விடுபட்டவை 13 மார்ச் 2009

இன்று என்னை மிகவும் பாதித்த விசயம் நிரஞ்சன் குமார் என்ற சாப்ட்வேர் இன்ஜினியரின் செயல்தான். (சுட்டியை க்ளிக் செய்தால் விபரம் படிக்க முடியும்.) எம்.ஈ.  படித்து விட்டவருக்கு இப்படியான காரியத்தை செய்ய எப்படித்தான் மனம் வந்ததோ தெரியவில்லை. நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்தவரை பார்த்தேன். பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தையை கொன்றுவிட்ட வருத்தம் கொஞ்சம் கூட அவரிடம் இல்லை. வாழ்க்கையை அனுபவிக்கவேண்டிய வயதில் இப்படி குழந்தையோடு என் மனைவி இருப்பது பிடிக்கவில்லை. என்னோடு ஜாலியாக(!) இல்லாமல்.. இனி அவள் குழந்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாள் என்பதை தாங்க முடியவில்லை, பி.ஈ. படித்துவிட்டு வீட்டிலேயே இருப்பதா.. வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டாமா என்றெல்லாம் சொல்லி இருக்கிறான். என்ன படித்து என்ன செய்ய.. எங்கே போகிறது நம்நாடு! :((

தேர்தல் நேரம் தொடங்கி விட்டது. குதிரை பேரங்களும் ஆரம்பித்துவிட்டார்கள். அணி தாவுவதும், கட்சி மாறுவதும் அடிக்கடி நடக்கும். திருமாவளவன் சிதம்பரம் தொகுதிக்கு அடிபோட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்கா/ பத்தா என்ற இழுபறியில் இருக்கிறார் விஜயகாந்த் என்கிறார்கள். ராமதாஸும் கூட அதே நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இனி கொஞ்ச காலத்திற்கு யூகங்களின் அடிப்படையில் செய்திகள் பரபரப்பாகும். அதே சமயம் பெரியார் திராவிட கழகம் வெளியிட்டிருக்கும் ஈழப்பிரச்சனை குறித்தான குறுவட்டு பட்டி,தொட்டி எங்கும் பரவினால்.. காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் மண்ணைக் கவ்வும் என்றும் சொல்லப்படுகிறது.. பார்க்கலாம்.

—-
காவல்துறையின் அக்கிரம அராஜக தாக்குதலுக்கு உள்ளான வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். தி.மு.கழக வழக்கறிஞர்கள் வேலைக்கு திரும்பியும் ஆச்சு. புதிய தலைமை நீதிபதி கோகலேயுடன் வழக்கறிஞர்களின் பேச்சு வார்த்தை திருப்தி ஏற்பட்டமாதிரி தெரியவில்லை. பிப் 19ம் தேதி சம்பவத்திற்கு பிறகு ஐகோர்ட் ஆவின் வாசல் பக்கம் சாலையை மறித்து பந்தல் போட்டு, தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்று வழக்கறிஞர்கள் தர்ணா நடத்திக்கொண்டிருந்தார்கள். அதன் பின் அவர்கள் தங்களின் அடுத்தகட்ட போராட்டம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, மறிக்கப்பட்ட சாலையில் பாதி தூரம் வந்துவிட்டார் ஒருவர். மேற்கொண்டு போகக்கூடாது என்று சில வழக்கறிஞர்கள் அவரை தடுத்து சொல்லிக்கொண்டிருந்த போது, ஸ்கூட்டர்காரர் பந்தலுக்கு அருகில் இருந்த இடம் வழியாக போய் விடுவேன் என்று சொன்னார். இவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. ஏன் போகக்கூடாது என்று கேட்டு முடிக்கும் முன்பாக தர்ம அடிகள் விழத்தொடங்கியது ஸ்கூட்டர்காரருக்கு! 🙁 கீழே விழுந்தவர் எழுந்து வண்டியை திருப்பிக்கொண்டு வந்த வழியே போய் விட்டார். இது போன்ற சிலரின் இந்த போக்கு தான் ஒட்டுமொத்த வழக்கறிஞர்களின் போராட்டத்தையும் பொதுமக்களிடம் கொண்டுபோய் சேர்க்காமல் தடுக்கிறது. தாக்குதலுக்கு உள்ளாகி கிட்டதட்ட ஒரு மாதம் ஆகப்போகும் சூழ்நிலையிலும் மக்களிடம் ஏதும் பெரிய அனுதாபத்தை ஏற்படுத்தவில்லை என்பதே வருத்தமான செய்தி. சட்டம் படித்தாலும் நீங்களும் பொதுமக்கள் தான் என்பதை உணருங்க சாமீ!

—-
சென்னையில் திருநங்கைகளுக்கென ஒரு புதிய ஹெல்ப் லைன் தொடங்கப்பட்டிருக்கிறது. மனசு என்று பெயர் வைத்திருக்கிறார்கள். திருநங்கைகளுக்கு வேலை கொடுக்க தயாரக இருப்பவர்கள் தொடங்கி, தன் வீட்டு பையனிடம் தெரியும் மாற்றம் குறித்து பேச, திருநங்கைகள் என்பவர்கள் யார் என்ற எல்லாவிதமான கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என்கிறார்கள். குறித்து வைத்துக்கொள்ளுங்கள். 044-25990505 (அனேகமாக இச்சேவை இப்போது சென்னையில் மட்டும் தான் தொடங்கப்பட்டிருக்கிறது.) தமிழகம் முழுவதற்குமான ஒரு எண்ணாக மாற்றினார்கள் என்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


Comments

12 responses to “விடுபட்டவை 13 மார்ச் 2009”

  1. //இன்று என்னை மிகவும் பாதித்த விசயம் நிரஞ்சன் குமார் என்ற சாப்ட்வேர் இஞ்னியரின் செயல் தான்.//

    ஜீரனிக்க முடியவில்லை தல

    ஒரு குழந்தைக்காக ஏங்கி கோயில் குளம் என்று சுற்றுபவர்கள் எத்தனை பேர். அவர்களிடம் இந்த குழந்தையை தத்து கொடுத்திருக்கலாமே

  2. ஆமா..டாக்டர் சார்.. மனசே சரி இல்லை. நீங்கள் சொன்னதுமாதிரி செய்திருக்கலாமே என்றதற்கு அவன், அப்படி கொடுத்தால் கண்டுபிடித்து கொண்டு வந்துவிடுவார்கள்’ என்று சொன்னானாம். -விசாரித்த அதிகாரி வருத்ததோடு பகிர்ந்துகொண்டார்.

  3. வாங்க தல…

    பல நாட்களுக்கு பிறகு…?

    காங்கிரஸ் மண்ணைக்கவ்வாது விடுவதற்கு இன்னமும் சந்தர்ப்பம் இருக்கிறதா…

  4. johan-paris Avatar
    johan-paris

    குழந்தை பெறுவதைத் தள்ளிப் போட்டிருக்கலாம்.
    புரியவேயில்லை. இந்த மனநோய் பற்றி!!! எல்லாம் படித்தும் உலகத்தைப் படிக்கத் தவறிவிட்டார்.

  5. பெரியார் திராவிட கழகம் வெளியிட்டிருக்கும் ஈழப்பிரச்சனை குறித்தான குறுவட்டு இணையத்தில் கிடைக்குமா? எனக்கு ஒரு வட்டு கிடைத்தால் பதிவேற்ற இயலும்.

  6. //பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தையை கொன்றுவிட்ட வருத்தம் கொஞ்சம் கூட அவரிடம் இல்லை. வாழ்க்கையை அனுபவிக்கவேண்டிய வயதில் இப்படி குழந்தையோடு என் மனைவி இருப்பது பிடிக்கவில்லை.//

    என்னங்க இது….! ஜீரணிக்கவே முடியவில்லை…….

  7. கணவன் மனைவியர் இடையே நிகழும் பிரச்சனைகளுக்கு கணவனின் தாய் தந்தையோ, மனைவின் தாய் தந்தையோ இடையில் புகுந்தால் இப்படித்தான் ஏடாகூடமக ஏதாவது நிகழும். கருத்தரிப்பதைத் தடை செய்ய எத்தனையோ மருந்து இருக்கிறது. உரைகள் தினுசு தினுசாகக் கிடைக்கிறது என்பது கூடத் தெரியாமல் ஒரு மனிதன் 29 வயது வரை வாழ்ந்திருக்கிறான் என்றால் அவன் வாழவே தகுதியில்லாதவன்.

    இப்படிப்பட்டவர்களையெல்லாம் கொல்வது சட்டப்படி குற்றம் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் இவர்களெல்லாம் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்.

  8. பாலா,
    நீங்க இன்னமும் வழக்கறிஞர்களின் பக்கம் பேசுவது எனக்கு ரொம்ப விந்தையாக இருக்கு.. அவங்களுக்கு என்ன கொம்பா முளைத்து இருக்கு? அவனுங்க பண்ண அராஜகத்துக்கு இது ரொம்ப கம்மி..

    நீதிமன்றத்துக்குள் போலீஸ் வரக்கூடாது என்றால் யார் அங்கே சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது? அவங்க செய்தது எந்த விதத்தில் நீங்க நியாயமுன்னு சொல்றீங்க?

  9. K.S.Nagarajan Avatar
    K.S.Nagarajan

    //எம்.ஈ. படித்து விட்டவருக்கு இப்படியான காரியத்தை செய்ய எப்படித்தான் மனம் வந்ததோ தெரியவில்லை.//

    இது என்ன அநியாயம்.. மனத்தெளிவுக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தம்?

  10. எஸ்.பா: நேற்று ‘மனசு’ ஹெல்ப்லைன் விளம்பரம் ஒன்று தொலைக்காட்சியில் பார்த்தேன். திருநங்கைகளுக்கும் வீடு வாடகைக்கு விடச் சொல்லி சிபாரிசு செய்தார்கள். விளம்பரம் இன்னும் ‘catchy’ஆக இருந்திருக்கலாம். ஆனாலும் இப்படி தொலைக்காட்சிகளில் இவர்கள் குறித்த சமூக விழிப்புணர்வு விளம்பரங்கள் அத்யாவசியமான நல்ல ஆரம்பம். நிறைய பேரைச் சென்றடையும்.

  11. இவான் Avatar
    இவான்

    இன்று காலை பேப்பர் புரட்டிய போது பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தையை கொன்ற செய்தியைப் படித்து பதறி விட்டேன். எப்படித்தான் பச்சிளம் குழந்தையைக் கொல்வதற்கு மனசு வந்ததோ அந்த நாய்க்கு. இன்று நன்பர்கள் மூலமாக வந்த இன்னோரு செய்தியும் எனக்கு ஒரு விசயத்தை உணர்த்தியது.

    “இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள அனேக பேர் பெரிய சைக்கோக்களாக அலைகிறார்கள்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *