பயர்ஃபாக்ஸ் சிறந்தது ஏன்?

நீங்கள் பயன் படுத்தும் இணைய உலாவி எது? இண்டர்நெட் எக்ஸ்ஃப்ளோளர் என்றாலும் சரி அல்லது பயர்பாக்ஸ் என்றாலும் சரி.
கீழே சொல்லப்படுகின்ற செய்திகள் உங்களுக்கு பயன் படலாம்.

1. மற்ற உலாவிகளை விட பயர்பாக்ஸ் பாதுகாப்பானது. இதன் மூலம் நாம் இணையத்தை அணுகும் போது.. அந்த பக்கத்தில் இருக்கும் படங்களால் பக்கம் டவுண்ட்லோடு ஆகா.. நேரம் அதிகம் செலவாகும். படத்தினை விட நமக்கு செய்தி முக்கியமானதாக இருக்கலாம். அப்படியான தருணங்களில் பயர்பாக்ஸ் செட்டிங் பகுதியில் படங்கள் தேவையில்லை என்ற பொத்தானை நாம் க்ளிக் பண்ணி இருந்தோமேயானால்.. வலைப்பக்கம் இலகுவாக திறந்துகொள்ளும்.

2. பயர்பாக்ஸ் பாவிப்பவராக இருந்தால்.. எ-கலப்பை மாதிரியான எந்த மென்பொருளையும் தேடி ஓட வேண்டியதில்லை. தமிழ்விசை என்ற செயலியை நிறுவிக்கொண்டால் போதும்.. ஆறு வகை தட்டச்சு முறைகள் கொண்ட தமிழ் எழுதி கிடைத்து விடும். இதை எ-கலப்பை நிறுவுவதை விட வேகமாக நிறுவிக்கொள்ள முடிகிறது. மேலும் வீடு,அலுவலகம் தவிர்த்து ப்ரவுசிங் செண்டர் மாதிரியான இடங்களிலும் பயர்பாக்ஸை பயன்பாட்டுக்கு உள்ளன. அங்கேயும் இதனை சிலவினாடிகளில் நிறுவிக்கொண்டு தமிழில் நாம் விரும்பும் தட்டச்சு முறையில் எழுதில் தமிழில் தட்டச்சு செய்துகொள்ளலாம்.

3. பயர்பாக்ஸ் தமிழிலும் கிடைக்கிறது. இதில் எல்லா செயல் முறைகளும் தமிழில் இருப்பதால் பாவிப்பது மிக எளிது.

4. வேலை பார்க்கும் போது பாடல் கேட்டும் பழக்கமுடையவரா நீங்கள்..?, பயர்பாக்ஸ் உலாவியில் இசையை கேட்டுக்கொள்ளக்கூடிய ப்ளேயேரையும் நிறுவிக்கொள்ள முடியும். இதன் மூலம் நீங்கள் இணையத்திலும் பாடல் கேட்கலாம். அல்லது உங்கள் கணினியில் சேமிப்பில் இருக்கும் பாடல்களையும் கேட்கலாம்.

4. ஜிமெயில் அல்லது யாஹூ மெயில் உபயோகிப்பவராக இருந்தால் அதற்கனா செயலியை இயக்கிவிட்டால் உங்கள் உலாவியின் மூலையிலேயே மெயில் வந்த தகவல்களை பெற முடியும். தனியாக அந்தந்த தளங்களுக்குச் சென்று எட்டிப்பார்க்க வேண்டிய அவசியமில்லை.

5. பயர்பாக்ஸில் TAB மூலம் அடுத்த சாரளத்தை திறப்பவரா நீங்கள். எத்தனை சாரளங்கள் திறந்து வைத்திருந்தாலும் அத்தனை சாரளங்களையும் ஒரே பக்கத்தில் பார்ப்பதற்கான செயலியும் கிடைக்கிறது.

6. அது போல TAB களுக்கு மாறும் போது 3D தோற்றத்தை தரும்படியான செயலி அசத்துகிறது.

இவை தவிர.. நாம் பார்க்கும் தளம், மெயில் போன்றவற்றில் இருக்கும் தேவையற்ற ஜாவா ஸ்க்ரிப் போன்றவைகளை செயல்படாமல் தடுக்கவும், எச்சரிக்கை விடுக்கவும் கூட செயலிகள் இருக்கின்றன.

இவை போன்ற ஏகப்பட்ட செயலிகள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றைப் பற்றி அறிந்துகொள்ள இந்த பக்கத்திற்கு அடிக்கடி எட்டிப்பார்த்தால் போதும்.

————

இது பூங்காவில் தொகுக்கப்பட்டிருக்கிறது.

http://poongaa.com/content/view/1770/1/


Comments

19 responses to “பயர்ஃபாக்ஸ் சிறந்தது ஏன்?”

  1. சூப்பர் தல.. கலக்குறீங்க 🙂

  2. எட்டிப்பார்த்திட்டேன்.

  3. தகவலுக்கு நன்றி. மற்ற எல்லாம் தெரிந்தாலும் இந்த முப்பரிமாண சாளரம் வழிமறை தெரியாது. அதே போல் சிலகாலமாய் பாவிக்க விரும்பிய தமிழ்விசையும் நிறவி சோதனை பண்ணியாச்சு(இந்த பின்னூட்டம் தான் ). \

    வார்ப்புரு அழகா வந்திருக்கு.

    சத்தியா.

  4. என்னாச்சு..wordpress, firefox னு தொடர்ந்து நம்ம கட்சிக் கொள்கைகளைப் பரப்பிட்டு வர்றீங்க 🙂 speed, safety, personalisation, portable, stable, feature-rich, user-friendly, free, platform independent..இப்படி அடுக்கிக்கிட்டே போகலாம்..firefox பெருமைய..

  5. ம்ஹூம். நீங்கள் குறிப்பிட்டிருப்பவை சரியான தரவுகள் அல்ல.

    * பாதுகாப்பானது – இது பயனர் வைத்திருக்கும் settingsஐப் பொறுத்தது. உண்மையில் IEயையும் firefox அளவுக்குப் பாதுகாப்பானதாக மாற்றிக்கொள்ள முடியும், ஒரு Tools->Options சென்று ஒரு சில மாற்றங்களைத் தேர்ந்தெடுத்தாலேயே போதும்.

    * படங்கள் பதிவிறங்குவதைத் தடுத்தல் – இந்த வசதி IE 4.0 பதிப்பிலிருந்தே இருக்கிறது

    * எ-கலப்பை தேவையில்லை,பாடல்கள் கேட்பது, email notifier – ஜிமெய்ல், யாஹு மெய்ல் (Yahoo mail Plusதானே சொல்கிறீர்கள்? வெறும் யாஹு மெய்ல் படிக்க எந்த pluginஉம் நான் கேள்விப்பட்டதில்லை. இருந்தால் எனக்கும் அறியத்தாருங்கள்) மட்டுமல்ல, எல்லா அஞ்சல்களையுமே email notifier படிக்கும். ஆனால் இவை எல்லாம் plugins. internet explorerக்கும் இது போன்று பல plugins இருக்கின்றன, தமிழில் தட்டச்சடிப்பதைத் தவிர. நேரமும், நல்லதொரு வேலையும் கிடைத்தால் நிச்சயம் நான் இத pluginஐ உருவாக்குவேன். 🙂

    * தமிழில் ஃபயர்ஃபாக்ஸ் – ‘பாவிப்பது மிகவும் எளிது’ என்று சொல்கிறீர்கள். குறைந்தது எனக்கு அப்படித் தோன்றவில்லை. நான் காண்பித்த யாரும் கூட அப்படிச் சொல்லியதில்லை. தமிழில் பார்க்கும்பொழுது கிடைக்கும் ஒரு மகிழ்ச்சி மட்டுமே எனக்குக் கிடைத்தது. locale switcher என்ற firefox extensionஐ நிறுவி மீண்டும் முதல் வேளையாக ஆங்கிலத்துக்கு மாற்றியவுடன் தான் வசதியாகப் பயன்படுத்தவே முடிந்தது. அது கிடக்கட்டும். ஃபயர்ஃபாக்சில் out-of-the-box தமிழ் support கூட இல்லை. தமிழ் இடைமுகப்பு இருக்கட்டும், தமிழ்த்தளங்களே firefoxஇல் சரிவரத் தெரியாது, indic support நிறுவினாலொழிய. இதெல்லாம் இயங்குதளக்குறைபாடு என்று சொல்லத் தோன்றலாம், அப்பறம் எப்படி IEயில் indic support enable செய்யாமலேயே சரியாகத் தெரிகிறது?
    tabbed browsing – இது IEயிலும் இருக்கிறது.

    * 3D தோற்றத்தைத் தரும்படியான செயலி அசத்துக்றதுதான், ஆனால் இதனால் எந்த விதத்திலும் ஃபயர்ஃபாக்ஸ்தான் சிறந்தது என்று சொல்லமுடியாதே…

    * ஜாவாஸ்க்ரிப்டை தடுக்க/எச்சரிக்க – இதுவும் IEயின் மிகப்பழைய பதிப்பிலிருந்தே இருந்துவரும் ஒரு feature

    இன்னொரு விஷயம், Internet Explorer என்பது வெறும் உலாவி மட்டும் அல்ல, அது ஒரு மிகப்பிரம்மாண்டமான செயலி. firefoxஅயும் internet explorerயும் ஒப்பிடுவதே மிகப்பெரிய தவறு. Internet Explorerஉம் Mozillaவும் ஒப்பிடத்தக்கன. வெறும் இணயத்தளங்களைப் பார்வையிடுவது என்றால் ஃபயர்ஃபாக்சுடன் ஒப்பிடுதல் சரி.

    Firefox நீட்சிமைக்கு ஒத்திசைவானது. Internet Explorer நீட்சிமையை மனதில் கொண்டே உருவாக்கப்பட்டது. இதன் ஆர்க்கிடெக்சர் பற்றி அறிய: http://msdn2.microsoft.com/en-us/library/Aa741312.aspx

    எனக்கென்னமோ விண்டோசை உருவாக்கிய Microsoftஇன் product என்ற கோணத்திலேயே பலரும் Internet Explorerஐ அணுகுவதாகத் தோன்றுகிறது.

    க்ருபா (ஃபயர்ஃபாக்சிலிருந்துதான் இந்த பின்னூட்டத்தைப் போடுகிறேன்)

  6. வணக்கம் தல.. நல்ல நச்சுன்னு சொல்லி இர்க்கீங்க..

  7. பொன்ஸ், குமார், மற்றும் சத்தியா வருகைக்கு நன்றி!

  8. என்ன எல்லாருமே ஒரே நேரத்துல பின்னூட்டம் இட்ட மாதிரி காமிக்கிறது? approved dateஐ எடுத்துக்கொண்டிருக்கிறதா?

  9. <![CDATA[sinthanadhi]]> Avatar

    பாலா

    கொஞ்சம் பயர்பாக்ஸ் ஆய்வே செஞ்சிருக்கீங்க போல இருக்கு….

    =========

    கிருபா

    நீங்கள் ஐஈ-7 பற்றி கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அதற்கு முந்திய பதிப்புகள் தான் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகின்றனர். அவற்றை விட பயர்பாக்சின் பயன் அதிகம் என்று தான் தோன்றுகிறது. (நீட்சிகளுடன் இணைந்து).

    நீங்கள் சொன்னபடி ஐஈ நீட்சியை உருவாக்க முடிந்தால் நல்லது.

    பிரவுசர் என்ற அளவில் தான் பயர்பாக்ஸ் ஒப்பிடப் படுகிறது.

  10. சிந்தாநதி,

    தற்போதைய பதிப்புடன்தான் ஒப்பிடல் இருக்கவேண்டும் இருக்கவேண்டும் என்று நினைத்தேன். IE 7.0ல் tabbed browsing inbuilt supportஆக இருக்கிறது. பழைய பதிப்புகளிலும் tabbed browsing வரவழைக்க முடியும். ஆனால் அது தவிர நான் சொல்லிய எல்லாமே பழைய IE பதிப்புகளுக்கும் பொருந்தும்.

  11. அப்புறம், நீட்சிகளையும் இணைத்துத்தான் என்றால், இரண்டுக்குமே எல்லா நீட்சிகளையுமே கணக்கில் கொள்ளவேண்டும், இல்லையா? அந்த விதத்தில் பார்த்தால் (fantacy வகை நீட்சிகள் தவிர்த்து… உதாரணமாக 3D tabbing) இரண்டிலுமே நிறைய இருக்கின்றன. Firefoxக்கு நீட்சிகள் போல IEக்கு BHO.

  12. என்னென்னமோ சொல்லியிருக்கீங்க! பெரிய கடல் போல தெரியுது! நான் இப்பத்தான் கரையிலிருந்து கால் நனைச்சிருக்கேன்.

  13. <![CDATA[Voice on Wings]]> Avatar

    க்ருபா சொல்வதுடன் பெரும்பாலும் உடன்படுகிறேன். என் பார்வையில் Firefox ஏன் IEஐ விட சிறந்தது என்றால்:

    – பாதுகாப்பு: முதலில், IE ஆதரிக்கும் ActiveX நுட்பம் தகராறு பிடித்தது மற்றும் கணினியின் பாதுகாப்பை சமரசம் செய்யக் கூடியது என்று அறிகிறேன்.

    – நீட்டும் வசதி: Plugins எனப்படும் (சற்று சிக்கலான) வெளி நிரலிகள் அல்லாது, உலாவியின் செயல்பாட்டையே (எளிய) நீட்சிகள் (extensions) கொண்டு அதிகரிக்கும் ஆற்றல். (IEஇன் BHO பற்றி விக்கிபீடியா கட்டுரை. Concerns, Spyware, Removal tools என்று அல்லோல கல்லோலப் படுகிறது :))

    – Updates: Firefoxஇன் புதிய பதிப்புகள் வெளியாகும்போதெல்லாம் தானாகவே நம் கணினியிலுள்ள பதிப்பும் மேம்படுகிறது. ஆகவே, Firefox பயன்படுத்துபவர்கள் அனைவருமே அதன் கடைசியாக வெளிவந்த பதிப்பையே பயன்படுத்துகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். IEஐப் பொறுத்த வரை, IE5இலிருந்து IE6க்கு மாறுவது, அல்லது IE6இலிருந்து IE7க்கு மாறுவது என்பதெல்லாம் நம் கணினிக்கு பெரிய மாற்றங்களாகும். பெரிய கோப்புகளை தரவிறக்குவது, கணினியை restart செய்வது என்று பராமரிப்பு வேலைகள் அதிகம்.

    – வேகம்: என்ன காரணமென்று தெரியாது, ஆனால் இணையத்தளங்கள் Firefoxஇல் மேலும் விரைவாகத் திறப்பதாக உணர்கிறேன். IEஇல் அவை ஒரு சில நொடிகளாவது தாமதமாகவே திறக்கின்றன.

    – W3C compliance: W3C எனப்படும் இணையத் தர நிர்ணய அமைப்யின் பரிந்துரைகளை Firefox இறுக்கமாகப் பின்பற்றுவதைப் போல் IE பின்பற்றுவதில்லை. ஆகவே, IE உலாவிக்கென்று ஒரு வடிவமைப்பு, மற்ற உலாவிகளுக்கென்று ஒரு வடிவமைப்பு என்று இரு வேறு வடிவமைப்புகளைத் தயாரிக்கும் நிலைக்கு வலைத்தள வடிவமைப்பாளர்கள் தள்ளப்படுகிறார்கள்.

    – Platform independent: IE கிட்டத்தட்ட Windows கணினிகளுக்கு மட்டுமே. அதே போல் Safari பெரும்பாலும் Mac கணினிகளுக்குத்தான் (என்று நினைக்கிறேன்). ஆனால் Firefoxஸோ, எல்லா இயங்கு தளங்களிலும் செயலாற்றக்கூடியது.

    – தமிழ் பற்றி: மொழி ஆதரவு என்பது இயங்கு தளத்தோடு பின்னிப் பிணைந்திருக்கும் ஒன்று. இயங்கு தள அளவில் ஆதரவு இல்லாத நிலையில், மென்பொருள் அளவில் அந்த ஆதரவை எதிர்பார்ப்பது அபத்தமானது. IE6இல் Uniscribe என்ற இயங்குதளச் சேவையை இணைத்திருக்கிறார்கள். ஆதனால்தான் மற்ற மென்பொருட்களுக்குக் கிடைக்காத மொழி ஆதரவு IE6க்கு மட்டும் கிடைக்கிறது. இதை விண்டோஸின் குறைபாடாகவே பார்க்க வேண்டும். Firefoxஇன் குறைபாடாக அல்ல. Firefoxஇல் left-align:justify பிரச்சனை இருக்கிறதுதான். அதை அகற்றும் வேலைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. FF3யில் பெரும்பாலும் அது நீக்கப்பட்டு விடும் என்று நம்புகிறேன். அதுவரை , View -> Page Style -> No style செய்து உடைந்து தெரியும் வரிகளைப் படித்துக் கொள்ளலாம் 🙂

  14. க்ருபா ஷங்கர் – FFஐப் பார்த்து ஈயடிச்சான் copyஆக நிறைய விசயங்கள் IE7ல் இருக்கின்றன. யார் முதலில் செய்கிறார்கள் என்பதும் முக்கியம். IE8 வருவதற்குள் FF 10, 11 வந்துவிடும் அளவுக்கு FFல் மேம்பாடுகள் மிக வேகமாகக் கிடைக்கின்றன. தானாகவே இற்றைப்படுத்தபடவும் செய்கின்றன.

    அண்மையில் சில தள வடிவமைப்பில் ஈடுபட்ட போது தான் IEயின் மண்டையிடிகள் புரிந்தது. FFலும் பிற உலாவிகளிலும் வேகமாக, அழகாகத் தெரியும் வடிவமைப்புகளைப் பின்பற்ற மாட்டேன் என்று IE அடம்பிடிக்கிறது. இது வடிவமைப்பாளரின் பிரச்சினை என்று நினைக்காமல், IE மட்டும் ஒழுங்காக சீர்தரங்களுக்கு உட்பட்டு வடிவமைக்கப்பட்டு இருந்தால் இன்னும் நல்ல உலாவல் அனுபவங்கள் எளிதில் பயனர்களுக்குக் கிடைக்கும் என்று கொள்ளலாம்.

  15. <![CDATA[Arputhan]]> Avatar

    use greasemonkey plugin in firefox for tamil font indented or left-align:justify issue
    https://addons.mozilla.org/firefox/addon/748

  16. <![CDATA[இராம்]]> Avatar

    பாலா,

    Foxytunes plugin யூஸ் பண்ணிப் பார்த்தீங்களா?

  17. arumai…grease monkey use panni paartheengala?

  18. <![CDATA[விமல்]]> Avatar

    ஐயா வணக்கம் தமிழ்விசை எனும் செயலி எந்த தளத்தில் கிடைக்கும் சொல்லவே இல்லையே?

  19. //Foxytunes plugin யூஸ் பண்ணிப் பார்த்தீங்களா?//
    ராம் வரிசை எண் 4ல் கொடுத்திருப்பதைத்தானே கேக்குறீங்க! 🙂 நான் அனுபவித்த வற்றை மட்டுமே சொல்லி இருக்கிறேன்.

    //arumai…grease monkey use panni paartheengala?//
    ம்… ட்ரை பண்ணியாச்சு. 🙂

    //ஐயா வணக்கம் தமிழ்விசை எனும் செயலி எந்த தளத்தில் கிடைக்கும் சொல்லவே இல்லையே?//

    2வது வரிசையில் எழுதப் பட்டிருக்கும் எழுத்துக்களின் மீது உங்கள் எலிக்குட்டியை நகர்த்தினால்.. சுட்டி கொடுக்கப்பட்டிருப்பது தெரியும்.

    (நான் வரிசை படுத்தி எழுதி இருப்பவைகளில் மீது “மவுசை” கொண்டு போனால்.. சுட்டி… கிடைக்கும்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *