எல்லோருக்கும் முதலில் தாமதமான ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பர்களே!
***
இணையம் என்பது கனவு போல் ஆகிவிட்டது. பணிச்சுமை என்ன என்பதை இப்போது என்னைவிட வேறு யாரும் சரியாக சொல்லி விடமுடியாது என்றே எண்ணுகிறேன். வேலை பளு என்பது உடலளவில் தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அது தவறு மனதளவிலும் கூட வேலை பளு ஏற்படும் என்பதை சமீபத்திய நாட்கள் உணர வைக்கின்றன. வலை உலகில் சீக்கிரம் முன்னாள் பதிவர் ஆகிவிடுவேனோ என்ற அச்சத்தின் காரணமாகவே இன்று எழுத உட்கார்ந்துவிட்டேன். இவ்வருடத்தின் முதல் இடுகை இது. குறைந்தது மாதத்திற்கு நான்கு இடுகைகளாவது எழுத வேண்டும். பார்க்கலாம்.
***
இன்னும் இரண்டு நாட்களில் திருமங்கலத்தில் தேர்தல். ஆளும் தி.மு.கழகத்தின் மேல் மக்களுக்கு இருக்கும் வெறுப்பை வாக்குகளாக மாற்ற நினைத்த அ.தி.மு.க , ம.தி.மு.க-வின் தொகுதியை கைப்பற்றி நேரடியாக களத்தில் குதித்ததும் தேர்தல் சூடு இன்னும் அதிகமானது. ஜெயலலிதாவின் இந்த காய் நகர்த்தலை உணர்ந்துகொண்ட திமுக, டி.ஆர்.பாலு மூலம் தமிழக தேர்தல் அதிகாரி மீது குற்றம் சாட்டி புகார் கொடுத்தது. ஒருவேலை திருமங்கலத்தில் அ.தி.மு.க வெற்றி பெற்றுவிட்டால்.. தோல்விக்கான பாரத்தை நரேஷ் குப்தா மீது போட்டு விட்டு தப்பிக்க நினைக்கிறது திமுக! வெற்றிக்காக கோடிகணக்காய்.. பணத்தை வாரி இறைத்து வருகின்றன பிரதான கட்சிகள். இதனிடையில் தேமுதிக வெற்றி வெறும் என்று ஒரு இணையதளம் கருத்துகணிப்பை வெளியிட்டு.. காமெடி செய்தது வேறு விசயம்.
***
பீகார் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களை விஞ்சும் அளவிற்கு தமிழகத்தில் தேர்தல் வன்முறை அதிகரித்திருப்பதாகவும் மற்ற மாநிலங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழகம் முதலிடம் பிடித்து விட்டதாகவும் சொல்லி இருப்பது தமிழக தேர்தல அதிகாரி நரேஷ்குப்தா அல்ல நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி கோபால்சாமி. என்ன தான் நடக்குது அங்கே.. பொருத்திருந்து தான் பார்க்கவேணும்.
***
தேர்தல் பிரச்சாரம், திருமங்கலத்தில் ஜெயலலிதா, வைகோ, தா.பாண்டியன் போன்றவர்கள் மேடையில் பேசிக்கொண்டிருக்க.. ஒரு ஓரத்தில் அருவாள் இல்லாமல் கருப்பண்ணசாமி கூப்பிய கைகளுடன் நிற்கிறது. கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் தான் தெரிந்தது.. அது கருப்பண்ணசாமி அல்ல.. வேட்பாளர் முத்துராமலிங்கம்! அடக்கடவுளே.. எவ்வளவு நேரத்துக்குத்தான் இந்த மனுசன் இப்படியே நிப்பார்ன்னு தெரியலையே..! டி.வி சானலை மாற்றிவிட்டேன்.

***
வரும் 8ம் தேதி முதல் சென்னையில் தொடங்குகிறது புத்தகத்திருவிழா. சின்னதாக ஒரு பட்டியல் வைத்திருக்கிறேன். முதல் நாளிலோ, இரண்டாவது நாளிலோ போய் பட்டியலை கொஞ்சம் விரிவு படுத்திக்கொள்ள வேண்டும். ஞாயிறு தான் நூல்கள் வாங்க திட்டம். நீங்க ரெடி ஆகிட்டீங்களா?
***

பிற்சேர்க்கை: திருமங்கலத்தில் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் தாக்கப்பட்டதாகக் குறுஞ்செய்திகள் உலவுகின்றன.

பி.பிசே: தலைப்பிலிருந்த தவறான தேதியை சுட்டிக்காட்டியவர்களுக்கு நன்றி.


Comments

23 responses to “விடுபட்டவை 06.01.09”

  1. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  2. அபிஅப்பா Avatar
    அபிஅப்பா

    அட சூடா இருக்கே! பிரேமலதா தாக்கப்பட்ட விசயம்! பாவம்க!

    குறிப்பு: இதுக்கு நான் சிரிப்பான் போடலை! நான் ரொம்ம சீரியசா தான் போட்டிருக்கேன்!

  3. வாங்க தல…

  4. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தல…

  5. வருடத்தின் முதல் பதிவு சூடாத்தான் இருக்கு!

  6. பிரேமலதா தாக்கப்பட்டாங்களா?
    குடும்ப சண்டைய எல்லாம் ஊட்டுக்குள்ள வைச்சுக்க சொல்லுங்கண்ணே.

  7. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  8. //06.02.09//

    வேலையில் மூழ்கி எழும்போது பிப்ரவரி வந்துட்டதா தப்பா நினைச்சுட்டீங்களோ?
    இன்னும் ஜனவரியில்தான் இருக்கோம்!
    😀

  9. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தல…

  10. வேலைப்பழு அதிகம்தான் போல…

    06-01-09 தல…

  11. Happy new year 🙂

  12. புதுவருடத்திற்கான இனிய வாழ்த்து(க்)கள்.

    கொஞ்சம் தேதியைக் கவனிங்க தலை.

    குடும்பஸ்தனா ஆனதும் நாள் ஓடுதுபோல்:-)))))))

  13. அக்னி பார்வை Avatar
    அக்னி பார்வை

    தல லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்ட வந்திருகீங்க…

    எங்களுக்கு 4 பதிவு பத்தாது, கொஞ்சம் அதிகமா இடஒடுக்கீது செய்யுங்க…

  14. புத்தாண்டு வாழ்த்துக்கள் தல

  15. //இதனிடையில் தேமுதிக வெற்றி வெறும் என்று ஒரு இணையதளம் கருத்துகணிப்பை வெளியிட்டு.. காமெடி செய்தது வேறு விசயம்.//
    எனக்கென்னமோ நம்ம மக்கள் எல்லார்கிட்டேயும் பணம் வாங்கிகிட்டு கடைசியா விஜயகாந்துக்கு ஓட்டு போடுன்வாங்கன்னுதான் தோனுது. தேமுதிக வெற்றி பெற நிறைய வாய்ப்பு இருக்குன்னுதான் என் உள்மனசு சொல்லுது. பொறுத்திருந்து பார்ப்போம்.

  16. //எவ்வளவு நேரத்துக்குத்தான் இந்த மனுசன் இப்படியே நிப்பார்ன்னு தெரியலையே..! 🙁 டி.வி சானலை மாற்றிவிட்டேன்.//

    அப்படியே சன் செய்திகள் போயிருந்தா ஸ்டாலின் பேசும் போது லதா அதியமான் கும்பிட்டுகிட்டே சிலை மாதிரி நின்னைதையும் பார்த்திருக்கலாம்.

  17. நீங்கள் எல்லாம் எதிர்பார்ப்பது நடக்கப் போவதில்லை. இம்முறை ஜெயிக்கப்போவது சரத்குமாரின் கட்சிதான் 🙂

  18. நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கப்போவதில்லை. இம்முறை ஜெயிக்கப்போவது சரத்குமார் கட்சிதான் 🙂

  19. // வலை உலகில் சீக்கிரம் “முன்னால்” பதிவர் ஆகிவிடுவேனோ //,

    // ஒரு ஓரத்தில் “அறிவால்” இல்லாமல் கருப்பண்ணசாமி //

    தல என்ன ஆச்சு? Tamil99 ஓட்டிகள் எதுவும் கைவசம் இல்லையா? “ள்” பதிலா “ல்” அடிச்சு இருக்கீங்க? !!!

    அப்பறம் நீங்க எல்லோருக்கும் “முன்னால்” பதிவு எழுத வந்த ஆளு!!! அவ்வளவு எளிதாக உங்களை “முன்னாள்” பதிவராக விட்டுருவோமா?

    // வரும் 8ம் தேதி முதல் சென்னையில் தொடங்குகிறது புத்தகத்திருவிழா. சின்னதாக ஒரு பட்டியல் வைத்திருக்கிறேன்.//

    அதுக்குதானே இரண்டு நாள் முன்னாடியே வந்து சென்னைல உட்கார்ந்து இருக்கிறேன் ! எப்படியும் குறைந்தபட்சம் 10 புத்தகமாவது வாங்கிவிடனும்.

    இப்ப வரைக்கும் கையில காசு இல்ல. ஆனால் நாளைக்குள் எப்படியும் சம்பாதித்துவிடுவேன். படிக்குற ஆசைல குப்பை தொட்டிக்கு அருகில் நாயுடன் உட்கார்ந்து படித்ததற்காக அப்பா கிட்ட அடி வாங்குன ஆளு நான். !!!
    என்ன பண்ண , அதன் தேடல் வயிற்று பசிக்கு , எனது தேடல் அறிவு பசிக்கு, எங்க அப்பாவின் தேடல் என்னடா பள்ளிக்கு போன மகன் இன்னும் வீடு திரும்பவில்லையே என்று.. :-)))))))

    with care and love,

    Muhammad Ismail .H, PHD,

    note : இறைவன் நாடினால் நாளை புத்தகத்திருவிழாவில் சந்திப்போம். வருவிங்க தானே ?

  20. புத்தாண்டு வாழ்த்துக்கள் தல. கொஞ்சம் லேட்டுத்தான். பரவாயில்லை.

    //பீகார் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களை விஞ்சும் அளவிற்கு தமிழகத்தில் தேர்தல் வன்முறை அதிகரித்திருப்பதாகவும் மற்ற மாநிலங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழகம் முதலிடம் பிடித்து விட்டதாகவும் சொல்லி இருப்பது தமிழக தேர்தல அதிகாரி நரேஷ்குப்தா அல்ல நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி கோபால்சாமி. என்ன தான் நடக்குது அங்கே.. பொருத்திருந்து தான் பார்க்கவேணும்.//

    தல, அப்ப தமிழகம் இதுலயும் முதலிடமா, இதுவரைக்கும் டாஸ்மாக் விற்பனையில் தானே முதலிடத்தில் இருந்தது.

  21. புத்தாண்டு வாழ்த்துகள் பாலாண்ணா 🙂

  22. புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் தங்ஸுக்கும்.

    முன்னாள் பதிவர்
    அருவாள் – இதைக் கொஞ்சம் கவனியுங்களேன்

  23. என்ன அண்ணே அப்படி சொல்லிபிட்டே சுளுவா 6000 ரூபாயை வாங்கிபுட்டு வேர எவனுக்காவது ஒட்டு போட்டுருவானா,

    சும்மா இரு தல எங்க அ எப்பவுமே லீடிங் தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *