Tag: உருது

  • கவாலி பாடல்

    மும்பையில் வாழ்ந்த காலங்களில் அதிக நேரத்தை விழுங்கியது, மின் தொடர் வண்டி பயணங்கள் தான். வீட்டில் உறங்கிய பொழுதுகளை விட மின் தொடர் வண்டியில் உறங்கிய நாட்கள் அதிகமாக இருக்கும். அப்படி ஒரு பயணத்தின் போது, முதல்முதலில் கவாலி பாடல் ஒன்றை கேட்டேன். ”நிலவைத்தொடும் மனிதா- கேள் மரத்தின் விந்தையை” என்று தொடங்கும் அந்த பாடல் பல நாட்களுக்கு என்னை வதைத்துக் கொண்டிருந்தது. பொதுவாக கவாலி பாடல்கள் உருதுமொழியில் தான் இயற்றப்படுகிறது. அதன் இசை வடிவம், கொஞ்சம்…