ராமுவும் சோமுவும் -2

(குழந்தைகளுக்கான கதை)

சோமுவின் தாத்தாவை வீட்டுக்குள் சேர்ப்பதில்லை. திண்ணையில் தான் அவருக்கு வாசம். மண் சட்டியில் தான் அவருக்கு சோறுபோடுவார்கள்.

ஒரு நாள் சோமுவின் தாத்தா இறந்து போனார். காரியங்கள் முடிந்த பிறகு, காலியாக இருந்த ஒரு திண்ணையில் சோகமாய் அமந்திருந்தான் சோமு. மறுதிண்ணையில் அவன் அப்பா பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். அவனைப் பார்க்க வந்தான் ராமு. ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தவன் தாத்தாவின் சோற்றுச்சட்டி கண்ணில் பட்டது. அதை எடுத்து சோமுவின் கையில் கொடுத்தான்.

சட்டியை கையில் வாங்கிய சோமு அதை கிழே போட்டு உடைத்தான். சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்த அப்பாவுக்கு பெரிய நிம்மதியாக இருந்தது.

’ஏண்டா அதை உடைச்ச.. ?’ என்று கேட்டான் ராமு.

’அடப்போடா.. இனிமே இது எல்லாம் தேவைப்பட்டாது. இப்ப எல்லாம் நிறைய முதியோர் இல்லம் வந்திடுச்சுல்லா.. ’ என்றான் சோமு.

சோமுவின் பேச்சைக்கேட்ட அப்பா திகைத்து நின்றார்.

(தாத்தாவின் சட்டி)


Comments

2 responses to “ராமுவும் சோமுவும் -2”

  1. ஒரு முடிவோடத் தான் இருந்திருக்கான்…

  2. sivagnanam g Avatar
    sivagnanam g

    arumai miga arumai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *