புத்தக கண்காட்சிக்கு போறீங்களா..? ஒரு நிமிசம் ப்ளீஸ்!!

இது புத்தகப்பிரியர்களுக்கு திருவிழாக் காலம்.ஜனவரி மாதம் என்றாலே புத்தக கண்காட்சி, புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழாக்கள், எழுத்தாளர்களை சாதாரணமாக அடிக்கடி சந்திக்கமுடிகின்ற வாய்ப்பு எல்லமே இந்த மாதம் நிகழும்.

சிறந்த நூல்கள் புதிய நூல்கள் என வலை உலகில் அனேகர் டாப் டென் தொடங்கி டாப் நூறு வரை புத்தகங்களின் பட்டியலை போட்டு விட்டார்கள். நான் ரசித்த நூல்களின் சிறு பட்டியல்.. வாசிக்கும் வழக்கம் உடைய அனைவரிடமும் இருக்கவேண்டியதாக நான் கருதும் நூல்களின் லிஸ்ட் இதோ..

1. எனக்கு அரசியல் பிடிக்கும்.- ச.தமிழ்ச்செல்வன் ( வெளியீடு- பாரதி புத்தகாலயம்)
2. பிள்ளையார் அரசியல். – பேரா.சிவசுப்ரமணியம்(பாரதி புத்தகாலயம்)
3. ஆயிஷா.- இரா.நடராசன்( பாரதி புத்தகாலயம்)
4. ஏழாவது தலைமுறை. -அலெக்ஸ் ஹெலி (சவுத் விசன் புக் ஹவுஸ்)
5. எரியும் பனிக்காடு- பி.ஹச்.டேனியல் (விடியல் பதிப்பகம்)
6. ஜி.நாகராஜனின் படைப்புகள்- (காலச்சுவடு பதிப்பகம்)
7. ஸ்ரீராமன் சிலோனுக்கு சென்றதில்லை- வால்மீகியின் வாக்குமூலம்- அருணன்( வசந்தம் வெளியீட்டகம்)
8. டாலர் தேசம். அமெரிக்க வரலாறு- பா.ராகவன்(கிழக்கு பதிப்பகம்)
9. நான் வித்யா- லிவிங்ஸ்மைல் (கிழக்கு பதிப்பகம்)
10. ஆழி சூழ் உலகு- ஜேடி குரூஸ் (தமிழினி பதிப்பகம்)

கந்தர்வன் சிறுகதைகளை -வம்சி பதிப்பகத்திலும்
கி.ராஜநாராயணன் படைப்புகளை – அன்னம் பதிப்பகத்திலும்
தி.ஜானகிராமன் படைப்புகளை – ஐந்திணை பதிப்பகத்திலும்
இந்தரா பார்த்தசாரதி- அசோகமித்ரன் – சுப்ரமணியராஜு படைப்புகளுக்கு -கிழக்கு பதிப்பகத்திலும்
வாங்கிக்கொள்ளலாம்.
பதிப்பகங்களின் ஸ்டால் எண்ணை முதலிலேயே குறித்துவைத்துக்கொண்டால்.. இன்னும் சுலபமாக இருக்கும். அதற்கு விருபாவின் இந்த பக்கம் உதவும்
http://www.viruba.com/ChennaiExpo2009Stalls.aspx


Comments

15 responses to “புத்தக கண்காட்சிக்கு போறீங்களா..? ஒரு நிமிசம் ப்ளீஸ்!!”

  1. இதுவும் உங்களுக்கு உபயோகப்படலாம்

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

  2. Praba Avatar
    Praba

    I am in UK, can you send the books to me please, I ‘ll transfer the money.

  3. புத்தக கண்காட்சிக்கு போகமுடியுமான்னு தெரியல , பாய்.ஆனாலும் பட்டியலுக்கு நன்றி , குறிச்சு வெச்சுக்குறேன் வேறொரு சமயத்தில் வாங்க.

  4. செந்தழல் ரவி Avatar
    செந்தழல் ரவி

    ஆங் இந்த பின்னூட்டம் வெளிய உடாதீங்க

  5. அண்ணே,
    எங்கிட்ட லிவிங் ஸ்மைல் வித்யா புத்தகம் மட்டும் இருக்கு. வேற எதுவும் இல்லை. நான் செந்தழல் ரவி மாதிரி காசு அனுப்புறேன் வாங்கி குடுங்கன்னு எல்லாம் கேட்டு நம்ம சொந்தத்த பாழ்படுத்த விரும்பல. ஒழுங்கா எல்லா புத்தகத்தயும் வாங்கி அனுப்பிருங்க. இல்ல அடுத்த தபா சென்னை வர்றப்ப வூடு பூந்து எல்லா புத்தகத்தயும் கொள்ளைய்டிச்சுருவேன்.

    இந்த பின்னூட்டத்தை கட்டாயம் வெளியிடவும்.

  6. Praba Avatar
    Praba

    Azhagi ila type panna asingama poitudhu,

    Please enakkum inda books venum. nanum kasu anuparren. Thayavu seithu vaangi post panna mudiyuma?

    Praba

  7. அபிஅப்பா Avatar
    அபிஅப்பா

    ஆமா தல, ஜோசப் சொல்ற மாதிரி நம்ம பாசத்தை பணத்தால கீறல் போட நானும் விரும்பலை ரவி மாதிரி! நீங்க லிஸ்ட்ல உள்ள புத்தகத்தை எல்லாம் வாங்கி நம்ம வீட்டுக்கு கூரியர் அனுப்பிடுங்க.

    ஆங், சொல்ல மரந்துட்டேனே, நீங்க கவன குறைவா ரவியோட பின்னூட்டத்தை போட்டுட்டீங்க. அதனால அதை தூக்கிடுங்க, ஆனா என்னோட இந்தபின்னூட்டத்தை ஜாக்கிரதையா வச்சிகுங்க! அப்ப தான் ரவி உங்ககிட்ட ரகசியமா பின்னூட்டம் போட்டது யாருக்கும் தெரியாது:-))))

  8. எரியும் பனிக்காடு அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். அதப் படிச்சுட்டு யாராவது முடிஞ்சா ஒரு டீ குடிங்களேன் பார்க்கலாம்.சவால்.

  9. johan Avatar
    johan

    பிரபா!
    இவற்றில் சிலவாவது, பாரிஸ் ‘அறிவாலயம்’ புத்தகசாலையில் இருக்கலாம். இந்த தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு கேட்கவும்.
    0033144720334

  10. நல்ல தகவல் பாலா.. நன்றி..

  11. அபிஅப்பா Avatar
    அபிஅப்பா

    அடங்கொய்யால! இதுல எடிட்டிங் வசதி இருக்கா? தெரியாம போச்சே:-))

  12. செந்தழல் ரவி Avatar
    செந்தழல் ரவி

    காவேரி கனேஷ் இந்த பின்னூட்டத்தையாவது கட் பண்ணி நாலு எடத்துல போடவும்…

    அப்பத்தான் கொங்குமாவட்டத்தில் ஒரு பசுமைபோராளி, அன்புடன் விஜய், தமிஷ் ஹிப்பலாக் மாதிரி பேப்பேப்பேமஸ் ஆகமுடியும்

  13. […] January 9, 2009 balabarathy list Posted by sivaramang under bookfair’09, top10, புத்தகம், வரிசை   http://216.185.103.157/~balabhar/blog/புத்தக-கண்காட்சிக்கு-போற/ […]

  14. Praba Avatar
    Praba

    Mikka nandri bala, naan thodarpu kolkiren.

  15. நீங்கள் குறிப்பிட்டதில் நான்கு புத்தகங்களை வாங்கி விட்டேன். மீதமுள்ளதை வாங்க ஆசைதான்.

    பர்ஸ் தாங்குமா..?

    பா.ராகவனின் “மாய்வலை” வாங்கினீர்களா..??

    கிடைக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *