(குழந்தைகளுக்கான கதை)

நீரில் விழுந்து தத்தளித்துக்கொண்டிருந்த தேள் ஒன்றை வெளியில் எடுத்துப் போட்ட முயன்றுகொண்டிருந்தார் முனிவர் ஒருவர். இந்த காட்சியை அந்தப் பக்கம் வந்த சோமு நின்று வேடிக்கை பார்த்தான்.

நீரில் கையை விட்டு, முனிவர் தேளை தூக்கியதும் அது கையில் கொட்டி விட்டது, ஆ என்று கையை அவர் உதற, தேள் மீண்டும் நீரில் விழுந்தது. சில வினாடிகள் கழித்து, மீண்டும் முனிவர் நீரில் தத்தளித்த தேளை தூக்கிவிடப்பார்த்தார். ஆனால் தேளோ மீண்டும் அவர் கையில் கொட்டியது. இவர் கையை உதற அது மீண்டும் நீரில் விழுந்தது.

இப்படியே ஐந்து முறைக்கு மேலாக, தேளை தூக்குவதும், அது கொட்டுவதும், கையை உதறுவதும், மீண்டும் தண்ணீருக்குள் தேள் விழுவதுமாக இருந்தது.

ஆச்சரியம் தாங்காமல் சோமு முனிவரிடம் போய், “ஐயா, தேள் தான் கொட்டுதே.. அப்புறேம் ஏன் அதை இப்படி எடுக்க முயற்சி பண்றீங்க’ன்னு கேட்டான்.

கையை உதறிக்கொண்டிருந்த முனிவர், முகத்தில் புன்னகை உதிர்த்துவிட்டு, “கொட்டுவது தேளில் இயல்பு. பிற உயிர்களை காப்பது என்பது மனிதர்களின் இயல்பு. நானும் மனுஷன் தானே?” என்றார் பெருமிதப்புன்னைகையுடன்.

“அதெல்லாம் சரி, வெறும் கையாலதான் எடுக்கனும்னு ஏதாவது சட்டம் இருக்கா.. என்ன?’ என்று கூறியபடி, அருகில் கிடந்த மரக்குச்சி ஒன்றின் மூலம் அந்த தேளை எடுத்து வெளியே போட்டுவிட்டு நடந்தான்.

(கதைகளைத் தொடர்வேன்)

புகைப்படம்: நன்றி


Comments

4 responses to “முனிவரும் தேளும்”

  1. //
    அதெல்லாம் சரி, வெறும் கையாலதான் எடுக்கனும்னு ஏதாவது சட்டம் இருக்கா.. என்ன?
    //

    என் பசங்களுக்கு இன்னிக்கி நைட் சொல்ல ஒரு கதை ரெடி…
    நன்றி அண்ணே.:-)))

  2. அதானே…?

    இந்தக்கால குழந்தைகள் இப்படித்தான் நிறைய கேள்விகள் கேட்கிறார்கள்… நாம் தான் சற்று கதையை மாற்றிச் சொல்ல வேண்டும்…

  3. sivagnanam g Avatar
    sivagnanam g

    “kanivamudhanukku sonna kathaigal”
    -title of the next book.

  4. Hari Avatar
    Hari

    Very good and advanced…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *