8. காசிக்கு கும்பிடு போட்ட பெரியார்

மடத்தை விட்டு வெளியேறிய பின்னர் எங்கு போய் தங்குவது என்ற குழப்பம் தோன்றியது. கால் போன போக்கில் காசியை வலம் வரத்தொடங்கினார். நிறைய மடங்களும் சத்திரங்களும் கண்ணில் பட்டன. சத்திரங்களில் பார்ப்பனர்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர்.

சிறுகுடலை ருசி பார்க்கத்துடிக்கும் பெருங்குடலுக்கு என்ன தெரியவா போகிறது.. பெரிய இடத்துப்பிள்ளை இவர் என்று.. பசி.. காதை அடைக்க.., வேறு வழியின்றி.. ஒற்றை ஆடையுடன் வலம் வரும் தன் தோற்றத்தை வைத்து பிச்சை எடுத்து சில நாட்கள் கழித்தார் ராமசாமி.

மடங்களில் சாமியார்கள் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். நெய், பால், பழம் என்று உண்டு கொழுத்து திரிந்தனர். சிவனிடம் நேரடி தொடர்பு வைத்திருப்பவர்கள் போல பிரசங்கம் செய்து வந்தனர். இந்த சன்யாசிகளின் பிரசங்கத்தில் மயங்கிய செல்வந்தர்களும் நிலச்சுவாந்தார்களும் காணிக்கையாக பொன்னும் பொருளுமாக கொட்டினார்கள்.

முற்றும் துறந்து விட்டதாக சொல்லிக் கொண்டா சாமியார்களின் மடங்களில் எல்லாம் தனி கஜான வைக்கப்பட்டிருந்தது. இரவு நேரங்களில் பாங்க் போன்ற போதை வாஸ்துக்களை உள்ளே தள்ளிக்கொண்டு, சம்போ,சிவ சம்போ என்று ஆடினார்கள் சன்யாசிகளும் அவர்கள் பக்தர்களும். சிவன் சொத்தாக மதிக்கப்பட்ட கஞ்சாவை கூச்சமின்றி ஆண்களும் பெண்களும் புகைத்து சிவத்தோத்திரம் சொல்லி மகிழ்ந்தார்கள்.

மடங்களின் நிலை இதுவென்றால்.. கங்கை கரையில் அமர்ந்து சிராத்தம் செய்யும் பண்டாக்களின்(பார்ப்பனர்கள்) நிலை வேறு விதமாக இருந்தது. இறந்து போன ஒருவர் சொர்க்கத்துக்கு போகவேண்டுமானால்.. கோ-தானம் செய்யுங்கள், அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுமானால்.. பிண்டம் வைத்து பூஜை செய்யுங்கள், பித்ரு சாபம் போக பண்டாக்களுக்கு தட்சணையுடன் போஜனம் வழங்குங்கள் என்று மக்களின் அறியாமையை வியாபராக்கிக்கொண்டிருந்த கும்பலையும் கண்டார்.

சுத்தமாக இருப்பதாக காட்டிக்கொண்டு, வாயில் மந்திரங்கள் முணுமுணுத்தபடி இருந்த பண்டாக்கள் மாலையானதும்.. கஞ்சா குடிப்பதும், அசைவம் சாப்பிடுவதும், பிச்சை எடுத்து திரியும் பெண்களை கட்டாய பலாத்காரம் செய்வதுமாக வலம் வந்தார்கள். கங்கை கரையை ஒட்டி இருந்த காட் பகுதிகளில் பண்டாகள் மட்டுமின்றி அவர்களின்

மனைவியரும் மற்றும் சந்நியாசிகளும் சேர்ந்து போதை வஸ்துக்களை அருந்தி விட்டு காமக்களியாட்டம் போடுவதையும் கண்டார் ராமசாமி. மிகுந்த நம்பிக்கையும் ஆச்சரமுமான குடும்பத்திலிருந்த வந்த அவரால் இந்த காட்சிகளை ஜீரணிக்க முடியவில்லை. காசி மீதிருந்த.. மதிப்பும், மரியாதையும் வெகு விரைவாக கரையத்
தொடங்கியது. இனிமேலும் இங்கே நீடித்தால்.. அது மேலும் வெறுப்பை உண்டாக்கி விடும் என்றுணர்ந்த ராமசாமி காசியைவிட்டு கிளம்ப ஆயத்தமானார்.

பெரியார் சில சம்பவங்கள்..

ஒரு முறை ஜி.டி.நாயுடுவை சந்திக்க அவர் வீட்டிற்கு ஈ.வே.ரா., சென்றிருந்த போது, ஈ.வே.ரா.வின் பையில் வைத்திருந்த மணி பர்ஸை வெடுக்கென பறித்த நாயுடு அதிலிருந்த ரூபாய் நோட்டுக்களை தன் ஆய்வுக்கு வேண்டுமென எடுத்துக்கொண்டார்.
வெறும் சில்லரைகள் நிறைந்திருந்த பர்ஸை ஈ.வே.ரா.விடம் திரும்பக்கொடுத்தார்.

அடுத்த முறை நாயுடுவை சந்திப்பு நிகழ்ந்த போது, பழையபடி பர்ஸை பறித்த நாயுடு ஏமாற்றம் அடைந்தார். உள்ளே சில்லரை காசுகளே இருந்தது. நாயுடுவை சந்திக்கப்போகிறோம் என்று தெரிந்தாலே ரூபாய் நோட்டுக்களை எடுத்து பத்திரப்படுத்தி விடுவார் ஈ.வே.ரா.

வேறு ஊருக்கு செல்லவேண்டுமானால் ரயில் டிக்கேட் எடுக்க பணம் தேவை. பிச்சை எடுத்து அதை செய்வதற்குள் போதும்,போதும் என்றாகி விடும். யோசனையில் புரண்டு படுத்த போது இடுப்பில் ஏதோ தட்டுப்பட்டது. தடவிப் பார்த்த போது என்றோ தான் மறைத்து வைத்த தங்க மோதிரம் என்று அறிந்து மகிழ்ந்தார் ராமசாமி.

அன்றைய சூழலில் அந்த மோதிரத்தை வெறும் பத்தொம்பது ரூபாய்க்கு விற்றார். கிடைத்த பணத்தைக்கொண்டு அப்படியே தெற்கு நோக்கி கிளம்பினார். சின்ன சின்ன ஊர்களை எல்லாம் பார்த்தபடியே ஒரு ரயில் நிலையத்தை அடைந்தார் ராமசாமி. ஆந்திரம் செல்லும் ஒரு ரயிலில் டிக்கேட் எடுத்துக்கொண்டு ஏறினார். வண்டி ஏலூர் என்ற இடத்தை அடைந்ததும் இவருக்கு சுப்பிரமணியபிள்ளை என்பவரின் நினைவு வந்தது.

சுப்பிரமணியம் ஈரோட்டில் வேலை பார்த்து வந்தவர். தன் மனைவியுடன் ஏலூரில் செட்டிலாகி இருந்தார். அவரைப் பார்த்து ஏதாவது வேலை கேட்கலாம் என்ற எண்ணம் வர.. ரயிலில் இருந்து இறங்கினார் ராமசாமி.

(தொடரும்)
———–
நண்பர்களே..
இந்த பகுதியிலிருந்து பெரியார் சில சம்பவங்கள் என்ற துணுக்குச் செய்தியை வாழ்க்கை வரலாற்றின் நடுவே தொகுக்க உள்ளேன். இவற்றிற்கு எந்த ஆதாரமும் இல்லை. சில நடந்த உண்மைகளாக இருக்கலாம். பலது கற்பனைகளாகக் கூட இருக்கலாம். இவை வாய் வழியாக சொல்லக்கேட்டு ஆங்காங்கே பதிவு செய்யப் பட்டிருப்பவை.

This entry was posted in பெரியார் வரலாறு. Bookmark the permalink.

3 Responses to 8. காசிக்கு கும்பிடு போட்ட பெரியார்

 1. இளா says:

  அடுத்தப்பகுதிய சீக்கிரம் போடுங்க.

  இந்தத் துணுக்கு உணமையான்னு எனக்கும் தெரியல. நடுத்தெரு நாராயணன் பழச நல்லாச் சொல்லுவாரு. உண்மையாத்தான் இருக்கனும்

 2. சிவஞானம் ஜி says:

  நேரம் தவறாமை பெரியாரின் உயர்பண்புகளில் ஒன்று!

 3. hi.. bharathi….

  நான் தொட்டராயசுவாமி(பகடை)..
  நினைவிறுக்கின்றதா?
  நலம் அறிய ஆவல்..

  தச்சமயம் பிளாகரிலிருந்து வோட்பிரஷ்க்கு மாறியதன் மூலம் .. விடுபட்டவைகளில் நான்.. தமிழ்மணம் பிளக்கின்னை எவ்வாறு இனைப்பது என்று அறியாமல் குழம்பியுள்ளேன் உதவுங்களேன்..

  என்னுடைய புதிய இனைவலை விழிமொழி.. http://www.vizimozi.wordpress.com or

  http://www.thottarayaswamy.net.tc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.