Tag: தகவல்கள்

  • டிஸ்லெக்ஸியாவா? அச்சம் வேண்டாம்!

    பிள்ளைகளுக்கு எழுத்தில் பொய்த்தோற்றத்தை ஏற்படுத்தக்கூடிய குறைபாட்டினை டிஸ்லெக்ஸியா என்று சொல்கிறது மருத்துவ உலகம். இந்தப் பிரச்சனை உள்ள குழந்தைகளின் பெற்றோர், தேவைக்கு அதிகமாகவே அச்சப்படுகின்றனர். ஆனால் அது தேவையில்லை என்கிறது மருத்துவம். உலகம் வியக்கும் பல பெரியமனிதர்களும் சிறுவயதில் இக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது பலர் அறியாத செய்தி. இப்பிள்ளைகள் எழுத்தை மாற்றிப்போட்டு எழுதுவதும், மாற்றிப்போட்டு வாசிக்க இயலாமல் திணறுவதுமாக இருப்பார்கள். மற்ற குறைபாடுகளைப்போல பார்வைக்கு நேரடியாக தெரியாத குறைபாடு இது என்பதால் இதனை உணர்ந்துகொள்வதில் சிக்கல் இருக்கிறது.…

  • பெரியாருடன் ஒரு பயணம்

    பெரியார் தனது சிந்தனைகளை பகிரங்கப்படுத்தியதும், பிரச்சாரம் செய்ததும் அதிலிருந்து பொருள் ஈட்டவோ, புகழ் பெறவோ அல்ல; தேர்தலில் வாக்குகள் பெறவும் அல்ல. மாறாக அவரது சிந்தனைகள் அன்றைய சமூகப் போக்கிற்கு நேர் எதிராக இருந்த காரணத்தால் எதிர்ப்புகளையும் இழப்புகளையுமே அவர் சந்தித்தார். பெரியாரின் இந்த நெடும்பயணம் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொரு மனிதனுக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடியது. அந்தப் பயணத்தின் சில பக்கங்களை, மிக முக்கியமான பக்கங்களை, பெரியாரின் சிந்தனைப் போக்கை, பெரியாரின் சொற்களிலேயே அறியும்…