தமிழகத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் நூல்கள் இதுவரை நாட்டுடமையக்கப் பட்டுள்ளன. இதில் பலரின் பெயர் எனக்கு தெரியாததாக இருக்கிறது. கடந்த முறை தமிழகரசு சிலரின் பெயர்களை முன்மொழிந்தது அதில் சில குடும்பத்தினர்.. உரிமை கொடுப்பதற்கு மறுத்துவிட்டனர். (சுரா,கண்ணதாசன்..மேலும் சில..) அப்படியானவர்களை தவிர்த்து, நாட்டுடமையாக்கப்பட்டவர்களின் பட்டியலும், அவர்களின் நூற்பட்டியலும் தேவைப்படுகிறது. விபரம் தெரிந்தவர்கள்… எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தபதிவு உங்களுக்கு உதவக்கூடும்..
~~~~
கிட்டதட்ட ஒருவருடங்களுக்கு மேலாக என்னால் அதிக அளவில் பதிவர் சந்திப்புகளில் கலந்துகொள்ள முடியவில்லை. அதற்கான சூழல் ஏற்பட வில்லை. வேலை.. வேலை.. என்று மாத ஊதியம் வழங்கும் முதலாளிகளுக்கு பயந்தே நாட்கள் ஓடி விட்டது. தற்போது என்னை புதுப்பித்துக்கொள்ளவும், சார்ஜ் ஏற்றிக்கொள்ளவும் சில நாட்கள் விடுப்பு கேட்டிருக்கிறேன். நண்பர்கள் சந்திப்பு தான் என்னை எப்போதும் உற்சாகப்படுத்துகிற விசயம். வரும் முதல் வாரத்தில் தெரிந்து விடும். விடுப்பு கிடைத்துவிட்டால்.. ஏப்ரல் 11ம் தேதி ஒரு மொக்கை சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிடலாம். ப்ளீஸ்..மக்கா… ஒங்க எல்லார் மொகமும் மறந்துடும் போல இருக்கு!(விடுப்பு உறுதியானதும் சந்திப்பு குறித்தும் பதிவு போடுகிறேன்)
~~~~
சென்னை இணைய எழுத்தாளர் குழாம் அல்லது பேரவை அல்லது சங்கம் அல்லது இவற்றில் ஒன்று. அமைப்பு குறித்து இன்னும் சில நாட்களில் அறிவிப்பு வரவிருக்கிறதாம். விருப்பமானவர்கள் பதிவர் சந்திப்பு (மற்றும் வெண்ணை 0.01) என்ற பதிவை பார்கலாம். அதிலிருக்கும் மெயில் முகவரில் தொடர்பும் கொள்ளலாம்.
ஏனோ.. என்னால் ஒரு தலைமையின் கீழ் செயல்பட முடியாது என்றே தோன்றுகிறது. இணையவெளி என்பதே ஒரு சுதந்திரமான இடம் என்று எண்ணுகிறேன். சுய சுதந்திரம் பாதிப்புக்குள்ளாக்கும் எந்தவொரு விசயத்தையும் என்னால் அனுமதிக்க முடியாது. விருப்பமுள்ளவர்கள் இணைந்துகொள்ளலாம். என்னால் இப்படி ஒரு குடையின் கீழ் வரமுடியாது என்று தோன்றுவதால்.. நான் இணையவில்லை. இது குறித்து பலபதிவுகள். அதில் ஒன்று நண்பர் பாரி.அரசு எழுதிய பதிவையும் பார்த்துவிடுங்கள் .
நன்றி.. விடுப்பு கிடைத்து விட்டால்.. அடிக்கடி பதிவு பக்கம் தொல்லை கொடுக்கிறேன்.
~~~~
தேவநாதன், நித்தியானந்தா-வுக்கு பிறகு வேறு ஒரு ஆன்மீகவாதியோ, குலகுருவோ சிக்கமாட்டார்களா.. என்று செய்தி ஊடகங்கள் அலையத்தொடங்கி இருப்பவை பற்றியும், படுக்கையறையில் குறிப்பாக சாமியார்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டிய 10வழி முறைகள் குறித்தும்.. சமீபத்திய ‘சண்டே-இந்தியன்’ தமிழ்பதிப்பில் ஒரு கட்டுரை வந்துள்ளது. படித்துப்பார்கவும். :)))
~~~~
Pingback: சென்னையில் பதிவர் சந்திப்பு ஏப்ரல்11.2010..