதவிகிதத்தையாவது சூரிய சக்தியின் மூலம் பெறவேண்டும் என்று கட்டாயப்படுத்தலாம்.

1500 ரூபாய்க்கு தொடர்ந்து நான்கு மணி நேரம் எரியக்கூடிய சோலார் எமர்ஜென்சி விளக்குகள் விற்பனைக்கு வந்து விட்டன.. இதைப் போலவோ அல்லது இதனையேகூட அரசு மான்ய விலையில் மக்களுக்கு கிடைக்க வழி செய்யலாம்.

பொதுமக்களும் மின்சாரத்தை சேமிப்பது குறித்து கொஞ்சம் யோசிக்கலாம் (இருந்தா தானே சேமிக்கிறது என்றெல்லாம் கேக்கப்பிடாது..ஆமா)

தண்ணீரையும் மின்சாரத்தையும் வீணாக்கும் மனிதர்கள் எதிர்கால சந்ததியினருக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்துகிறார்கள் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.