(குழந்தைகளுக்கான கதை)

காட்டுராஜா சிங்கத்துக்கு தினம் ஒரு விலங்கு உணவாக வலியப்போய் நின்று, சாகவேண்டும் என்ற விதி அந்த காட்டில் இருந்தது. அப்படி ஒரு நாள் முயல் ஒன்றின் முறை.

அது சிங்கத்தின் குகை நோக்கி போய்க்கொண்டிருந்த போது, எதிர்பட்ட சிங்கத்தின் காரியதரிசி நரிக்கு, கொழு கொழு முயலைப் பார்த்ததும் ஆசை வந்துவிட்டது. நரியின் எண்ணத்தை புரிந்துகொண்ட முயல் நாலு கால் பாய்ச்சலில் முன்னால் ஓடிப்போய் நின்றுவிட்டு, ’ராஜாவிக்கு நான் உணவாகப் போகவில்லை எனில், வேறு எவரையாவது தின்று விடுவார். அதனால் உன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, அமைதியாக வா” என்று சொல்லியது, ஆனால் நரிக்கோ ஆவலை அடக்க முடியவில்லை.

லாவகமாக முயல் மீது பாய நினைத்த போது, முயல் காட்டுக்குள் ஓடி மறைந்தது. உண்மையைச்சொன்னால் வம்பாகும் என்று நினைத்த நரி மனதில்தான் தப்பிக்க, சிங்கத்தையே ஒழித்துவிடும் ஒர் எண்ணம் தோன்றியது.

பசியோடு இருந்த சிங்கத்திடம் போய், ‘ராஜா, முயல் ஒங்களுக்கு உணவாக வந்துகொண்டிருக்கும் போது, உங்களை மாதிரியே இன்னொரு சிக்கம் அதை சாப்பிட்டு விட்டது என்று கதை விட்டது. சிங்கராஜாவுக்கு பயங்கர கோபம். எவண்டா அது, ஆளைக்காமின்னு நரியோடு கிளம்பிச்சு.

நரி கிணற்றை காட்டியது. அடியில் கொஞ்சம் நீரோடு இருந்த ஆழமான அந்த கிணற்றை சிங்கம் மெல்ல எட்டிப் பார்த்தது. உள்ளேயும் இதன் பிம்பம் பிரதிபளித்தது. வெளியில் இருந்து இது கர்ஜிக்க, உள்ளே பிம்பமும் பிரதிபளித்தது. சிங்கம் உள்ளே பாயப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது நரி.

ஆனால் சிங்கம், ஒரே பாய்ச்சலாக நரி மீது பாய்ந்தது, “ராஜா நீங்க அந்த சிங்கத்தின் மீது பாய்வீங்கனு நினைச்சேனே” என்று அலறியது நரி.

“அவன் மீது பாய்வதற்கு எனக்கு தெம்பு வேணாமா.. ரொம்பவும் பசி மயக்கத்துல இருக்கேன். மொதல்ல உன்னை சாப்பிட்டுவிட்டு, அவன் வெளியே வரும் வரை காத்திருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்’ என்றபடியே நரிக்கு இன்னொரு அடிகொடுத்தது சிங்கம்.


Comments

3 responses to “சிங்கமும் நரியும்”

  1. கதை முடிவில் நல்ல திருப்பம்…

  2. kanivamudhan b Avatar
    kanivamudhan b

    elloraiyum ellaa naalum emaatra mudiyathu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *