Tag: சிறுவர் கதை

  • அப்துல்லாவின் கிளிகள் – சிறுவர் கதை

    “எங்கே இருந்து கிடைச்சுச்சுடா…?” என்று கேட்டான் தமிழ்ச்செல்வன். இடம் : தந்தை பெரியார் மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானம். “நாங்க குடி இருக்கிற வீட்டு மாடியிலடா…!” என்று கூறும்போதே அப்துல்லாவின் குரலில் ஒரு பெருமிதம் தெரிந்தது. “எப்படிடா கிடைச்சது..?” “மாடியில காயப்போட்ட துணிகளை எடுத்து வந்துடுன்னு சொல்லிவிட்டு, எங்க அம்மா வீட்டு வேலைக்குப் போயிட்டாங்க. நானும் மாடிக்குப் போனேன். அங்கே காக்கைகள் கூட்டமாக அமர்ந்து, ‘கா..கா..’ன்னு கரைஞ்சுகிட்டு இருந்துச்சு. என்னடான்னு பார்த்தேன். ரெண்டு கிளிக் குஞ்சுகளை அதுங்க…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 9]

    வகுப்பறைக்குள் வந்து தனது இருக்கையில் அமர்ந்த பின்னும் நேத்ராவுக்கு மரப்பாச்சி நினைவாகவே இருந்தது. ஆசிரியர் எழுதிப் போட்டுக் கொண்டிருந்த கணக்குப் பாடத்தில் மனது செல்லவே இல்லை. என்னமோ வித்தியாசமாக நடப்பதாகத் தோன்றியது. மைதானத்தில் மரப்பாச்சி கைநழுவி விழுந்ததா? அல்லது கை நழுவி விழுந்ததா? மைதானத்திற்குள் அது உண்மையில் ஓடியதா, இல்லை காற்றில் பறந்ததா எதுவுமே புரியவில்லை. கேள்வி கேட்ட மிஸ்ஸிடமாவது எதையாவது சொல்லி இருக்கலாம். ஆனால் உண்மையைச் சொல்லி, இப்படி மாட்டிக்கொண்டோமே என்பதை நினைக்க நினைக்க அழுகையாக…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 7]

    முதல் மாடியில் இருந்து பார்ப்பது போல் இல்லாமல், பலமாடி கட்டடத்தின் மிகவும் உயரமான ஜன்னல் வழியாக, கீழே பார்ப்பது போலிருந்தது. என்ன செய்வது மரப்பாச்சியின் உருவம் அப்படி! வீட்டில் இருந்து வெளியே வர உதவிய கேபிள் டிவியின் வயர் எங்கே செல்கிறது என்று கவனித்தது மரப்பாச்சி. அது கீழ்வீட்டுக்குச் சென்றது. ஐடியா… இந்த வயரையே பிடித்துக் கீழ்வீட்டுக்குச் சென்று அங்கிருந்து நாம் வெளியேறிவிடலாம் என்று திட்டமிட்டது. இந்தக் கீழ்வீட்டில் தானே அந்தத் தாத்தாவும், பாட்டியும் இருக்கிறார்கள். அவர்களையும்…

  • சுழல் – சிறுவர் கதை (டைம்லூப் சிறுகதை)

    சுழல் வீட்டின் வாகனம் நிறுத்துமிடத்தில், அப்பாவின் இருசக்கர வாகனத்திற்கு அருகில், காகிதங்களால் பொதியப்பட்டு நிறுத்தப்பட்டிருந்ததைப் பார்த்ததுமே தெரிந்தது, அது மிதிவண்டி என்று. அதைப்பார்த்ததும் ஏற்பட்ட சந்தோஷம் சுதாகரனை திக்குமுக்காடச் செய்தது. அடுத்த வாரம் வரவுள்ள அவனது பிறந்தநாளுக்கு, வெளிநாட்டில் வசிக்கும் அவனது மாமாவின் அன்பு பரிசு அது. அவர் இணையம் வழியாக ஆர்டர் போட்டுவிட, நேரடியாக இவன் வீட்டுக்கு வந்து, மிதிவண்டியைக் கொடுத்துவிட்டது, தயாரிப்பு நிறுவனம். அதன் மீது சுற்றி இருந்த ஜிகு ஜிகு பிளாஸ்டிக் தாள்களை…

  • சட்டம்

    தங்கள் குடிசைக்கபகுதிக்கு அருகில் கட்டப்படும் கட்டுமான நிறுவனத்தில் காவலாளியாக வேலைக்குச் சேர்ந்தார் பரமசிவம். அவரது மகன் வேலன் ஏழாம்வகுப்பு படித்துவந்தான். திடீரென பரவிய தீக்கிருமியால், வேலனின் பள்ளி வாழ்க்கை முடிவுக்கு வந்தது. கொரோனா கால ஊரடங்கினால் மக்கள் பலவிதங்களில் பாதிக்கப்பட்டனர். அடுத்த சில மாதங்களில் கட்டடப்பணிக்கு அரசு அனுமதி அளித்ததும், வேலை மீண்டும் தொடங்கியது. ஆனாலும், பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால் வீட்டில் இருந்த வேலன், கட்டட வேலைகள் நடப்பதை வேடிக்கை பார்க்கப்போவான். சில நாட்கள் தன் அப்பாவுக்கு…