சிரங்குகள்

உடலெங்கும் சிரங்குகள்
அவ்வப்போது
சொறிந்து கொள்ளத்தோன்றும் விதத்தில்

ஒழுங்காய்த்தான் இருந்தன முதலில்
ஆரோக்கியம் சேர்க்குமென
ஆசைப்பட்டு பூசிக்கொண்ட களிம்புகளால்
விளைந்தவை இவை

களிம்புகளை வழங்கியவர்களும்
சொறிந்துகொண்டுதானிருக்கிறார்கள்
இருந்தும் மோகம்
குறையவில்லை மக்களுக்கு

முதலில் அதன்
விளைவைப் பற்றி விளக்க வேண்டும்
பின்னரதனை அழிக்கவேண்டும்
அப்போது தான்
சரிபடும் தேகமும், தேசமும்!


Comments

11 responses to “சிரங்குகள்”

  1. கவிதை சூப்பர் தல. ஆனா எனக்கொரு சந்தேகம சிரங்குகள்/சிறங்குகள் எது சரியான பிரயோகம் நீங்கள் பாவித்திருப்பது தானா?

  2. <![CDATA[kusumban]]> Avatar

    பால பாரதி அண்ணன் அவர்கள் உடல் நிலை சரி இல்லையாம் அதனால் அவரை நான் பார்க்க போகிறேன், அவருக்கு நீங்க என்ன என்ன கொடுக்க நினைத்தாலும் என்னிடம் கொடுக்கவும்..

  3. ஹிஹிஹி.. வழக்கம் போல.. என் தப்பு தான். இப்போ சரி பண்ணிட்டேன்.

  4. சரியாப் போச்சுன்னு ஒரு வார்த்தை டைப் பண்ண என்ன செய்யணும்

  5. தல, சிறகுகள்னு தமிழ்மணத்தில் படிச்சிட்டு வந்தேன்.. சிரங்குகளா! அதுசரி..

  6. இதுல ஏதோ உள்குத்து இருக்குது போலயே….ம்ம்ம்ம்….யாரையோ போட்டு தாக்கற மாதிரி ஒரு தொனி தெரியுதே

    மக்களே இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல மாட்டேன்…இனி உங்க இஷ்டம் அடிச்சி ஆடுங்க……..ஹி..ஹி…

    பங்காளி…

  7. <![CDATA[sivagnanamji]]> Avatar

    சிங்கம்,
    மயில்,
    தாமரை,
    சிரங்கு……

  8. நல்ல படைப்பு. படித்த அடுத்த சில நிமிடங்களுக்கும், இன்னும் பல நாட்களுக்கும் சிந்திக்க வைக்கும் வரிகள்.

    வாழ்த்துக்கள்.

    மா சிவகுமார்

  9. நல்லா ரசிக்கிறாப்புலதான் இருக்கு. சிரங்கு புடிச்ச கை சும்மா இருக்காதுன்னு சும்மாவா சொன்னாங்க..

    எழுதிப் போட்டு 2 நாளாச்சு.. என் கண்ணுக்கு எப்படி படாம இருந்துச்சு..?

  10. <![CDATA[pandiidurai]]> Avatar

    //சரிபடும் தேகமும், தேசமும்! //

    இங்கு களிம்பு என்பதை கழகம் என்று எடுத்துக் கொள்ளத்தோன்றுது பாலா

  11. கவிதைகள்
    நல்லா இருக்கு மாப்ஸ்………
    ரணகளமா இருக்கு
    வார்த்தைகள்…………
    வீரமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *