( பேயோன் , அருண்நரசிம்மன் ஆகியோரின் தூண்டலில் குழந்தைகளுக்கான கதை)

ராமுவும் சோமுவும் உயிர் நண்பர்கள். ஒருநாள் இருவரும் காட்டு வாக்கில் நடந்துகொண்டிருந்தனர். அப்போது ஒரு பயங்கரக் கரடி எதிரில் வந்தது. இருவரும் பயந்து ஓடத் தொடங்கினர். கரடி அவர்களை விடாமல் துரத்தியது. ராமு நண்பனை விட்டு ஒரு மரத்தின் மேல் ஏறித் தப்பித்தான். சோமுவுக்கு மரம் ஏறத் தெரியாது. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. காட்டாந்தரையில் படுத்துக்கொண்டு இறந்தது போல் நடித்தான். கரடி அவனை கவனிக்காமல், மரத்தை நிமிர்ந்து பார்த்தது, விடுவிடுவென மரத்தின் மீது ஏறி, ராமுவை அடித்தது. உனக்கு மரம் ஏறத்தெரியாதுன்னு சொன்னாங்களேன்னு ராமு அலறினான்.  மரம் ஏற கற்றுக்கொள்ளவே மாட்டோம்னு உனக்கு எவன் சொன்னதுன்னு கேட்டபடி இன்னொரு அடி கொடுத்தது.


Comments

7 responses to “ராமுவும் சோமுவும்”

  1. Please continue thala

  2. Vaa Raajaa Vaa

  3. pls continue

  4. சூப்பர் பாலா!
    இதே போல சுருக்கமான ஆனால் நறுக்கென்ற கதைத் தொகுப்பு வந்து நாளாகிவிட்டது. எனவே நிறைய எழுதி ஒரு புத்தகமாக வெளியிட கன்னா பின்னா கண்டிப்புடன் கேட்டுக் கொள்கிறேன். சியர்ஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *