விடுபட்டவை 19.01.09

பத்து நாட்கள் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு மூன்று முறை போய் வந்தேன். முதல் முறை இல்லத்தரசியோடு போய் அவருக்கும் எனக்குமான நூல்களை அள்ளிக்கொண்டு வந்தோம். இரண்டாம் முறை தம்பி லக்கியுடன் போய் காமிக்ஸ் புத்தகங்களும், மேலும் சில நூல்களும் அள்ளிக்கொண்டு வந்தேன். மூன்றாவது முறை செய்திக்காக..!

கடந்த ஆண்டை விட இம்முறை விற்பனை குறைவு என்று சொன்னார்கள். அதே போல தன்னம்பிக்கை நூல்களின் விற்பனையும் குறைவு என்று சிலர் சொன்னார்கள். படைப்பிலைக்கிய நூல்களும், கட்டுரை நூல்களும் விற்பனை நன்றாக இருந்ததாகவும் சொன்னார்கள்.

வழக்கமாக புத்தகக் கண்காட்சி சமயத்தில் ஒவ்வொரு வருடமும் நீங்கள் முக்கியமான ஒன்றை கவனித்திருக்கலாம், சாகத்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ——- எழுதிய நூல் இங்கே கிடைக்கும் என்றோ, அல்லது அந்த நூலோ விற்பனைக்கு கிடைக்கும் என்று சின்னதாக விளம்பரம் செய்து வைத்திருப்பார்கள் அனேக கடைகளில்! ஆனால் இம்முறை மேலான்மை பொன்னுச்சாமியின் நூல்களுக்கு அப்படியான விளம்பரம் எங்கும் பார்த்ததாக நினைவு இல்லை. மீனாட்சி புத்தக நிலைய கடையில் அவரின் ஏனைய நூல்கள் கிடைத்த போதிலும் எந்த விளம்பரமும் இல்லை. ஏன்?

—-

தொல். திருமாவளவன் நான்கு நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து உடல் நலம் பாதிக்கப்பட்டதால் இன்று போரூர் ராமச்சந்திராவில் காலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உண்ணாநிலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் ஜெயலலிதாவுக்கு எந்த உரிமையும் இல்லை. ஈழத்தில் வாழ்வோடு போராடும் சக தமிழனுக்காக தன் ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறார் திருமா. அதனை அரசியல் நோக்கத்தோடு கொச்சைப் படுத்த ஜெயலலிதா மட்டுமல்ல.. ஈழத்து மக்களுக்காக ஒன்றும் செய்யாமல் இருக்கும் எவனுக்குமே அருகதை கிடையாது. மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த அவருக்கு ஒரு ராயல் சல்யூட்!

—-

வரும் 21ம் தேதி சென்னையில் ஒரு நிகழ்வில் புத்த பிக்கு தலாய்லாமா கலந்துகொள்கிறார். புத்த நாடான இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான நடந்து வரும் போர் பற்றி உங்கள் கருத்து என்ன? என்பது போன்ற கேள்விகளுடன் காத்திருக்கிறேன். பார்க்கலாம் அவர் என்ன சொல்கிறார் என்று!! நிச்சயம் நான்கில் ஒரு தலைப்பு செய்திகளில் தலாய்லாமா செய்தியும் இடம் பிடிக்கும்!

—-

இம்முறை சங்கமம் நிகழ்ச்சிக்கு மொத்தமாக 2 கோடி ரூபாய் கிடைத்தது என்று நினைக்கிறேன். இது முன்பெப்போதையும் விட கூடுதல் தொகை. ஆனால்.. முன்னால் நீட்டப்பட்ட அத்துனை மைக்கிலும் நிதி பற்றாக்குறை என்றே குறைபட்டுக்கொண்டார் ‘கனி’மொழி! அப்படி என்னதான்.. செலவுன்னு பட்டியல் ஏதாச்சும் வெளியிட்டாய்ங்கன்னா.. நல்லா இருக்கும்..!

—-

பதிவுலகில் முன்பு போல இயங்க முடியாததால்.. தமிழ்மணத்தின் விருதுகளில் நான் யாருக்கும் வாக்களிக்கவில்லை. அதிகம் படிக்க முடியாததால் இந்நிலையை அடைத்துள்ளேன். (விருது பெரும் அளவுக்கு ஏதும் எழுதவில்லை என்பதால்.. நான் என்பதிவுகளை பரிந்துரைக்கவும் இல்லை)

—-

உங்க நண்பர்களில் யாருக்காவது எதற்காவது வித்தியாசமான வாழ்த்து செய்தி அனுப்ப நினைத்தீர்கள் என்றால்.. http://www.sun7news.com என்ற தளத்திற்கு போய் ஒரு வாழ்த்து அனுப்புங்கள். எதிரில் இருப்பவர் அசந்துவிடுவார்கள். (நன்றி- துளசியம்மா)

———–

This entry was posted in விடுபட்டவை and tagged , . Bookmark the permalink.

50 Responses to விடுபட்டவை 19.01.09

  1. Pingback: சென்னை புத்தகக் கண்காட்சி 2009- ஜனவரி 8-18 வரை « …மற்றுமொரு துளையுள்ள பானை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.