Tag: ரமேஷ் வைத்யா

  • ஆற்றுப்படை

    1 யெஸ்.பாலபாரதியின் நாவலைப் படிக்கப்போகிறீர்கள். ‘முத்திரள் உருவமாக’இந்தக் கதையில் சிலர் சந்திக்கிறார்கள். அவர்கள்  ‘மாய உருவமாகவும்’இருக்கிறார்கள். இந்தச் சொற்களுக்கிடையே இருக்கும் வேறுபாடு, அவற்றின் பொருள் உங்களுக்குப் புரிகிறதா? 2 இது அறிவியல் புனைகதையா, மிகுபுனைவா? மேலே சொன்ன இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ‘எல்லாம் ஒண்ணுதானே, படிக்க சுவாரசியமாக இருந்தால் போதாதா?’ என்று கேட்பவர்கள், இந்த அளவில் இதை வாசிப்பதை நிறுத்திவிட்டு, கதைக்குள் போய்விடுங்கள். இங்கே அந்த இரு வகைகளுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டைப் பார்க்கப்போகிறோம். அறி(வியல்) புனைகதை…

  • சேவல் ஏன் கூவுகிறது தெரியுமா? இந்திய சிறுவர் நாடோடிக்கதைகள்

      சேவல் ஏன் கூவுகிறது தெரியுமா? ஆம்… அதற்கொரு கதை இருக்கிறது. இந்திய சிறுவர் நாடோடிக்கதைகள் படித்தபோது, அதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டேன். நாடோடிக்கதைகளின் ஆசிரியர்கள் இன்னாரென்று கூறமுடியாது. பலவும் வாய்மொழியாகச் சொல்லப்பட்டு, அப்படியே எல்லைகள் கடந்து பல தேசங்களையும் இக்கதைகள் அடைந்துள்ளன. அவற்றை ஆங்காங்கே தொகுத்து எழுத்துவடிவில் சிலர் பதிவு செய்தும் வைத்துள்ளனர். அதனாலேயே இக்கதைகள் சாகாவரம்பெற்று இன்னும் உயிர்ப்போடு இருக்கின்றன என்றே சொல்லலாம். இந்திய தேசத்தில் சொல்லப்படுகின்ற பல நாடோடிக் கதைகளில் சிலவற்றைத் தொகுத்து, சுட்டிவிகடனில்…