கூட்டம் போடு
பழந்தமிழ்
இலக்கியங்களில்
புளங்காகிதமடை

கூட்டத்தில் கலகம் செய்
குழுசேர்ந்து
குசுகுசுத்துக்கொள்

புலியை விரட்டிய
மறத்தியின்
பால் குடித்தவனென
மார் தட்டிக்கொள்

யதார்த்தம்
மாயா- யதார்த்தம்
நவீனம்
பின்-நவீனம்

அரசியல் பேசு
அலோவென
கை குலுக்கிக்கொள்

எழுது
பிரதி அழி
நாவறளப்பேசு
கொன்றுகுவி

அடையாளம்
தொலைத்ததறியாமல்
கூச்சலிடு
தமிழனென்று

குப்பிகளுடைய
கோப்பையை காலி செய்

மசுரு
சோற்றுக்கு
வழியில்லாமல்
சாகிறான் விவசாயி.


Comments

38 responses to “மசுரு”

  1. //மசுரு
    சோற்றுக்கு
    வழியில்லாமல்
    சாகிறான் விவசாயி.//

    :-(((

  2. தலை!

    என்ன இது? திடீர் கொலைவெறி!!!!???????

  3. /*
    மசுரு
    சோற்றுக்கு
    வழியில்லாமல்
    சாகிறான் விவசாயி.
    */

    நிதர்சனம்…

  4. என்னங்க பாலா,

    ‘முகமூடி’ கவிதை மாதிரி இருக்கு !

    என்ன ஆச்சு ?

  5. //மசுரு
    சோற்றுக்கு
    வழியில்லாமல்
    சாகிறான் விவசாயி.//

    விவசாயி மட்டுமல்ல

  6. கோபம் ‘கெட்ட’ ‘நல்ல’ வார்த்தைகள் பார்க்காதது தான்.

    ஒரு படைப்பாளிக்கு அறிவுரை கூறக்கூடாது தான்.

    கெட்ட வார்த்தையில் எழுதுவது பாமரனுக்காக என்றாலும் , வேண்டாமே ! ஒரு நல்ல படைப்பிற்கு.

    நன்றி.

    மற்றபடி, உங்கள் கோபம் மிக நியாயமானது.

    அப்படியே, உரமிட்டு மண்ணைக் கற்பழித்த சில விவசாயிகளினையும் சாடிவிடுங்களேன்.

  7. fire fox poochi parakkuthu!

  8. செல்லா… இப்போ தான் கவனித்தேன். சரி செய்தாகிவிட்டது. 🙂

  9. நாய்க்குட்டி கழுத்துப்பகுதியில் தடவிட்டே இருந்துட்டே பின் ‘சொட்’ ன்னு தலைல தட்டியிருக்கிறேன் சிறு வயதில்,

    அது போல சுகமான வார்த்தைகளால் தடவிக் கொடுத்துக்கொண்டே யதார்த்தம் கடைசியில் தலை தட்டியிருக்குது தல!

    என் நண்பர் கவிஞர் மகுடேசுவரன் கவிதைகளிலும், இது போல நிஜம் முகத்தில் அறையும் வார்த்தைகளுடையதாகவே இருக்கும்.

    அவரையும் வலைப்பக்கங்களுக்குள் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். பார்ப்போம்.

  10. குட்டிபிசாசு Avatar
    குட்டிபிசாசு

    பொளந்து கட்டுங்க!!

  11. சாட்டையடி! ருத்ர தாண்டவம்

  12. இது இதான் தலையோட டச் கடைசி வரிகளைப் பாத்தாலே சும்மா அதிருதில்ல……….மனச்சாட்சி


    ..



    (இதை பா.க.ச பின்னூட்டமாக தொண்டர்கள் கருதவேண்டாம்)

  13. எல்லாஞ் சரி சாமி..

    நல்ல விஷயத்தைச் சொல்லும்போது எதுக்கு இந்தத் தலைப்பு..?

    அப்புறம் இந்த ‘மசுரு, மட்டை’ன்னு இடைல சேர்க்காம கவிதை வரவே வராதா..?

    என்னமோ போங்க சாமி..

  14. //இது இதான் தலையோட டச் கடைசி வரிகளைப் பாத்தாலே சும்மா அதிருதில்ல……….மனச்சாட்சி

    …
    ..

    …
    …
    (இதை பா.க.ச பின்னூட்டமாக தொண்டர்கள் கருதவேண்டாம்)
    //

    பா.க.ச வில் இருந்துகொண்டு தல சம்பந்தமாக சீரியஸான பின்னூட்டம் அகிலனிடமிருந்து இன்னொருமுறை வந்தால் அப்புறம் அவர் பா.க.ச அடிப்படை உறுப்பினராகக் கூட இருக்க முடியாது என்பதை பா.க.ச சார்பாக இங்கே சுட்டிக்காட்டவும் சொல்லிக்கொள்ளவும் கடமைப்பட்டுள்ளேன் என்பதை நான் இங்கே சொல்லிக்கொள்கிறேன்!

  15. //அவரையும் வலைப்பக்கங்களுக்குள் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். பார்ப்போம்//

    அழைத்து வாருங்கள். இதழ்களோடு இணைந்திருப்பவர்கள் இணையத்துப் பக்கம் வரவேண்டும். அவசியமானதும் கூட. (இணையத்திலேயே இருக்கும் சிலரை நான் இதழ்களின் பக்கம் நகர்த்த முயன்று வருகிறேன்) 🙂

  16. தலைப்பைப் பார்த்தாலே சும்மா அதிருதுல்ல..

  17. kannan Avatar
    kannan

    Nalla irukku

  18. Enga o padusa madurai iruki. kaafi atiseengale

  19. அருளே… என்ன நடக்குது இங்கன..
    சங்கத்தை மூடுங்கப்பா..
    இங்கேயுமா? 🙁

  20. இளா Avatar
    இளா

    //மசுரு
    சோற்றுக்கு
    வழியில்லாமல்
    சாகிறான் விவசாயி//
    நெத்தியில அடிச்சா மாதிரி வரிகள்.

  21. இலக்கியம் பயனற்றதுண்ணு சொல்ல வர்றீங்களா?

  22. வெற்றி Avatar
    வெற்றி

    பாலபாரதி,
    அருமையான கவிதை.
    கல்தோன்றி மண் தோன்ற முதலே வந்த மொழி என்று சும்மா பழம் பெருமை பேசிக் காலம் கடத்தி
    இருந்த நாட்டைப் பறிகொடுத்தும், பஞ்சத்திலும் சாகுது எம்மினம்… இதுகளைக் களையாமல் சும்மா மேடைக்கு மேடை உதவாத கொள்கைகளைப் பற்றி அடிபடுகிறார்கள் எம்மில் சிலர்… என்ன சொல்வது!

    பாராதியாரின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

    “தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சியுறார்
    வாயைத் திறந்து சும்மா; – கிளியே
    வந்தே மாதர மென்பார் “

  23. //அப்படியே, உரமிட்டு மண்ணைக் கற்பழித்த சில விவசாயிகளினையும் சாடிவிடுங்களேன்.//

    சாட வேண்டியது விவசாயிகளை அல்ல. உயிர் கொல்லி பூச்சி மருந்துகளையும், மண்ணை மரணமடைய வைத்த ரசாயண உரங்களையும் விவசாயிகள் யாரும் தயாரிக்கவில்லை. அந்த அளவுக்கு அவர்களுக்கு அறிவும் இல்லை. எல்லா வகையிலும் தன்னை நட்டப்படுத்தும் விவசாயத்தை மீட்டெடுக்க ஏதாவது ஒரு கருவி கிடைக்காதா என ஏங்கிகிடந்த விவசாயியின் ஏக்கத்தை பயன்படுத்திக்கொண்ட பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் உள்ளூர் களவாணி முதலாளிகள் உருவாக்கிய நச்சுப்பொருட்கள்தான் ரசாயண உரங்கள். விவசாயிகளின் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தி அவற்றை தந்திரமாக விற்பனை செய்து வருவதும் அந்த கம்பெனிகளே. எய்தவன் இருக்க அம்பை நோகும் கதையாக ரசாயண உரங்களின் வளர்ச்சிக்கும், அவற்றால் ஏற்பட்ட மண்ணின் நச்சுக்கும் நீங்கள் சாட வேண்டியது அந்த பன்னாட்டு நிறுவனங்களையும், பெரு முதலாளிகளையும்தானே ஒழிய விவசாயிகளை அல்ல.

    –ஆழியூரான்–

  24. நல்ல விதை அண்ணா.. தொடருங்கள்.

  25. //பாமரனைப் பற்றிப் பேசாவிட்டால் இலக்கியம் பயனற்றதுதானே சிறில்…//

    விவாதத்துக்காக…

    பாமரனைப் பற்றி பேசிவிட்டதாலேயே இலக்கியம் பயனுள்ளதாகிடுமா?

    பாலபாரதியின் இந்தக் கவிதை பசி தீர்க்குமா?
    🙂

  26. /*இலக்கியம் பயனற்றதுண்ணு சொல்ல வர்றீங்களா?*/

    பாமரனைப் பற்றிப் பேசாவிட்டால் இலக்கியம் பயனற்றதுதானே சிறில்…

  27. <![CDATA[sivagnanamji]]> Avatar

    முகத்தில் அறையும் கவிதை

  28. //முகத்தில் அறையும் கவிதை//

    🙂

    வாங்க சிவ்ஜி.. , உங்களைக் காணாமேன்னு பார்த்துகிட்டே இருந்தேன். இப்ப தான் திருப்தியாச்சு. 🙂

  29. தெனறலாய் வருடி தீயாய் சுட் ட கவிதை.

  30. பின்னூட்டங்கள் எல்லாமே பெயரில்லாமல் says னே வருது. டெம்ப்ளேட்டுலே என்ன பிரச்சினையின்னு கவனிங்க அண்ணாத்தே

  31. அப்புறம் பின்னூட்டங்களுக்கு Justify அலைன்மெண்ட் நல்லா இல்லே… என்னோட முந்தைய பின்னூட்டத்துலே saysக்கு அப்புறமா எம்மாம் பெரிய ஸ்பேசு….

  32. காலையிலேயே கச்சேரி ஆரம்பமாகி விட்டதா? அதுக்குள்ள 31 பின்னாட்டம்?

    கவிஜ நல்லா இருக்கு 🙂

  33. ஓ…பழைய பதிவு…இப்போ தான் தமிழ்மணத்தில் வருது………….புது வீட்டில் 😉

  34. அட அதுக்குள்ள பெயிண்ட மாத்தியாச்சு!!!!!!!!!!!!!!

  35. என்னதிது???? டெம்ப்ளேட்ல பூந்து விளையாடறீங்க போல…..

    //22// ஒரு சில பின்னூட்டங்களில் பெய்ர்கள் இவ்வாறு வருகிறது பார்த்தீர்களா????

  36. thala, superbu … unmaithaan aanalum siRu aathangkam. paarka en pakkam!

  37. இதே நிலை நீடித்தால்,,, விவசாயிகளுக்கு மயிர் கூட இருக்க போவதில்லை…

    பாலபாரதி போன்றவர்களின் செருப்படிகளுக்கெல்லாம்… நம் கெட்டு போன சமுதாயம் திருந்த போவதில்லை…

  38. //மசுரு
    சோற்றுக்கு
    வழியில்லாமல்
    சாகிறான் விவசாயி.//

    /பாமரனைப் பற்றிப் பேசாவிட்டால் இலக்கியம் பயனற்றதுதானே சிறில்…//

    /விவாதத்துக்காக…

    பாமரனைப் பற்றி பேசிவிட்டதாலேயே இலக்கியம் பயனுள்ளதாகிடுமா?

    பாலபாரதியின் இந்தக் கவிதை பசி தீர்க்குமா? :)//

    activist என சொல்லி கொள்பவர்களை காட்டிலும் தன்னை உரித்து காட்டும் படைப்பாளிகள் பல மடங்கு பெட்டர். கிருஸ்துவத்தை பரப்பும் நண்பர்கள் மற்றவர்களை பாவப்பட்டவர்கள் என கருதுவது போல தன் கொள்கை முனைப்பு கொண்டவர்கள் (முக்கியமாக கம்யூனிஸ்ட்கள்) மற்றவர்களை சமூகத்திற்கு பயனில்லாதவர்கள் என கருதுவதும் பேசுவதும் வாடிக்கையே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *