உலகம் கொண்டாடும் குட்டிக் கடற்கன்னி கதை தமிழில்!

kadalkanni_wr

ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் – சிறுவர் இலக்கிய உலகில் பெரிய அளவில் போற்றப்படும் முக்கியமான படைப்பாளி.

இவரது பல கதைகள் உலகின் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கூடவே அனிமேஷன் படங்களாகவும், சினிமாகவும் எடுக்கப்பட்டுள்ளன. சிவரது படைப்புகளில் எல்லோரும் மறக்காமல் சொல்லுவது குட்டிக்கடற்கன்னி என்ற சிறிய நாவலைத்தான்.

இந்த உலகில் கடலைக்கண்டு வியக்காதவர்கள் இருக்க முடியாது. அந்தக்கடலில் நுரை பொங்கும் அலைகளையும் பார்த்திருப்போம். கடலின் நுரைகளுக்குப் பின் ஒரு கதை இருக்கிறது. அதுவொரு குட்டிக் கடற்கன்னியின் வாழ்க்கைக்கதை. கடலுக்குள் இருக்கும் வரை மரணமில்லாத வாழ்வு பெற்ற குட்டிக்கடற்கன்னி தனது களங்கமில்லாத அன்புக்காகக் கரையேறத்துணிகிறாள். இக்கதை வாசிக்கும் நம்மை அவளது அன்பு பாதிக்கும். நூலை மூடிவைத்த பின்னும் இக்கதையைப் பற்றியே கொஞ்ச நேரம் யோசித்துக்கொண்டிருப்போம்.

டென்மார்க்கில் நிறுவப்பட்டுள்ள கடற்கன்னி
டென்மார்க்கில் நிறுவப்பட்டுள்ள கடற்கன்னி

உண்மையில் இக்கதையின் மிகப்பெரிய வெற்றி என்ன தெரியுமா? குட்டிக்கடற்கன்னிக்கு டென்மார்க்கின் கடற்கரையொன்றில் தாமிரச்சிலையை நிறுவி உள்ளனர். இச்சிலைப் பல அரசியற்காரணங்களுக்காக பாதிப்புக்குள்ளாகும் போதும், அரசு உடனடியாக இச்சிலையை மீட்டு, பாதுகாத்து வருகிறது என்றால் இக்கதாபாத்திரத்தின் மீது அம்மாக்களுக்குள்ள அன்பை உணர்ந்துகொள்ள முடியும்.

தமிழ் வாசிக்கத்தெரிந்த 8 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் வாசிக்க ஏதுவான நூல். மூலத்தின் அழகு குன்றாமல் தமிழில் இக்கதை வானம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கதைகளுக்குச் சிறப்பான ஓவியங்களும், நூலின் வடிவமைப்பும் வாசிப்பவர்களை மகிழ்ச்சி அடையச்செய்யும்.

நூல்: குட்டிக்கடற்கன்னி
தமிழில்: தமிழ்செல்வன்

விலை:- 40/-
வெளியீடு: வானம் பதிப்பகம் (9176549991)

#thamizhbooks #thamizhbookscbf

#வாசிப்பு #வாசகப்பரிந்துரை #சிறுவர்_நூல்