விடுபட்டவை 25-11-11

பகலில் சூரியனோடும், இரவில் சந்திரனோடும் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கையை தமிழக மக்களுக்கு தருவதற்காகவே டங்கடாரகை மின்சாரத்தின் விலையை ஏற்றி இருக்கிறார் என்பதை டமில் பீப்பிள் உணரவேண்டும். #அண்ணா நாமம்.. எம்.ஜி.ஆர் நாமம்.. டங்கடாரகை நாமம்.

மொத்தம் !!!

குறிப்பு:- கிடைத்த முதல் தகவலின் படி:

தமிழக அரசு மின்கட்டண உயர்த்தப்போவது அறிந்திருப்பீர்கள். வீடுகளுக்கு 1-100 யூனிட் மின்சாரம் ரூ.1.50 என்றும் 101-முதல் 600 வரை ரூ.5.75/-என்றும் தீர்மானித்திருப்பதாக சொல்கிறார்கள்.(நிறுவனங்களுக்கு வேறு கதை)

————

கொஞ்ச நாட்களாகவே – தன்முனைப்பு குறைபாடு (Autisam) – உடைய குழந்தைகளைப் பற்றியும் அக்குறைபாடு பற்றியும் தேடித் தேடி படித்து வருகிறேன். அமெரிக்காவில் இக்குறைபாடு உடைய குழந்தைகளை அடையாளம் கண்டு, பயிற்சி அளித்து, ஒரளவுக்கு சரி செய்து விடுகின்றனராம்.

இங்கே இந்தியாவில் இந்த – தன்முனைப்பு குறைபாடு (Autisam) – பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால்.. பிறரை சார்ந்தே வாழும் படியான வாழ்க்கைக்கு இக்குழந்தைகள் தள்ளப்படுவதாக வருத்தப்பட்டார் ஒரு மருத்துவர்.

தன்முனைப்பு குறைபாடு (Autisam) -உடையவர்களைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்கலாம் என்று யோசித்து வருகிறேன். நண்பர்கள் சந்தான மூர்த்தியிடமும், அருள் எழிலனிடமும் பேசி இருக்கிறேன். பார்க்கலாம்.

—–

ஃபேஸ்புக்கில் நண்பர் பேரழகன் பாலாவின் குறிப்பு இது:- கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவில் சுண்டல் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை நிறுத்தியுள்ளது தமிழக அரசு.

மேலும், காய்கறிகளின் அளவும் குறைக்கப்பட்டிருக்கிறதாம்.

இந்தியாவில், இன்று 50 சதவீத குழந்தைகளின் இறப்புக்கு ஊட்டச்சத்து குறைபாடே முக்கிய காரணமாக உள்ளது.

ஏறக்குறைய 8.3 மில்லியன் குழந்தைகள் எடை குறைவாக பிறக்கின்றன.

58 சதவீத கர்ப்பிணிகள் இரும்புச் சத்து பற்றாக்குறையால் தவிக்கின்றனர்.

பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் 23 சதவீத குழந்தைகள் மட்டுமே தாய்ப்பால் பெறுகின்றன.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். பட்டினியால் சாகடித்துவிட்டு, பதினோறாம் வகுப்பில் மடிக் கணிணி கொடுப்பதால், ஒரு டேஷையும் புடுங்க முடியாது.

—–

கூடம்குளம் அணு உலைக்கு எதிராக 100 நாட்களுக்கு மேல் அப்பகுதியில் மக்கள் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்குழுவில் உள்ள சிலரைப் பற்றி அதிகப்படியாகவும், அவதூறு பரப்பும் நோக்கில் தினமலர் நாளிதழ் நேற்று 24.11.11 அன்று வெளியிட்டுள்ள செய்தி, உண்மையில் மிகுந்த எரிச்சலைத்தருகிறது.

போராட்டக்களத்தில் நிற்பவர்களது தொலைபேசி எண், வீட்டு எண் போன்றவைகளாக் கொடுத்து, பொதுமக்களே இதோ இவர்கள் தான் அணு உலையை எதிர்ப்பவர்கள்.. ஏன் எதிர்க்கிறோம் என்று சொல்லத்தயாராக உள்ளனர். நீங்களே போன் போட்டுக்கேட்டுக்கொள்ளுங்கள் என்று முதல்பக்கத்தில் செய்தி வெளியிட்டது. அதன் பின் தொடர்ச்சியாக அநாகரிகமான வார்த்தைகளில் மிரட்டும் குரலில் பல போன்கள் வந்ததாக அவர்கள் தொலைக்காட்சியில் கொடுத்த பேட்டியைப் பார்த்த போது, தினமலரின் மீதான கோபம் அதிகமானது.

பத்திரிக்கையாளர் ஞாநி கேட்டபடி, அக்கட்டுரையை எழுதிய சிறப்பு நிருபர் மற்றும் அணு உலைக்கு ஆதரவாக பேசுபவர்களது, முகவரி, தொலைபேசி எண்கள் போன்றவற்றை தினமலர் கொடுக்குமா?

—–

இந்தியவார்த்தா(கடந்த பதிவைப் பார்க்கவும்) நேற்று போன் செய்தார்கள். இரண்டொரு நாளில் பணம் வந்துவிடும் என்று சொல்லி இருக்கிறார்கள் பார்க்கலாம். (கடந்த பதிவை அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல மின்னஞ்சலில் பதிவின் சுட்டியை அனுப்பி வைத்திருந்தேன்) :))

This entry was posted in அனுபவம், விடுபட்டவை and tagged , , , , , . Bookmark the permalink.

3 Responses to விடுபட்டவை 25-11-11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.