முத்துக்குமாரின் உடல் வீழ்ந்து கிடக்கும் சடலமல்ல..

தமிழர்களே! தமிழர்களே! என்னைத் தூக்கி கடலில் எரிந்தாலும் நான் கட்டுமரமாக மிதப்பேன். கவிழ்த்து விட மாட்டேன்’’ திரு. மு.கருணாநிதி.

தமிழின் சிறந்த வசனகர்த்தாவாகிய கலைஞர் கருணாநிதியின் மேற்கண்ட வசன வரிகளைப் போன்ற எத்தனையோ வசனங்களைக் கேட்டு ஏமந்த தமிழினத்தின் முன் நம் அவமானத்தின் சாட்சியமாய் பெருமிதத்துடன் கிடக்கிறது தோழர் முத்துகுமாரின் உடல். கருணாநிதி அரசின் கையாலாகாத் தனத்திற்கும் ரத்த வெறி பிடித்த சிங்கள பேரினவாத பாசிசத்திற்கும் முதுகில் குத்தும் இந்திய வல்லாதிக்கத்தின் துரோகத்திற்கும் எதிராய் தன் மரணத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் முத்துக்குமார் என்னும் இளம் போராளி. நெருப்பின் நாவுகளுக்கு சுவையாகிப் போன முத்துக்குமாரின் உடல் வீழ்ந்து கிடக்கும் சடலமல்ல. நம் மனச்சாட்சியின் முன்பு எழும்பி நிற்கும் கேளிக்குறி!

தன் மரணசாசனமாய் நமது இதயங்கள் முன்பும் அறிவின் முன்பும் முன் வைக்கப்பட்ட இந்த ஆவணம் மீண்டும் மீண்டும் வரலாற்றின் நியாயத்தைப் பேசுகிறது. மீண்டும் மீண்டும் நாம் மனிதராய் பிறந்ததற்கான மனிதராய் வாழ்வதற்கான அர்த்தத்தை உறுதிப்படுத்துகிறது. இன வெறுப்பு என்கிற குறுகிய எல்லைக்குள் சுருங்காமல் மாற்று தேசீய இனச் சகோதரர்களையும் தமது போராட்டத்திற்கான ஆதரவுச் சக்திகளாய் மாற்றுகிறது இந்த மரண சாசனம். இது முன் வைக்கும் கோரிக்கையும் உறையாடலுக்கான விருப்பமும் பாசிசத்தின் புள்ளிகளை தகர்ப்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

உலகு தழுவிய பேரன்பை தனது விடுதலைக்கான செய்தியாய் அறிவிக்கும் இந்த மரணசாசனத்தின் பின் முத்துக்குமாரின் ஆழ்ந்த வாசிப்பும் அரசியல் அவதானிப்பும் புலனாகிறது. கனமான கருத்தியல் தெளிவுடைய ஒரு போராளியின் மரணம் நிகழ்ந்திருக்கக் கூடாத அவலம்.ஆனால் நமது சுரணையை மீட்டெடுக்கவும் கருணாநிதி காங்கிரசின் துரோகத்தை அம்பலபடுத்தவும் இதைத் தவிர வேறு வழியும் வாய்ப்பும் இல்லை என்கிற சூழலில் இம்மாதிரி ஒரு முடிவிற்கு முத்துகுமார் வந்திருப்பார். என்று புரிந்து கொள்ளும் போது கண்ணீரும் கையறு நிலையுமே நம் வசம் எஞ்சியிருக்கின்றன. இன்றைய ஜனநாயகத்தின் கதவுகள் எவளவு தட்டினாலும் திறக்காத பாசிச கதவுகளாக மூடியிருப்பதன் விளைவு இந்த மரணம். மக்களின் உணர்ச்சிகளை மதிக்கத் தவறுகிற, அலட்சியம் செய்கிற அரசதிகாரத்தின் கோரமுகத்தை முத்துகுமார் அம்பலப்படுத்தி விட்டு தன்னை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.

முத்துக்குமார் நமக்கு கையளித்துப் போனது தனது உடலையும் சில கேள்விகளையும் மட்டுமல்ல. உலகமயமாக்கலின் சந்தை மனோபாவம் மற்றும் நுகர்வுக் கலாசாரத்தின் முன் தொலைந்து போன நம் அரசியல் உணர்வு குறித்த உசுப்பலையும்தான்.ஈழத்துச் சகோதர்களின் மரணங்களை மட்டுமே வேடிக்கையாய் அரசியல் விளையாட்டாய் நிகழ்த்திக்காட்டியவர்களே! அந்த பிணவாடை மட்டுமே உங்கள் வேட்கையை தணிக்காது என்றுதான் இன்று முத்துக்குமாரும் பிணமாகியிருக்கிறார்.

உங்கள் அரசியல் சதுரங்கத்தில் காய்களாய் நகர்த்த இன்னும் எத்தனை பிணங்கள் உங்களுக்குத் தேவை? தமிழனத்தலைவரே! புரட்சித் தலைவியே! உங்களுக்குப் பல்லக்குச் சுமக்க, பாராட்டுக் கூட்டம் நடத்த, பட்டம் அளிக்க, இன்னும் எத்தனை பாடைகளை நாங்கள் தயார் செய்ய வேண்டும்.

ராஜபக்ஷே விருந்தின் கோப்பைகளில் மட்டுமல்ல வரவிருக்கும் தேர்தல் கால தேநீர் விருந்துகளிலும் எங்கள் ரத்தம் நிரப்பித் தருகிறோம். பாசிசப் பசியாறுங்கள். மத்திய மாநில அரசுகளின்மீது நாங்கள் நம்பிக்கை இழக்கிறோம் என்பதையும் கருணநிதி,ஜெயலலிதா இருவரையும் ஈழப் போராட்டத்திலிருந்து சமதூரத்தில் விலக்கி வைக்கப்பட்ட நேரிட்டிருக்கும் சூழலையும் முத்துக்குமாரின் தியாகத்தின் முன் பிரகடனப் படுத்துகிறோம்.

ரத்தத்தின் அடத்தியால் எழுதப்பட்ட இந்த மரண சாசனத்தை தமிழர்களின் மனச்சாட்சி முன் வைக்கிறோம். அது தன்னெழுச்சியாய் நடக்கும் தமிழ் மக்களின் போராட்டங்களை மேலும் விரிவுபடுத்தும் என்ற நம்பிக்கையுடன்.

முத்துக்குமாருக்கு வீரவணக்கம்.

பாசிசத்துக்கு எதிரான பத்திரிகையாளர் மன்றம்.
தமிழ்நாடு.

—————

காலமும் ஆகிவிட்ட முத்துக்குமாரின் மரணசாசனத்தை அச்சிட்டு விநியோகித்து வரும்
பாசிசத்துக்கு எதிரான பத்திரிகையாளர் மன்றத்தின் பிரசுரத்தின் முதல்பக்க அறிக்கையிலிருந்து…


Comments

11 responses to “முத்துக்குமாரின் உடல் வீழ்ந்து கிடக்கும் சடலமல்ல..”

  1. வெற்றி Avatar
    வெற்றி

    பாலா,
    பாசிசத்திற்கு எதிரான பத்திரிகையாளர் மன்றத்தின் பிரசுரத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  2. balugpgp Avatar
    balugpgp

    தாங்கள் கலைஞரைவிட தமிழினத்துக்கு அதிகமாக அற்பனிப்புடன் செயல்படுவதாகவும் அவர் கையலாகாதவர் என்று கூறுபவர் எந்தவிதத்தில் என்று கூறமுடியுமா அல்லது ஜெயலலிதாவை திருப்திபடுத்துவதற்காக இது போன்று பேசுகிறீர்களா உங்களை போன்றவர்களை தமிழ் மக்கள் காலதாமதமாக புரிந்துகொண்டிருக்கிறார்கள் எனவே இனிமேலும் இது போன்று பேசி நாங்கள் உங்கள் மேல் வைத்திருக்கும் மரியாதையை கெடுத்துக்கொள்ளாதீர்கள்‍‍ ‍.
    பஞ்சசீலக்கொள்கையை ஆதரிக்கும் நாடு இந்தியா

  3. yaro oru thamilan Avatar
    yaro oru thamilan

    உங்களிடம் என்ன செயல்திட்டம் உள்ளது.
    ஈழத்தமிழருக்கு இத்தகைய உணர்ச்சி பெருக்கெடுத்து
    ஒடும் அறிக்கையால் என்ன பயன். தீக்குளிப்பது எதையும்
    தீர்க்காது

  4. Prakash Avatar
    Prakash

    Boycott Tamil Nadu Medias, which Boycotts Eelam related News and act as mouthpiece of Shingala Sri Lankan Govt & it’s co-brother Indian Govt headed by Cong, supported by the back-stabber DMK.

    Need to boycott Sun Picture Movies & TV all across World by Tamils, until they cover Eelam related news and Tamil’s Protests all across World.

    NRI Tamils and Eelam Tamils living abroad and their organizations should communicate this to SUN TV. If their business get affected, and sure they’ll change their stand

  5. Prakash Avatar
    Prakash

    Government has Closed All Colleges and Hostels, Now what can be done:
    1. Students will return to their Native Places
    2. In each and every Towns and Villages, these students should form “College Going Students Association”
    3. Irrespective of their colleges, be it Law or Arts or Medical and locations i.e Chennai College, Madurai College etc , All the Students from one native place to become part of that Association.
    4. By this way of Associating College students at Native Place itself, they can take forward their agitation and spread the news in nearby places.
    5. This will ensure the spreading of Tamils Agitation in each and every place in Tamil Nadu and teach lessons for Congress, it’s slave DMK and ADMK in the Coming Parliament Election.
    6. Note: At native places, there is chance for Caste and religions gaps. Students should trash those gaps and unite for this Tamil Nobel Cause

  6. ஆர். முத்துக்குமார் Avatar
    ஆர். முத்துக்குமார்

    //கேளிக்குறி//

    பாலா,

    அவர்கள் எழுத விரும்பிய வார்த்தை, கேள்விக்குறியா? அல்லது கேலிக்குறியா?

  7. பகிர்ந்தமைக்கு நன்றி!

  8. More than 5,000 shells fired on civilians, casualties uncountable
    [TamilNet, Monday, 02 February 2009, 16:47 GMT]
    Sri Lanka Army (SLA) fired artillery shells throughout the whole day on Monday from all directions into civilian refuges. At least one hundred civilians would have been killed or maimed in the indiscriminate barrage. The casualties are uncountable as the whole population is forced to reside inside the bunkers throughout the whole day, reports TamilNet correspondent from the safety zone. “Monday was the worst day of SLA shelling so far within the safety zone.”

    More than 5,000 artillery shells and Multi Barrel Rocket Launcher (MBRL) rockets have been fired by the SLA.

    Both the hospitals at Puthukkudiyiruppu (PTK) and Udaiyaarkaddu have been hit by the shelling also on Monday.

    Thousands of shells have hit Theavipuram, Va’l’lipunam, Chuthanthirapuram, Udaiyaarkaddu and Puthukkudiyiruppu.

    Heavy fighting was reported in all the frontiers.

    AN URGENT APPEAL TO EVERY ONE
    Srilankan army is right now shelling and killing tamil civilians,latest news says within a short period they have fired nearly 10,000 shells towards civilians.
    please tamil nadu people ! do something to stop this killing spree by srilankan army ,ask indian government which is helping srilankan govt for justice.

    UN has a duty to protect civilians when their own govt is not doing it.
    In srilanka’s case it is killing it’s own civillians which is a war crime.
    I herewith let you know what the UN charter says about R2P- RESPONSIBILITY TO PROTECT.

    UN R2P
    The Responsibility to Protect populations from genocide, ethnic cleansing, war crimes and crimes against humanity is an international commitment by governments to prevent and react to grave crises, wherever they may occur. In 2005, world leaders agreed, for the first time, that states have a primary responsibility to protect their own populations and that the international community has a responsibility to act when these governments fail to protect the most vulnerable among us.

    The Responsibility to Protect-Engaging Civil Society (R2PCS) project works to advance Responsibility to Protect (R2P) and to promote concrete policies to better enable governments, regional organizations and the U.N. to protect vulnerable populations.

    The right way to pay our respect to Muthukumar is to take action on behalf of eelam tamils

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *