wma பார்மட்டில் இருக்கும் ஆடியோவை MP3- ஆக.. மாற்ற ஏதவது இலவச மென்மொருள் கிடைக்குமா? பாதுகாப்பானதாகவும், தேவையற்ற வைரஸ்கள் வந்துவிடாததாகவும் இருந்து நீங்கள் பயன்படுத்திய இருந்தால் கொஞ்சம் சிரமம் பாரமல் சிபாரிசு செய்யுங்களேன்.

என்னிடம் அடாசிட்டி புதிய வெர்சன் இருக்கிறது. ஆனால்.. அதில் எப்படி பயன்படுத்துவது என்பதும் தெரியவில்லை. WMA பார்மட் ஓட மாட்டேன்கிறது.

—-

”பாம்புன்னு நெனைச்சு அடிக்கவும் முடியலை.. பழுதுன்னு நெனைச்சு தாண்டவும் முடியலை” இப்படியான சொலவடையை நீங்கள் நிச்சயம் கேட்டு இருப்பீர்கள். அது முதல்வர் கருணாநிதிக்கு.. மருத்துவர் ராமதாஸ் விசயத்தில் அப்படித்தான் இருக்கும் போல! இன்று ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் நடந்த பா.ம.க கூட்டத்தில் முதல்வரை பாராட்டுகிறாரா..  எச்சரிக்கை விடுகிறாரா.. அல்லது அசிங்கப்படுத்தினாரா.. என்பதை புரிந்துகொள்ள சிரமமாக இருந்தது. அதனாலோ என்னவோ கருணாநிதியும் உடனடியாக கடிதம் ஏதும் எழுதவில்லை. (டாக்டர் ராமதாஸுக்கும் என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. அ ஆ இ ஈ எ என்று சொல்லத்தொடங்கி எ ஈ இ ஆ அ என்று சொல்லி.. இ அ ஆ எ ஈ என்று சொல்லி முடித்தார். ஆதாவது சொன்னதையே திரும்பத்திரும்ப வேறு வேறு விதங்களில் சொல்லிக்கொண்டிருந்தார்) தாங்க முடியலை சாமீ!

உலகம் டாட் நெட் நண்பர்களால்.. பயர்பாக்ஸ் பயனர்களுக்கு ஒரு எழுத்துப் பிழை திருத்தி கிடைத்திருக்கிறது. http://code.google.com/p/tamilspellchecker/ முகவரியில் இருந்து எழுத்துக்கொள்ள முடியும். இதில் எப்படி புதிய சொற்களை இணைப்பது குறித்தும்.. இதனையே ஆப் லைனில் கணினியில் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யமுடியுமான்னு தெரியலை.  நீங்கள் போய் பார்த்து புதிய வார்த்தைகள் இணைக்க உதவுங்கள்.

கொஞ்ச நாளா நிம்மதியாக இருந்தேன். இப்போ திரும்பவும் பாகச ஆளுங்க வேலையை ஆரம்பிச்சுட்டாய்ங்க! 🙁 இனி என்னென்ன நடக்குமோ.. நினைச்சாலே கிலியா இருக்குது.


Comments

15 responses to “விடுபட்டவை 20.01.09”

  1. //கொஞ்ச நாளா நிம்மதியாக இருந்தேன். இப்போ திரும்பவும் பாகச ஆளுங்க வேலையை ஆரம்பிச்சுட்டாய்ங்க! இனி என்னென்ன நடக்குமோ.. நினைச்சாலே கிலியா இருக்குது.

    //

    Naanga Irukkom thala. Dont Worry!

    Ethukku bayappadanum!

  2. //என்னிடம் அடாசிட்டி புதிய வெர்சன் இருக்கிறது//

    Hondacity vaangaatha thalaiyai anbaga kadinthu kolgirom!

  3. //Naanga Irukkom thala. Dont Worry!

    Ethukku bayappadanum!

    //

    தலைக்கு பயமே நம்ப இருக்குறதுதான் :))

  4. ரங்கன் Avatar
    ரங்கன்

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்…….
    நீங்க இருக்குறதுதான் பயமே…!!
    ஆத்தா காப்பாத்து தாயே…!!

  5. ééகொஞ்ச நாளா நிம்மதியாக இருந்தேன். இப்போ திரும்பவும் பாகச ஆளுங்க வேலையை ஆரம்பிச்சுட்டாய்ங்க! 🙁 இனி என்னென்ன நடக்குமோ.. நினைச்சாலே கிலியா இருக்குது.éé

    do not worry. the canadian branch is flourishing nicely. we r looking fwd to ur return. ubuntu la thamiz nadanam aaduthu, unga nilama maathiriye. 😉

  6. நாமக்கல் சிபி Avatar
    நாமக்கல் சிபி

    //canadian branch//

    பா.க.ச கனடா கிளை!?

    :))

  7. wma பார்மட்டில் இருக்கும் ஆடியோவை MP3- ஆக.. மாற்ற ஏதவது இலவச மென்மொருள் கிடைக்குமா? பாதுகாப்பானதாகவும், தேவையற்ற வைரஸ்கள் வந்துவிடாததாகவும் இருந்து நீங்கள் பயன்படுத்திய இருந்தால் கொஞ்சம் சிரமம் பாரமல் சிபாரிசு செய்யுங்களேன்.
    ///

    yahoo mail லில் இருந்து இந்த alif_ahmed333@yahoo.com க்கு மெயில் அனுப்புங்க 6mb imtoo canverter அனுப்புகிறேன் 🙂

    நானும் பசக தொண்டன் தான் !!
    தல அஞ்சு பவுன் தங்க சங்கிலி தருவிங்கதானே 🙂

  8. //wma பார்மட்டில் இருக்கும் ஆடியோவை MP3- ஆக.. மாற்ற ஏதவது இலவச மென்மொருள் கிடைக்குமா? பாதுகாப்பானதாகவும், தேவையற்ற வைரஸ்கள் வந்துவிடாததாகவும் இருந்து நீங்கள் பயன்படுத்திய இருந்தால்//

    நான் பல வருடங்களாகப் பயன்படுத்திவரும் நல்ல, (அளவில்) சிறிய, பிரச்னையில்லாத மென்பொருள் “WM Converter”, wma to mp3 மட்டுமின்றி இன்னும் பல வடிவங்களை எளிதில் மாற்றும், முயற்சி செய்து பாருங்கள்!

    http://www.download.com/WM-Converter/3000-2194_4-10700602.html

    – என். சொக்கன்,
    பெங்களூர்.

  9. ஒய் ஆர் யு ஒர்ரியிங்க் தல.. இப்பத்தான் சங்கத்துக்கு புது ரத்தம் பாய்ச்சினதா எல்லோரும் பேசிக்கறாங்க. ஷார்ஜாவுக்கு ஒரு 10 லிட்டர் அனுப்பி வைக்க முடியுமா..

    இந்த வருட “பாலபாரதி விருதை” யாருக்கு தர்றதுன்னு பேசிக்கிட்டு இருக்கோம். அதுக்கும் சைடுல ஏதாவது மாலு வெட்ட முடியுமான்னு டிரை பண்ணுங்க‌.. (தயவுசெஞ்சு உங்களோட புக்கை அனுப்பி வைக்குறேன்னு சொல்லிடாதீங்க தல.. சங்கத்து பாசக்கார பயபுள்ளைங்க பயந்ததே அதைப் படிச்சுத்தானாம். இன்னமும் பைத்தியக்காரன் அதே எஃபெக்டுலதான் இருக்காரா! விவரத்தையே காணோம்)

  10. //(டாக்டர் ராமதாஸுக்கும் என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. அ ஆ இ ஈ எ என்று சொல்லத்தொடங்கி எ ஈ இ ஆ அ என்று சொல்லி.. இ அ ஆ எ ஈ என்று சொல்லி முடித்தார். ஆதாவது சொன்னதையே திரும்பத்திரும்ப வேறு வேறு விதங்களில் சொல்லிக்கொண்டிருந்தார்) //

    அவரும் பாகசவுல சேர்ந்துட்டாரா தல 🙂

  11. mp3mymp3 வச்சு எம்பித்ரியா ரெக்கார்ட் செய்து பாருங்க.. நான் கூட ஒரு போஸ்ட் போட்டேன்.. நுட்பம் ன்னு . .. 🙂

  12. //
    கொஞ்ச நாளா நிம்மதியாக இருந்தேன். இப்போ திரும்பவும் பாகச ஆளுங்க வேலையை ஆரம்பிச்சுட்டாய்ங்க! இனி என்னென்ன நடக்குமோ.. நினைச்சாலே கிலியா இருக்குது
    //

    நீங்க வேற.. செம குஜால இருக்கு..

  13. அன்பின் பாலபாரதி,

    நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்களின் இப்பதிவு http://www.tamilnenjam.org/2009/01/11.html உங்களுக்கு உதவுமென நினைக்கிறேன் நண்பரே !

  14. பாலபாரதி,

    // இதில் எப்படி புதிய சொற்களை இணைப்பது குறித்தும்.. //
    இது பயர்பாக்ஸ் நீட்சி என்பதால் ஆங்கில அகராதி எப்படி வேலை செய்கிறதோ அதே மாதிரி தான். டெக்ஸ்ட் ஏரியா என்பதில் வார்த்தைகளை எழுதிய பின், அது தமிழ் அகராதியில் இல்லை என்றால், அந்த வார்த்தையை ரைட் கிளிக் செய்து ”Add to Dictionary” என்பதை அழுத்தினால் வார்த்தைகள் அகராதியில் சேர்த்துக்கொள்ளப்படும்.

    // இதனையே ஆப் லைனில் கணினியில் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யமுடியுமான்னு தெரியலை. //
    இது பயர்பாக்ஸ் நீட்சி என்பதால், ஆப் லைனில் கணினியில் வேலை செய்யாது. அவ்வாறு செய்ய வேண்டுமானால், சில தொழில்நுட்ப வேலைகள் செய்ய வேண்டும்.

    // நீங்கள் போய் பார்த்து புதிய வார்த்தைகள் இணைக்க உதவுங்கள்//
    நீட்சியின் முதல் முதல் பதிப்பில், 14000 வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. அடுத்தக்கட்ட நடவடிக்கையாக 64000 வார்த்தைகள் தமிழ் விக்கீப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டு, தொகுத்து, தமிழ் அகராதியை உருவாகிறது. அது சோதனை தருவாயில் உள்ளன

    – உலகம்.net

  15. //இனி என்னென்ன நடக்குமோ.. நினைச்சாலே கிலியா இருக்குது.//

    ஹி ஹி ஹி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *