டெட்சுகோ குரோயாநாகி என்ற பெண்மணி தன் வாழ்க்கையை திரும்பிப் பார்த்திருக்கும் கதை தான் டோட்டோசான். டெட்சுகோ குரோயாநாகி பின்னாளில் ஜப்பான் முழுக்கத் தெரிந்த முகமானார். தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியில் இருந்தார். (இப்போது ஓய்வில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்) தொடர்ந்து மிகச்சிறந்த பல விருந்துகளைப் பெற்றிருக்கிறார். இந்நூல் வெளியான ஒரே ஆண்டில் 45 லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்திருக்கிறது.
டோமாயி தொடக்கப்பள்ளி, நாம் பார்த்து வளர்ந்த பள்ளி போல, சாதாரணப்பள்ளி அல்ல. இனி பயன்படாது என ஒதுக்கப்பட்ட, ரயில் பெட்டிகளை வாங்கி, அதை வகுப்பறைகளாக மாற்றி, கற்றல்வழி பாடங்களை போதித்த பள்ளி தான் டோமாயி.
பல பள்ளிகளில் இருந்தும் டோட்டோ சான் வெளியேற்றப்படுகிறாள். எந்தப் பள்ளியிலும் அவளை அதிக நாட்கள் இருத்திக்கொள்ள பள்ளி நிர்வாகம் சம்மதிப்பதில்லை. இதனாலயே டோட்டோசானின் அம்மாவுக்கு மிகுந்த வருந்தமாகிறது.
அப்போது தான் டோமாயி பற்றி அறிந்து அங்கே அழைத்துவருகிறார். புதுப்பள்ளியின் நேர்முகத்தேர்வுக்கு ஏகப்பட்ட முன் தயாரிப்புகளுடன் டோட்டோசானை தார்ப்படுத்தி, அங்கே அழைத்துவருகிறார் அம்மா. பள்ளியில் தலைமை ஆசிரியர் டோட்டோசானுடன் பேசவேண்டும் நீங்கள் வெளியே இருங்கள் என்று அம்மாவை வெளியேற்றிவிட்டு அவளுடன் பேசுகிறார்.
முடிவில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு டோட்டோசானை பிடித்துவிடுகிறது. டோடோசானுக்கும் பள்ளிப் பிடித்துவிட அங்கே சேர்க்கப்படுகிறாள்.
பொதுவாகவே எல்லாப்பள்ளிகளிலும் உடல் ஊனமுற்ற குழந்தைகளை நடத்துவிதம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஆனால் டோமாயில் எல்லா குழந்தைகளும் ஒன்று தான். அப்படி அங்கே டோட்டோசானுக்கு மாற்றுத்திறனுடைய சில நண்பர்கள் வாய்க்கிறார்கள். அவர்களோடு இவள் விளையாடும், பேசும் காட்சிகளை நம்மையும் அறிமாமல் ஒரு வித வலியைக் கடத்தும். நல்ல மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பாளர்கள் வள்ளிநாயகம், பிரபாகரன் ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
கற்றல் முறையில் இருக்கும் வேறுபாடு குறித்து டோட்டோ சானின் அம்மா படும் வேதனைகளையும் அழகாய் பதிவு செய்திருக்கிறார். மதிய உணவின் போது, எல்லாக்குழந்தைகளையும் ஒன்றாக அமர்தி, “கடலில் இருந்து கொஞ்சம், மலையில் இருந்து கொஞ்சம் ” என்று ஆசிரியர் சொல்லி உணவு உண்பதைக்கூட நுட்பமாக கற்றுக்கொடுப்பதைப் படிக்கும் போது நிச்சயம் எனக்கு என்னவோ ஓர் ஏக்கம் தோன்றியது.
டோமாயி பள்ளி இப்போது இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதன் தாக்கத்தினை என்னால் நன்கு உணர்ந்துகொள்ள முடிகிறது. பல இடங்களில் மிகுந்த ஏக்கத்தினை அடைந்தேன். நூலை வாசித்த பின் குறைந்தது, அதைப் பற்றி நூறுபேரிடமாவது பேசி இருப்பேன். அந்த பள்ளியின் நினைவு இன்னும் எனக்குள் இருந்துகொண்டே இருக்கிறது.
புத்தக வாசிப்பு இருப்பவர்களும், இல்லாதவர்களும் கூட ஒரு முறை இப்புத்தகத்தினை வாசித்து பார்ப்பது அவசியம் என்று கருதுகிறேன்.
ஆசிரியர்களும் பெற்றோரும் கூட வாசிப்பது மிகவும் அவசியம் என்று நம்புகிறேன்.
இக்கதையை தழுவி, தமிழில் திரைக்கதை அமைத்தால், ஆகச்சிறந்த படமாக கொண்டுவரலாம் என்று நம்புகிறேன்.
நூல்:- டோட்டோ சான்.
ஆசிரியர்:- டெட்சுகோ குரோயாநாகி
தமிழிலாக்கம்:- சு.வள்ளிநாயகம், சொ. பிரபாகரன்
அர்விந்த்குப்தா- தளத்தில் இந்த புத்தகத்தின் நான் படித்த தமிழாக்கம் கிடைத்தது. எனக்கென ஒரு பிரதியையும் சேமித்துக்கொண்டேன். மற்றவர்களுக்கும் பயன்படும் என்பதால்.. பகிர்கிறேன்.
சுட்டியை ரைட் கிளிக் செய்து, save as கொடுத்து சேமித்துக்கொள்ளலாம்.
அதன் சுட்டி இதோ:- டோட்டோ சான்
++++++++++++
“வாசித்த போதெல்லாம் ஏக்கமும், இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது.”
இந்த வரிகளின் உண்மையை எங்களுக்கும் உணரவைத்தமைக்கு நன்றி அண்ணா…
புத்தகம் தந்ததற்கு மிக்க நன்றி. வாசித்துவிட்டுக் கருத்துக்களோடு வருகிறேன்.
ஸ்ரீ….
சேமித்துக் கொண்டேன்.
அருமையான நாவல்,அணைத்து ஆசிரியர்களுக்கும் குறிப்பாக 1-5 ஆசிரியர்கள் கண்டிப்பாக படிக்கவேண்டும்.இது போன்ற பள்ளியில் படிக்க முடியவில்லையே என்று இன்னமும் ஏக்கமாக இருக்கிறது
Thanks a lot Very important book I have been searching for a long time
I can’t save. Help me friends
இப்போது முயற்சித்துப்பாருங்கள்