இனி அகதிகள் கதி என்ன?

தொடர்ந்து சிங்கள அரசும், இந்திய அரசும், ஊடகங்களும் பிடிவாதமாக பிரபாகரனும், புலிகள் இயக்கமும் அழிந்து விட்டதாக சாதிக்க முயல்கின்றன. இடையிடையே வெகு சில ஊடகங்கள் அப்படியொன்றும் நடந்து விடாது என்ற நம்பிக்கையை பற்பல ஊகங்கள் மூலமும், உலாவரும் ஆதாரங்களின் மீதான சந்தேகங்கள் மூலமும் உயிர்ப்பிக்க முனைகின்றன. நிறைய அஞ்சலி கட்டுரைகள் – சில நிஜமான ரத்தக்கண்ணீரோடும், சில உள்ளுக்குள்ளே எழும் நிம்மதி பெருமூச்சை அடக்கிக் கொண்டும் எழுதப்பட்டு இணையமெங்கும் இறைக்கப் பட்ட வண்ணம் இருக்கின்றன.

போர் ஓய்ந்து விட்டதா என்று CNN கருத்துக் கணிப்பு நடத்துகிறது. பிரபாகரன் என்ற ஒற்றை மனிதனையோ, புலிகள் என்கிற ஒற்றை இயக்கத்தையோ அழித்துவிட்டால் அத்தோடு ஒரு சுதந்திர போராட்டம் ஓய்ந்து விடும் என்கிற எண்ணமே ரொம்ப சிறுபிள்ளைத் தனமானது. பல் வேறு இனத்தவர் கூடி வாழும் இடத்தில் ஒரு குழுவுக்கு ஆதிக்க வெறி ஏற்பட்டு விட்டால், அதற்கு இரண்டே தீர்வுகள்தான் சாத்தியம். ஒன்று மற்றவர்கள் அக்குழுவை பிரிந்து வாழ்வது, அல்லது இருக்கும் இரண்டு இனத்தில் ஏதேனும் ஒன்று மிச்சம் மீதியில்லாமல் அழிந்து போவது. எந்த மனித இனமும் காலகாலத்துக்கும் அடிமை வாழ்வை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து தீர்க்க முடியாது. எனவே தமிழினத்தில் கடைசி மனிதன் மிச்சமிருக்கும் வரை என்றேனும் ஒரு நாள் இன்னொரு போராட்டம் வந்தே தீரும். அது அகிம்சை வழியிலானதா, ஆயுத வழியிலானதா, ஆயுத வழியெனில் யார் வழி நடத்துவார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் காலத்தின் கரங்களுக்குள் நிச்சயம் இருக்கும்.

ஆனால், அதற்கெல்லாம் முன்னால் இன்று நமக்கு பெரும் சவால்கள் பல காத்திருக்கின்றன.தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் அகதிகளாக அடைப்பட்டுள்ளதாக சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதே போல இந்தியாவுக்கு வெளியே வெவ்வேறு நாடுகளில் பல லட்சம் மக்கள் அகதிகளாக வாழ்கிறார்கள். வெளிநாட்டில் அகதிகளாக வாழும் தமிழர்களின் நிலை கொஞ்சமேனும் கண்ணியத்துடன் இருப்பதாக அம்மக்களின் எழுத்துக்களின் மூலம் அறியமுடிகிறது. அதே சமயம் தன் தொப்புள் கொடி உறவென நம்பிக்கையோடு தமிழகத்துக்குள் வந்தவர்கள் அடைபட்டுக் கிடக்கும் முகாம்களின் நிலமை என்னவாக இருக்கிறது?

காலையிலும், மாலையிலும் கையெழுத்திட்டு தன் இருப்பை உறுதி செய்து கொள்ளும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளிகள் போல, அகதி முகாமில் இருப்பவர்கள் வேலை காரணமாகவோ, படிப்பின் காரணமாகவோ வெளியில் செல்பவர்கள் கூட மாலைக்குள் திரும்பி விட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஒரு நாள் இரவு கூட வெளியே தங்குவதற்கு அனுமதிக்கப் படுவதில்லை.

போதிய கழிப்பிட வசதியோ, மின்சார வசதியோ இல்லாமல் அம்மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? வெளியிலிருந்து முகாமிற்குள் எடுத்துச் செல்லப் படும் எல்லா உடமைகளும் கடுமையான சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப் படுகின்றன – அது காய்கறி பழம் வாங்கிய பையாக இருந்தாலும். புதிதாக வரும் அகதிகளிடம் சோப்பு, செண்ட், பாலிஸ்டர் துணி வகைகள், கடிகாரம் போன்றவற்றை அபகரிக்கவோ அல்லது விலை குறைத்து வாங்கிக் கொள்ளவோ நம் மக்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வாழ்கை நிலை மேம்பட நாம் என்ன செய்து விட்டோம்?

இலங்கையிலிருந்து அகதியாக வந்த ஒரு வாலிபர் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் பிரபலமான ஒரு அரசியல் கட்சித் தலைவரின் நிறுவனமொன்றில் வேலை கேட்டு விண்ணப்பிக்க, புலியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த வாலிபருக்கு வேலை மறுக்கப் பட்டது.

புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என ராஜபக்ஷே அரசு சொல்லியிருக்கிறது. இதுதான் சமயமென ஒரு வேளை தமிழகத்திலிருக்கும் அகதிகள் திருப்பி அனுப்பப் படலாம். ஆனால் சர்வதேச சமூகமோ அகதியாக நாடிழந்தவன் தன் சொந்த நாட்டிற்கு திரும்பிப் போக விரும்புகிறானா இல்லையா என்பதை அறிந்தே அனுப்ப வேண்டும். அதை விடவும் அப்படித் திரும்பிப் போகும் அகதிகள் சுதந்திரமாய் உயிர் வாழக் கூடிய சூழ்நிலை அங்கே நிலவுகிறதா என்பதை ஆய்வு செய்த பின்னரே அனுப்ப வேண்டும் எனவும் சொல்கிறது.

சரி, இந்தக் கருத்து கனடா, ஜெர்மன் போன்ற மற்ற மற்ற நாடுகளுக்குச் சரி. அவர்கள் எல்லோருக்கும் இலங்கையில் நடக்கும் பேரழிவு பற்றித் தெரிந்திருக்கிறது. ஆனால் இந்தியாவின் நிலை என்ன? புத்தரின் கருணை வெள்ளம் இலங்கையின் இண்டு இடுக்குகளில் எல்லாம் வழிந்து ஓடுவதாகவும், ராஜபக்ஷே என்பவர் ஒரு மஞ்சளாடை அணியாத புத்த பிக்கு எனவும் நம்பும் அல்லது நம்புவதாகச் சொல்லிக் கொள்ளும் மதியூக மந்திரிகளும், வெளியுறவுத் துறை செயலாளர்களும், நடு நிலை நாளேடுகளின் அதிபர்களும் அல்லவா இங்கே வெளியுறவுக் கொள்கையை முடிவு செய்கிறவர்களாக இருக்கிறார்கள்? அவர்கள் நாளையே, அகதி முகாம்கள் என்ற பெயரில் இங்கே இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு மாறு பட்ட சிறை வடிவத்தில் அடைந்து கிடக்கும், கேட்க நாதியில்லாத மக்களை  தேனாறும் பாலாறும் பாய்ந்தோடி வளம் கொழிக்கும் அவர்களின் அன்னை பூமிக்கு திரும்பிச் செல்லுங்கள் என்று நிர்பந்திக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

அப்படி ஒரு நிலை வந்தால் அன்று மட்டும் என்ன செய்து கிழித்துவிடப் போகிறோம் நாம்? நம் தலைவர்கள்தான் என்ன செய்து விடப் போகிறார்கள்? அவர்களுக்கு அடுத்த தேர்தல் கூத்திற்கு இன்னமும் இரண்டு வருட அவகாசம் இருக்கிறது. அப்படியே நாளையே தேர்தல் என்ற நிலை வந்தாலும் கூட இரண்டு வேளை உணவுக்கு இடைப் பட்ட நேரத்து உண்ணா நிலை போதும், அனுதாபத்தை அள்ளவும், இப்பிரச்சனையில் தமக்கிருக்கும் அனுதாபத்தைக் காட்டவும். அதற்கும் மேல் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்திலிருந்து ஒரு சில துணுக்குகளை வாரியிறைத்தால் போதும், உத்திரவாதமாக நம் மக்கள் பொத்தாங்களை அழுத்தி வாங்கிய காசுக்குத் தம் விசுவாசத்தை நிரூபித்து விடுவார்கள்.

அவ்வளவு தூரமெல்லாம் போவானேன்? முதலில் இப்படி ஒரு இடப் பெயர்வு நடப்பதாகவே மக்களில் பெரும்பாலானோர்க்குத் தெரிய வாய்ப்பில்லை. இருக்கும் ஊடகங்கள் எல்லாம் கைகட்டி வாய் புதைத்து வேடிக்கை பார்த்திருக்கும், அல்லது அன்றைய ரியாலிட்டி ஷோவில் இருந்து வெளியேற்றப் பட்ட இமாலய சோகத்தை யாரோ ஒரு பாடகனோ நடன மாமணியோ தாங்க முடியாமல் தேம்பித் தேம்பி அழுவதை கர்ம சிரத்தையாக ஒளிபரப்பி சோகக் கடை விரித்திருப்பார்கள்.

சரி, இதையெல்லாம் தடுக்க என்னதான் செய்ய முடியும் நாம்? முதலில் அகதிகள் முகாம் என்று அழைக்கப் படும் சிறைகளில் அடை பட்டுக் கிடக்கும் மக்களின் நிலை இன்று என்னவாக இருக்கிறது? அதற்கு காரணமாகச் சொல்லப் படுவது என்ன? அவர்கள் விரும்பிய முறையில் வெளியில் சென்று வேலை பார்க்கவோ, படிக்கவோ முடிவதில்லை. தட்டுத் தடுமாறி படித்து முடிப்பவர்களுக்கும் கூட அரசு வேலை வாய்ப்புக்கள் கனவிலும் சாத்தியமில்லை. ஏகப் பட்ட கண்காணிப்புக்கு உள்ளாகியிருக்கும் இவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளும் துணிச்சல் தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் வந்துவிடவா போகிறது? வெளியிலிருக்கும் மக்கள் விரும்பினாலும் கூட அவர்களால் முகாமில் இருப்பவர்களுக்கு பொருளாதார உதவிகளோ, வேலை வாய்ப்புக்கான உதவிகளையோ தடையின்றி செய்ய முடிவதில்லை. இத்தனை கட்டுப் பாடுகளுக்கும் இன்று வரை சொல்லப் படும் ஒரே காரணம் இவர்களை சுதந்திரமாக விட்டால் புலிகளுக்கு உதவி விடுவார்கள் என்ற நைந்து புளித்துப் போன ஒற்றை பதில்தான்.

இன்று நம் முன்னால் இருக்கும் மிகப் பெரிய கடமை ஈழப் போராட்டத்தை இனி யார் தொடர்வார்கள் என்று கவலைப் படுவது இல்லை. ஏனெனில் அதில் நாம் உருப்படியாக எதுவும் செய்துவிட முடியப் போவதில்லை என்பது நிச்சயம். தந்திரமாய் இந்திய அரசும், இலங்கை அரசும் செய்யும் பிரச்சாரத்தை முறியடிக்க அவர்களின் ஆதாரங்களில் உள்ள ஓட்டைகளைக் கண்டுபிடித்து பட்டியலிடுவதை விட்டுவிட்டு, நாமும் அவர்களின் வழியிலேயே போய் நம்மிடம் உள்ள பிரச்சனைகளுக்கு ஏதேனும் தீர்வு காண முடியுமா என முயலுவதே ஆக்க பூர்வமான முயற்சியாக இருக்கும். சரி, பிரபாகரன் இறந்து விட்டார். புலிகளின் கடைசி அத்தியாயம் முடிந்து விட்டது. எல்லாவற்றையும் நாமும் ஒப்புக் கொள்வோம். இப்போது அந்த அகதி முகாமில் இருப்பவர்களின் மீதான கெடுபிடியை தளர்த்தலாம் இல்லையா? அவர்களையும் பயங்கரவாதிகளைப் போல அச்சத்தோடு பார்க்க வேண்டிய தேவை என்ன? பங்களாதேஷ் சுதந்திரமடைந்த உடன் அங்கிருந்து வந்த அகதிகளையெல்லாம் திருப்பியா அனுப்பி விட்டோம்? அவர்களுக்கு ரேஷன் கார்டு உட்பட எல்லாவற்றையும் கொடுத்து நம் சமூகத்துக்குள்ளேயே ஐக்கியப் படுத்துக் கொண்டுவிட வில்லையா? அதே நியாயம் இனி ஈழத் தமிழர்களுக்கும் பொருந்தும் தானே? இனிதான் யாரும் புலிகள் பூச்சாண்டி காட்ட முடியாதே? புலிகளைத்தான் ஒழித்து விட்டார்களாமே சிங்கள ராணுவத்தினர்? அப்புறமும் என்ன இவர்களைப் பற்றிய பயம்?

எனவே இனியேனும் முகாம்களில் அடைந்து கிடக்கும் அந்த அப்பாவிகளுக்கு கொஞ்சமேனும் சுதந்திரக் காற்றை அனுப்பி வைக்க முயற்சிப்போம். நன்கொடை என்ற நாகரீகப் பிச்சைக்கு பதில் அவர்களின் கல்விக்கும் வேலை வாய்ப்புக்குமான ஏற்பாடுகளை நம்மாலான அளவில் செய்து கொடுப்போம்.

 அகதிகளாக வந்து இங்கே வாடும் சொந்த சகோதரர்களுக்கு ஒரு விழுக்காடேனும் அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை தர அரசு முன் வர வேண்டும்.

 அகதிகள் முகாம் என்ற ஒற்றை கட்டுமானத்திற்குள்தான் வாழ வேண்டும் என்று நிர்பந்திக்காமல், நாட்டின் எப்பகுதியிலும் வாழ அனுமதிக்கப் பட வேண்டும்.


 பாஸ்போர்ட், விசா போன்ற தகுந்த ஆதாரஙக்ளில்லாமல் கள்ளத் தோணிகளில் வந்து சேர்ந்த இவர்களுக்கு, முதல் கட்ட விசாரணையின் பின் ரேஷன் கார்டு போன்ற முறையான ஆவணங்கள் வழங்கப் பட வேண்டும்.
 சொந்தத் தொழில் செய்ய நினைப்போருக்கு வங்கிகள் கடன் தர முன் வர வேண்டும்.

 அங்கே விவசாயம் மட்டுமே செய்து வந்தவர்களுக்கு இங்கேயும் விவசாயத்துக்கு நிலம் ஒதுக்கப் பட வேண்டும்.

இலங்கையில் தவிக்கும் தமிழர்கள் துயர் துடைக்க 500 கோடி ரூபாயை அள்ளித்தரப் போகிறதாம் இந்திய அரசாங்கம். அதுவும் யார் கையில்? எந்த அரசு தன் சொந்த நாட்டு மக்களின் மேல் கொத்து குண்டுகளை வீசியதோ அதே அரசின் கைகளில். சரி, போகட்டும். அதையெல்லாம் தடுக்கும் சக்தி நம் யாருக்கும் இல்லை.

இங்கே நம் நாட்டுக்குள்ளே தவிக்கும் இந்த அப்பாவி மக்களுக்காக அதில் பத்தில் ஒரு பகுதி தொகையை ஒதுக்கினாலே மேலே சொன்ன நலத் திட்டப் பணிகளை விடவும் கூடுதலாகவே எல்லாம் நடந்துவிடும். சொந்த தேசத்தை விட்டு வெளியேறி வரும் முன் அந்த மக்கள் வாழ்ந்த பொருளாதார நிலையை இங்கு நாம் ஏற்படுத்திக் கொடுக்க முயல வேண்டும். அப்போதுதான் என்றாவது அவர்கள் சொந்த தேசத்துக்குத் திரும்பும் போது, விட்டு வந்த வாழ்கையை தொடர்வதற்கு ஏதுவாக இருக்கும். இல்லையெனில் அங்கு போன பின்னும் பூஜ்யத்திலிருந்து வாழ்கையை கட்டமைக்க வேண்டிய அவலத்திற்கு இம்மக்கள் ஆளாக நேரிடும்.

அதே போல இன்னமும் இலங்கையிலேயே மாட்டிக் கொண்டிருக்கும் மக்களுக்கான மறுவாழ்வுப் பணிகளும் சரியான முறையில் நடக்க வேண்டும். எனவே இனியேனும், செஞ்சிலுவை சங்கமும், மற்ற சர்வதேச தொண்டு நிறுவனங்களும் நேரடியாக அம்மக்களுக்கு உதவ அனுமதிக்கப் பட வேண்டுமென்ற கோரிக்கையை உரக்கச் சொல்ல வேண்டும்.

மீண்டும் மீண்டும் பிரபாகரன் உயிரோடிருப்பதாக நிரூபிப்பதில் நாம் செலவழிக்கும் ஆற்றலை ஆக்க பூர்வமாக இது போன்ற விஷயங்களில் செலவழித்தால் அம்மக்களுக்கு ஏதேனும் நிவாரணம் கிடைக்கக் கூடும். எல்லோரும் போராட்டம் ஓய்ந்து விட்டது என்று சொல்லிவிடுவதால் ஓரு போதும் சுதந்திர உணர்வு இல்லாமல் போய் விடப் போவதில்லை. காலம் வரும் போது சுதந்திரப் போர் மீண்டும் வரட்டும். இப்போது பசியில் சாகிறவனுக்கு உணவும், கொஞ்சம் கவுரவமான வாழ்வும் தர முயற்சிப்போம்.

——–
படங்கள் உதவி:- http://sangam.org/taraki/

This entry was posted in அனுபவம், அரசியல், சமூகம்/ சலிப்பு and tagged , , , , , . Bookmark the permalink.

44 Responses to இனி அகதிகள் கதி என்ன?

  1. gulf- tamilan says:

    //செஞ்சிலுவை சங்கமும், மற்ற சர்வதேச தொண்டு நிறுவனங்களும் நேரடியாக அம்மக்களுக்கு உதவ அனுமதிக்கப் பட வேண்டுமென்ற
    கோரிக்கையை உரக்கச் சொல்ல வேண்டும்//

    யாரிடம் சொல்ல ? எப்படி ? தமிழக முதல்வரிடமா?

  2. TheKa says:

    பாலா, நியாயமான கோரிக்கைகள் தானே! இனிமேல்தான் பயப்பிடுவதற்கு ஒன்றுமே இல்லையே, இங்கே திரும்பியவர்களுக்கு ஒரு நல்ல வாழ்வுச் சூழ்நிலையை அமைத்துக் கொடுக்களாம். வழிமொழிகிறேன். கேட்பார் உண்டா??

  3. உண்மைகளை நேரடியாக பட்டியலிட்டு விட்டீர்கள். எதிர்பார்ப்புகளை எத்தனை சதவீதம் பூர்த்தி செய்வார்கள் என்று யோசனையிலேயே காலத்தை கழித்து விடப்போகிறோமோ என்ற அச்சம்தான் எழுகிறது. காரணம் இங்கு நடக்கும் கூத்துக்கள் தான் 🙁

  4. பதி says:

    பாலா,

    புலம்பெயர்ந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் போன்ற சொற்கள் இருக்கும் போது, அகதிகள் என்ற சொல்லாடலை தவிர்க்கலாமே??

    மற்றபடி, உங்கள் பதிவிலுள்ளவை நியாயமான கோரிக்கைகள். கல்லூரிப் படிப்பு முடித்தும் கூட பலர் நல்ல வேலை கிடைத்தும் அந்த சந்தர்ப்பத்தை பயம்படுத்த முடியாதோர் உள்ளனர்.. ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களில் எனக்கு தெரிந்து தமிழகத்தில் மட்டுமே இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்…

  5. raja says:

    Intha Ulagathil Suriyanai Thottavanum illai.
    Thalaivar Prabakaranai Suttavanum illai.

    ( Nile Raja )

  6. பாண்டியன் says:

    // அகதிகளாக வந்து இங்கே வாடும் சொந்த சகோதரர்களுக்கு ஒரு விழுக்காடேனும் அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை தர அரசு முன் வர வேண்டும்.

     அகதிகள் முகாம் என்ற ஒற்றை கட்டுமானத்திற்குள்தான் வாழ வேண்டும் என்று நிர்பந்திக்காமல், நாட்டின் எப்பகுதியிலும் வாழ அனுமதிக்கப் பட வேண்டும்.

     பாஸ்போர்ட், விசா போன்ற தகுந்த ஆதாரஙக்ளில்லாமல் கள்ளத் தோணிகளில் வந்து சேர்ந்த இவர்களுக்கு, முதல் கட்ட விசாரணையின் பின் ரேஷன் கார்டு போன்ற முறையான ஆவணங்கள் வழங்கப் பட வேண்டும்.
     சொந்தத் தொழில் செய்ய நினைப்போருக்கு வங்கிகள் கடன் தர முன் வர வேண்டும்.

     அங்கே விவசாயம் மட்டுமே செய்து வந்தவர்களுக்கு இங்கேயும் விவசாயத்துக்கு நிலம் ஒதுக்கப் பட வேண்டும்.//

    கேட்ட அமைச்சர் பதவிகளை காங்கிரஸ் தர மறுத்ததால், அமைச்சரவையில் சேராமல், வெளியிலிருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு தர திமுக இன்று இரவு அதிரடி முடிவை எடுத்தது. – தட்ஸ்தமிழ்
    🙂

  7. maraicoir says:

    http://maraicoir.blogspot.com/2009/05/blog-post_21.html

    தோழரே மண்டபம் அகதிகள் முகாமை போனதுண்டா…..

  8. rkumar says:

    //இலங்கையிலிருந்து அகதியாக வந்த ஒரு வாலிபர் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் பிரபலமான ஒரு அரசியல் கட்சித் தலைவரின் நிறுவனமொன்றில் வேலை கேட்டு விண்ணப்பிக்க, புலியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த வாலிபருக்கு வேலை மறுக்கப் பட்டது//

    புலிகள் தான் மக்கள் மக்கள் தான் புலிகள் என்ற பிரச்சாரத்தின் விளைவு தான் இது. இது மாதிரி பல முட்டாள் தனங்களை ஈழ தமிழ் பதிவர்கள் செய்து இருக்கிறார்கள்

  9. //பதி May 21st, 2009 at 9:13 pm Edit Comment

    பாலா,

    புலம்பெயர்ந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் போன்ற சொற்கள் இருக்கும் போது, அகதிகள் என்ற சொல்லாடலை தவிர்க்கலாமே??//

    இனிய பதி,

    பாஸ்போர்ட், விசா சகிதம் வலம் வருபவர்களை வேண்டுமானால்.. நீங்கள் சொல்லுகின்ற படி அழைக்கலாம். ஆனால்.. மாற்றுத்துணியுடன் மட்டும் அலையும் எம்மக்களை இப்படி அழைத்தால் தான் தகும். இந்த வேதனையும் நம் மனதைச்சுடும்..! 🙁

  10. சிவஞானம் ஜி says:

    a very good approach!
    keep it up.

  11. தல,

    மக்களாகிய நாம், அல்லது தமிழர்களாகிய நாம், அல்லது வலைப்பதிவர்களாகிய நாம் ஏதாவது ஆக்கபூர்வமாகச் செய்ய முடியுமா? நிதி திரட்டுவது, அரசிடம் பரிந்துரைப்பது, நம்மளவில் போராட்டம் நடத்துவது, தட்டிகள் ஒட்டுவது போன்ற மற்றவர்களுக்குத் தூண்டுகோலாக இல்லாமல், நாமே செய்யக்கூடியது ஏதாவது இருக்கிறதா…. நல்வழியில், நேரடியான பலன் ஏற்படக்கூடியவகையில்?

    நான் கொஞ்ச நாட்கள் முன்பு நினைத்திருந்தேன், இங்குள்ளவர்கள மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பது, கணிணி சொல்லிக்கொடுப்பது (என் புத்தி! வேற என்னத்தைத் தெரியும் இதை விட்டா!!!) போன்றவற்றை முயற்சிக்கலாம் என்று. ஆனால் நீங்கள் சொல்வதைப் பார்த்தால், நம்மையெல்லாம் முகாம்களுக்குள் நுழையவே விடமாட்டார்கள் போலிருக்கிறதே… மேலும் பள்ளி/கல்லூரியில் படித்து நானும் ஒன்றையும் tear பண்ணவில்லை 🙁 வேறு ஏதாவது தோன்றினால் பகிர்ந்துகொள்ளவும்… இதர தமிழகம்-வாழ் இந்தியர்களும்தான்.

  12. உண்மைதான் நண்பரே. நான் ஈழத்தில் இருந்து படிப்பதற்காக வந்து இருக்கிறேன். இங்கு இருப்பவர்கள் எம்மை படிப்பதற்கு அனுமதிக்கிறார்கள் ஆனால் நான் வேலை கேட்டால் “நீ Srilanka வா உனக்கு வேலை இல்லை” என்கிறார்கள். எமது பணம் வேண்டும் ஆனால் நாம் இங்கு சம்பாதிக்க கூடாது அதுதான் உங்கள் அரசின் எண்ணம்.

  13. நான் இதை பற்றி அதிகம் எழுத வேண்டி இருக்கிறது. இப்போது நேரம் இல்லாததால் எழுதமுடியவில்லை. நான் எனது தளத்தில் நிச்சயமாக எழுதுவேன்.

    காவல்துறை எம்மை தமது காவல் நிலையத்தில் பதியும் போது எவ்வளவு லஞ்சம் கேட்கிறார்கள். ஏன் நாம் கொடுக்கிறோம். கொடுக்காமல் விட்டால் என்ன ஆகும்?, கொடுப்பதால் என்ன ஆகும்? என்று பல விடயங்களை எழுத விரும்புகிறேன். எதிர்பாருங்கள்.

    நன்றி.

  14. ramkumar says:

    bharathi the content of story is good

  15. பரத் says:

    //நன்கொடை என்ற நாகரீகப் பிச்சைக்கு பதில் அவர்களின் கல்விக்கும் வேலை வாய்ப்புக்குமான ஏற்பாடுகளை நம்மாலான அளவில் செய்து கொடுப்போம்.//

    வியக்க, சிந்திக்க வைக்கும வரிகள். எம்மை மாற்றியதற்கு நன்றி…..

  16. சலசலப்புகளுக்கிடையில் வெளிவந்த உருப்படியான இடுகைகளில் இதுவொன்று.

    நன்றி.

    செய்ய வேண்டியவை எவ்வளவோ இருக்க ஆளாளுக்கு பிரபாகரன் இறந்தாரா, இருக்கிறாரா என்று ஆராய்வதிலேயே பொழுதைக் க’ளி’க்கின்றனர் (எழுத்துப்பிழையன்று).
    எதிரிக்குத் தேவையானதும் இதுவே. தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியவர்களே எதிரிக்குத் துணைபோய்க்கொண்டிருப்பது வேதனைக்குரியது.

  17. //அதே சமயம் தன் தொப்புள் கொடி உறவென நம்பிக்கையோடு தமிழகத்துக்குள் வந்தவர்கள் அடைபட்டுக் கிடக்கும் முகாம்களின் நிலமை என்னவாக இருக்கிறது?//

    தொப்புள்கொடி உறவுகளின் நிலையே அப்படித்தானே இருக்கிறது? நெசவாளர்களுக்கு கஞ்சித்தொட்டி திறப்பதும், விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டதும் இங்கே சமீபத்தில் தானே நடந்தது. பிச்சைக்கார நாட்டுக்கு நாடிழந்தவர்களாக வருபவர்களின் நிலைமை அதைவிட மோசமாகத்தான் இருக்கும் 🙁

    //அப்படி ஒரு நிலை வந்தால் அன்று மட்டும் என்ன செய்து கிழித்துவிடப் போகிறோம் நாம்? நம் தலைவர்கள்தான் என்ன செய்து விடப் போகிறார்கள்? அவர்களுக்கு அடுத்த தேர்தல் கூத்திற்கு இன்னமும் இரண்டு வருட அவகாசம் இருக்கிறது. //

    ஈழப்பிரச்சினை என்பது இங்கிருக்கும் திமுகவை வசைபாட தொட்டுக்கொள்ள ஊறுகாயாக பலருக்கு இருக்கிறது. அவர்களது பட்டியலில் நீங்களும் இணைந்திருப்பது சமீபக்கால பதிவுகளில் நன்கு தெரிகிறது 🙂

  18. ramkumar says:

    //நெசவாளர்களுக்கு கஞ்சித்தொட்டி திறப்பதும், விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டதும் இங்கே சமீபத்தில் தானே நடந்தது.//

    I agree that this is the reality of common people here. But what about our leaders? They are competing with tata and ambani to get the first place in asia’s top millionaire list. Don’t you think its shame on us to elect them again and again?

    Lucky, I don’t think you will be able to answer this question. Because you know things very clearly but your ego is stopping you from accepting it openly… pls refer the meaning of this kural from ur thalaivar’s kuraloviyam – “thanenjarivathu poiyarka..” 🙂

  19. //I agree that this is the reality of common people here. But what about our leaders? They are competing with tata and ambani to get the first place in asia’s top millionaire list. Don’t you think its shame on us to elect them again and again?//

    இங்கிருக்கும் ஜனநாயக அமைப்பின் குறைபாடு இது. இதற்கு நானா பதில் சொல்லமுடியும்?

    இதற்குத் தீர்வாக மாற்று அமைப்புகள் முன்வைப்பது ‘புரட்சி!’

    ஆனால் இங்கு புரட்சியென்பதை முன்னெடுக்கும் மாற்று அமைப்புகள், சாமானிய மக்களை அதிகார ஏவல்களான காவல்துறையிடமும், இராணுவத்திடமும் போராடி அடிவாங்கி செத்துப்போகத்தான் கற்றுக் கொடுக்கின்றன.

    இருக்கும் அமைப்புகளில் எது சுமாரான அமைப்போ அதை தேர்ந்தெடுத்து அவரவர் இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டியதாகிறது.

    //Don’t you think its shame on us to elect them again and again?//

    உங்களுக்கு ரொம்ப இதைப்பற்றி ஷேமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். உங்களுக்கு தெரிந்த ஒரு தீர்வைச் சொல்லுங்கள் பார்க்கலாம் 🙂

  20. ramkumar says:

    Nope. Its definitely not the fault of the democracy sir. Its a problem with the people like you who adopting a stand and not ready to change it even for genuine reasons – like saying “naan pidicha muyalukku moonre kaal”

    You are not even ready to criticize dmk’s activities in the illam issue but at the same time calling prabakaran as you hero etc… don’t tell me that there is no controversy between these two stands… again refer to the same kural – “thannenjarivathu poiyarkka”

    Now the problem is not even voting dmk or admk – you are not even ready to hear few words against dmk after seeing all his dramas…. I really feel pitty for you lucky. Nothing else to say on this.

    Note: sorry for english – i dont have tamil fonts yet. Soon will get them installed.

  21. //Nope. Its definitely not the fault of the democracy sir. Its a problem with the people like you who adopting a stand and not ready to change it even for genuine reasons – like saying “naan pidicha muyalukku moonre kaal”//

    அண்ணே! நான் புடிச்ச முயலுக்கு ரெண்டுகால் தான்னு ஒத்துக்கறேன். ஆனா எனக்கு ஏதாவது நல்ல சாய்ஸ் கொடுங்க. இருப்பதே ரெண்டே சாய்ஸ் எனும்போது, எது சுமாரான சாய்ஸ்னு எனக்கு தோணுதோ அதைதான் எடுத்துக்க முடியும். உங்க சாய்ஸை தான் நானும் எடுத்துக்கணும்னு நீங்க அடமெல்லாம் புடிக்கக் கூடாது 🙂

    //ou are not even ready to criticize dmk’s activities in the illam issue but at the same time calling prabakaran as you hero etc… don’t tell me that there is no controversy between these two stands… again refer to the same kural – “thannenjarivathu poiyarkka”//

    ஈழப்பிரச்சினையில் திமுகவின் சமீபக்கால நடவடிக்கைகள் எனக்கு திருப்தியில்லை. எனக்கும் ஒரு வலைப்பூ உண்டு. அங்கே தெளிவாகவே எழுதியிருக்கிறேன். கலைஞரால் ஈழப்பிரச்சினையில் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யமுடியாது என்று தீவிரமாகவே இப்போதும் நம்புகிறேன். உங்களுக்கு ஒரே ஒரு திருக்குறள் தான் தெரியுமா? வேற ஏதாவது குறளை மேற்கோள் காட்டவும். உதாரணத்துக்கு “கற்க கசடற” 🙂

    //Now the problem is not even voting dmk or admk – you are not even ready to hear few words against dmk after seeing all his dramas…. I really feel pitty for you lucky. Nothing else to say on this.//

    ‘கலைஞர் ஒழிக’ன்னு கத்தணுமா? அதையும் கத்தியாச்சி.

    ’ஜெயலலிதா வாழ்க’ன்னு கத்துவதில் எனக்கு உடன்பாடில்லை…

    அடுத்து….?

    //Note: sorry for english – i dont have tamil fonts yet. Soon will get them installed.//

    உங்க ஆங்கிலமே தமிழ் மாதிரி எளிமையா புரிஞ்சுக்கற மாதிரி இருக்கு. இப்படியே கண்டினியூ பண்ணாலும் பிரச்சினை ஒண்ணும் இல்லை…

  22. ramkumar says:

    //ஈழப்பிரச்சினையில் திமுகவின் சமீபக்கால நடவடிக்கைகள் எனக்கு திருப்தியில்லை. எனக்கும் ஒரு வலைப்பூ உண்டு. அங்கே தெளிவாகவே எழுதியிருக்கிறேன். கலைஞரால் ஈழப்பிரச்சினையில் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யமுடியாது என்று தீவிரமாகவே இப்போதும் நம்புகிறேன். // But when others are pointing it out, why you are getting tensed? For example, let us take this article itself. It talks about various things and in only one place, this guy is referring karunanidhi’t activity. But you are interpreting that the whole article has been written only to scold your beloved kalainar. If he is your god, go ahead and worship him. No one is going to come and ask you to shout “jayalalitha vazhga”. But you cannot expect others also to keep quiet when your leader is doing all silly dramas like fasting between breakfast and lunch etc. That’s where we are seeing you as a “thondaradip podi” 🙂

    //உங்க ஆங்கிலமே தமிழ் மாதிரி எளிமையா புரிஞ்சுக்கற மாதிரி இருக்கு// Am I supposed to take this as a compliment? ((

    Anyhow, thinking in Tamil, and then translating it to English just to type is really making me tired. Let me also install the Tamil typing tools in my home system, and will come back around tonight.

  23. maraicoir says:

    //தல,
    மக்களாகிய நாம், அல்லது தமிழர்களாகிய நாம், அல்லது வலைப்பதிவர்களாகிய நாம் ஏதாவது ஆக்கபூர்வமாகச் செய்ய முடியுமா? நிதி திரட்டுவது, அரசிடம் பரிந்துரைப்பது, நம்மளவில் போராட்டம் நடத்துவது, தட்டிகள் ஒட்டுவது போன்ற மற்றவர்களுக்குத் தூண்டுகோலாக இல்லாமல், நாமே செய்யக்கூடியது ஏதாவது இருக்கிறதா…. நல்வழியில், நேரடியான பலன் ஏற்படக்கூடியவகையில்?
    நான் கொஞ்ச நாட்கள் முன்பு நினைத்திருந்தேன், இங்குள்ளவர்கள மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பது, கணிணி சொல்லிக்கொடுப்பது (என் புத்தி! வேற என்னத்தைத் தெரியும் இதை விட்டா!!!) போன்றவற்றை முயற்சிக்கலாம் என்று. ஆனால் நீங்கள் சொல்வதைப் பார்த்தால், நம்மையெல்லாம் முகாம்களுக்குள் நுழையவே விடமாட்டார்கள் போலிருக்கிறதே… மேலும் பள்ளி/கல்லூரியில் படித்து நானும் ஒன்றையும் tear பண்ணவில்லை வேறு ஏதாவது தோன்றினால் பகிர்ந்துகொள்ளவும்… இதர தமிழகம்-வாழ் இந்தியர்களும்தான்.///

    தனுஷ்கோடியில் ஏன் வலை பதிவர் சந்திப்பை நடத்த வேண்டும்?

    http://maraicoir.blogspot.com/2009/05/blog-post_07.html

  24. //But when others are pointing it out, why you are getting tensed?//

    அதர்ஸ் நெஜமாகவே ஈழப்பிரச்சினையில் அக்கறை கொண்டு தாக்குகிறார்கள் என்றால் ஓக்கே. கருணாநிதியை தாக்குவதற்காகவே ஈழப்பிரச்சினையை கையில் எடுத்துக் கொள்பவர்களுக்கு நான் ஒத்தூத வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

    ஒரு நல்ல உதாரணம் காட்டுகிறேன். உண்மைத் தமிழன், உண்மைத் தமிழ்ன் என்றொரு நல்லவர் இருந்தார். அவருடைய பழைய பதிவுகளை எடுத்துப் பாருங்கள். எத்தனை ஈழத்தமிழர் ஆதரவு பதிவுகள் இருந்தது என்று தெரியும்? ஈழப்பிரச்சினை கருணாநிதிக்கு எதிராக கொம்புசீவப்படுவது அறிந்ததும் உடனே இன்ஸ்டண்ட் ஈழத்தமிழ் ஆதரவாளர் ஆகிவிட்டார். WE THE PEOPLE ஜெய்சங்கர் என்ற நண்பரும் இதுபோல தான். இதுமாதிரி பதிவுலகில் ஏராளமான ஆதாரங்களை காட்டமுடியும்.

    வைகோ அதிமுக அணியில் இருப்பதால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு கருணாநிதி மீது வெறுப்பு. கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்று இழவுப்பாட்டு பாடிக் கொண்டிருந்தார்கள்.

    நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். ‘விமர்சனம் நேர்மையானதாக இருக்கவேண்டும்’

    நம்ம பாலா அண்ணாவின் முந்தையப் பதிவைப் பாருங்கள். பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்துகிறார். பிரபாகரன் சோகத்தை விட கருணாநிதியை திட்டவேண்டும் என்ற வெறிதான் அவரிடம் பீறிட்டுக் கொண்டு கிளம்பியது.

    இதுபோல வெறி இருந்தவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கும் சாக்கு ‘ஈழம்’.

    திமுககாரனுக்கு இருக்கும் உணர்வு என்னவென்று மக்களுக்கு தெரியும். மக்கள் மன்றத்தில் அதற்கான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். இங்கிருக்கும் முன்னூற்றி சொச்சம் பதிவர்கள் மட்டுமே தமிழ் சமூகமல்ல.

    எல்லோருக்கும் சார்பு இருப்பது போல எனக்கும் சார்பு இருக்கிறது. நான் சார்பாக இருப்பது மட்டுமே தவறு என்று எப்படி நீங்கள் சுட்டமுடியும்?

    //But you cannot expect others also to keep quiet when your leader is doing all silly dramas like fasting between breakfast and lunch etc. That’s where we are seeing you as a “thondaradip podi” //

    நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளுங்கள். பிரச்சினையில்லை. நான் கூட உங்களை ஜெயலலிதாவின் அடிவருடியாக பார்த்துக் கொள்கிறேன் 🙂 உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா?

  25. lucky look

    திமுககாரனுக்கு இருக்கும் உணர்வு என்னவென்று மக்களுக்கு தெரியும். மக்கள் மன்றத்தில் அதற்கான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.///]]

    சிங்களனுக்கு ஆயுத உதவியும் வட்டியில்லா கடனும் கொடுத்து தமிழனை கொல்ல ஊக்கப்படுத்து சோனியாவிடம் கூட்டணி வச்சு வெத்து தந்தி அடித்த உங்கள் தலைவனின் உண்ர்வா???

    இல்லை பி.ஜே.பி ஆட்சியில குஜராத்துல 3000 முசிலீம்களை கொல்லும் போது சொரணையற்று அமைதியா இருந்த மதச்சார்பற்ற பெரியாரின் நாத்திக உண்ர்வா?

    உண்ர்வு பற்றி பேச் தி.மு,க வுக்கும் தி.’மு.க’ அடிமைகளுக்கும் அருகதையே கிடையாது

  26. Joe says:

    //
    நன்கொடை என்ற நாகரீகப் பிச்சைக்கு பதில் அவர்களின் கல்விக்கும் வேலை வாய்ப்புக்குமான ஏற்பாடுகளை நம்மாலான அளவில் செய்து கொடுப்போம்.
    //
    நல்ல பதிவு பாரதி.

    எல்லாராலும் நேரம் ஒதுக்கி அகதிகளான மக்களுக்கு உதவ முடியாது. அதனால் நிவாரணப் பணிகளுக்கு பணம் தருவது முதல் கட்ட நடவடிக்கை, அதை தவறு என்று சொல்ல மாட்டேன். அவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி சேர்ப்பது, சிங்கள / இந்திய அரசியல்வியாதிகளின் கைகளில் சிக்காமல்?

    நிச்சயமாக, அதற்கு அடுத்த கட்டமாக நீங்கள் சொன்ன ஆலோசனைகளின்படி பதிவர்களும், மற்ற வாசகர்களும் இறங்கினால் நல்லது.

  27. // நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். ‘விமர்சனம் நேர்மையானதாக இருக்கவேண்டும்’

    நம்ம பாலா அண்ணாவின் முந்தையப் பதிவைப் பாருங்கள். பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்துகிறார். பிரபாகரன் சோகத்தை விட கருணாநிதியை திட்டவேண்டும் என்ற வெறிதான் அவரிடம் பீறிட்டுக் கொண்டு கிளம்பியது.

    இதுபோல வெறி இருந்தவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கும் சாக்கு ‘ஈழம்’.

    திமுககாரனுக்கு இருக்கும் உணர்வு என்னவென்று மக்களுக்கு தெரியும். மக்கள் மன்றத்தில் அதற்கான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். இங்கிருக்கும் முன்னூற்றி சொச்சம் பதிவர்கள் மட்டுமே தமிழ் சமூகமல்ல.

    எல்லோருக்கும் சார்பு இருப்பது போல எனக்கும் சார்பு இருக்கிறது. நான் சார்பாக இருப்பது மட்டுமே தவறு என்று எப்படி நீங்கள் சுட்டமுடியும்?//

    லக்கி, மேற்கண்ட உன்னுடைய வாசகங்கள் நிறைய வருத்தத்தைத் தருகிறது. விகடனில் ஞானி எழுதிய கட்டுரைக்கு முதல் எதிர்ப்பை பதிவு செய்தவன் நான்தான் என்றே நினைக்கிறேன். இது உனக்கும் கூடத் தெரியும். அதன் பிறகுதான் சுவரொட்டிகளும், துண்டுப் பிரசுரங்களும், கண்டன கூட்டங்களும் நடந்ததை மறந்திருக்க மாட்டாய் என நினைக்கிறேன்.

    எனக்கு மற்ற அரசியல் கட்சித் தலைவர்களைவிட கலைஞரின் மீது தனிப்பட்ட மதிப்பு உண்டு. அதற்காக பொது நலனுக்கெதிரான தி.மு.க அரசு செய்யும் செயல்களுக்கு ஜெயலலிதாவையா குறை சொல்ல முடியும்?

    ’தமிழினத் துரோகிகள் ஒழிக’ பதிவில் நான் எங்கும் திமுக தலைவரையோ தமிழக முதல்வரையோ குறிப்பிடவில்லை. அப்படியிருக்க, உனக்கு மட்டும் தமிழினத் துரோகி என்றால் கருணாநிதி என எப்படித் தோன்றியது(உண்மை?!?!)

    இந்தக் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கோரும் உரிமை ஒருவனுக்கு இருக்கும்போது இந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கோரக் கூடிய உரிமையும் இன்னொருவனுக்கு உண்டு என்பதையும் நினைவில் நிறுத்துங்கள்.

    ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை காங்கிரஸ் கையாண்டது என்பதில் துளியும் சந்தேகமில்லை எனக்கு. இது தெரிந்த பின்னும், அக்கட்சியுடன் கூட்டணியைத் தொடர்ந்தது எப்படி தி.மு.கவுக்கு காலத்தின் கட்டாயமோ அதே போல அதே காரணத்துக்காக தி.மு.கவையும் ஒதுக்க வேண்டி நான் பிரச்சாரம் செய்ய நேர்ந்ததும் காலத்தின் கட்டாயமே.

    அப்போது கூட ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நான் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. இவர்களுக்குப் போடாதீர்கள் என்று மட்டுமே சொன்னேன் – எவருக்குப் போட வேண்டும் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை. தமிழகத்தில் ஐம்முனைப் போட்டி நிலவியதை பத்திரிக்கை வாயிலாக அனைவரும் அறிந்திருக்க முடியும். எந்தவொரு தனி விருப்பு, வெறுப்புகளை நான் யாரிடமும் எப்போதும் கையாள்வதில்லை.

    தங்களின் புரிதலுக்கும், அன்புக்கும் நன்றி.

    தோழன்,
    பாலா.

  28. நல்லதொரு கட்டுரை..நல்லதொரு பார்வை.

    இப்போதைய சூழ்நிலையில் இலங்கையிலிருக்கும் புலம்பெயர்ந்த மக்களுக்கான நிதியுதவியை அரசிடம் கொடுப்பதுவும் அப்படியே கடலில் தூக்கிப் போடுவதும் ஒன்றுதான். அதை வைத்து இந்தியாவில் வாடும் சகோதரர்களுக்காவது ஏதாவது செய்யட்டும்.

    ஓர் காலத்தில் தமிழ்நாட்டுக்கு அபயம் தேடி வந்த காதல் ஜோடியைக் கைது செய்து மிகப் பொறுப்பாக இலங்கை அரசிடம் கையளித்தது. அவர்களுக்கு அதன்பிறகு என்ன ஆனது என இன்று வரை எனக்குத் தெரியவில்லை..உங்களுக்கு ஏதேனும் விபரங்கள் தெரியுமெனில் தயவுசெய்து அறியத்தாருங்கள். மனதை எதுவோ உறுத்திக் கொண்டே இருக்கிறது.

  29. தமிழன் says:

    //ஈழப்பிரச்சினை என்பது இங்கிருக்கும் திமுகவை வசைபாட தொட்டுக்கொள்ள ஊறுகாயாக பலருக்கு இருக்கிறது. அவர்களது பட்டியலில் நீங்களும் இணைந்திருப்பது சமீபக்கால பதிவுகளில் நன்கு தெரிகிறது //

    🙁 🙁

    உங்களுடன் விவாதம் புரியும் மனது எனக்கில்லை

    ஆனால் இந்த கேள்விகளுக்கு நீங்களே விடை அளிக்கலாம்

    1. இலங்கை தமிழ் அகதிகளின் குழந்தைகளுக்கு அரசு பள்ளியில் இடம் இல்லை என்று கூறிய முதல்வர் யார்

    2. மறுபடி அரசு பள்ளியில் அவர்களுக்கு இலவச கல்வி வழங்கியவர் யார்

    சந்தேகம் இருந்தால் இங்கு பாருங்கள். நாங்கள் சொன்னால் தான் நீங்கள் நம்பப்போவது இல்லையே

    http://www2.irb-cisr.gc.ca/en/research/rir/?action=record.viewrec&gotorec=450336

    Education

    According to Red Cross Red Crescent, following the assassination of Rajiv Gandhi, the Indian government terminated access to state schools for Sri Lankan Tamil children; however, access was later reinstated (1997). RI corroborated this information, indicating that, as of January 2004, access to educational facilities was given to children of Sri Lankan asylum seekers in India (RI 20 Jan. 2004).

    சரியா

    போதுமா

    ஆனாலும் நீங்கள் பள்ளியை விட்டு விரட்டியவர் பற்றி ஒன்றும் கூற மாட்டீர்கள்

    திரும்ப சேர்த்தவர் தான் குற்றவாளி. சரி தானே தல

    சரி

    அவர்கள் கல்லூரி படிப்பு படிப்பது பற்றி பார்ப்போமா

    While there were provisions for child education, there is a quota system for Sri Lankan asylum seekers who wish to attend Indian universities (ibid.). ஆங். இடப்பங்கீடு தான்..

    Starting in 1984, twenty-five seats were allotted in the field of engineering, twenty in medicine, ten in agriculture, and five in law (The Statesman 1 Feb. 2006).

    இதை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்

    Following the 1991 assassination, the allotment was revoked, then later restored in 1996,

    1991ல் முதல்வர் யார் சாமி
    1996ல் முதல்வர் யார் சாமி

    only to be revoked again in 2002, following a decision by the Madras High Court to eliminate quotas (ibid.).

    2002ல் முதல்வர் யார் சாமி. நீங்கள் நிருபர். உங்களுக்கு கண்டிப்பாக தெரியும் என்றே நம்புகிறேன்

    1991 அரசு உத்தரவு என்பதால் 1996ல் அது எளிதாக மாற்றப்பட்டதால் 2002 கோர்ட் மூலமே உத்தரவு வாங்கப்பட்டது. அதனால் இதை அரசு மறுபடி மாற்ற முடியாது

    Consequently, since 2002, Sri Lankan students have awaited the outcome of a three-year petition to the chief minister of Tamil Nadu to restore their right to attend Indian universities (ibid.).

    சரி தானே

    பரவாயில்லை

    நீங்கள் மேலும் கலைஞரை திட்டிக்கொள்ளுங்கள்

    அது உங்கள் உரிமை
    இது உங்கள் வலைப்பதிவு

    நன்றி
    வணக்கம்

    அது சரி

    அம்மா ஈழத்தாய் என்றால் ராஜபக்சே ஈழ மாமாவா… என்ன கொடுமை சரவணன்

  30. தமிழன் says:

    அனைவருக்கும் பொதுவான விண்ணப்பம் / வேண்டுகோள்

    உண்மையில் உங்கள் அக்கரை ஈழத்தமிழர் நலன் என்றால் இந்த வழக்குகளை சட்டப்படி எதிர் கொள்ளுங்கள்

    அதை விடுத்து ஏற்கனவே கலைஞர் வழங்கி, ஜெயலலிதாவால் பறிக்கப்பட்டதை எல்லாம் லிஸ்ட் போட்டு கலைஞரை திட்டுவது சரியா என்று உங்கள் மனசாட்சியையை கேட்டுக்கொள்ளுங்கள்

  31. தமிழன் says:

    இது மாதிரி தான்

    இது போல் ஆயிரக்கணக்கான ஆதாரங்கள் இருக்கின்றன

  32. தமிழன் அவர்களே!

    தங்களது சுட்டிகளுக்கு நன்றி. பூனைகள் கண்களை மூடிக்கொண்டிருக்கின்றன. எனவே பூலோகம் இருண்டுதான் கிடக்கிறது 🙂

    //ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை காங்கிரஸ் கையாண்டது என்பதில் துளியும் சந்தேகமில்லை எனக்கு//

    எனக்கும் காங்கிரஸை துளியும் பிடிக்காது என்றாலும், இவ்விஷயத்தில் கொஞ்சம் குழம்பியே இருக்கிறேன். தயவுசெய்து காங்கிரஸ் ஈழத்தமிழருக்கு எதிராக கடந்த ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் செய்த நடவடிக்கைகளை யாராவது விலாவரியாக பட்டியலிடுங்கள். பொத்தாம்பொதுவாக ரா இதைச் செய்தது, அதைச் செய்தது என்று புலம்பெயர் ஸ்டைலில் சொல்ல வேண்டாம். ஆதாரங்களோடு ஒரு பதிவாவது தமிழில் பதியவேண்டும் என்ற எண்ணத்திலேயே இதைக் கேட்கிறேன்.

    //எனக்கு மற்ற அரசியல் கட்சித் தலைவர்களைவிட கலைஞரின் மீது தனிப்பட்ட மதிப்பு உண்டு. அதற்காக பொது நலனுக்கெதிரான தி.மு.க அரசு செய்யும் செயல்களுக்கு ஜெயலலிதாவையா குறை சொல்ல முடியும்?//

    கலைஞர் உண்ணாவிரதம் இருந்ததை ஒரே நொடியில் நாடகம் என்று நிராகரித்த உங்களைப் போன்றவர்களால் ஜெயலலிதாவின் திடீர் ஈழப்பாச உண்ணாவிரதம் பற்றி ஒரு சொல் கூட சொல்லமுடியவில்லையே என்ற ஆதங்கம் எனக்குண்டு. ஜெயலலிதா எதிரி என்று தெரியும் என்ற பழைய பல்லவியைப் பாடவேண்டாம். தேர்தலுக்கு முந்தைய ஜெயலலிதாவின் ஈழ வேடத்தை மவுனமாக உங்களைப் போன்றோரும், வெளிப்படையாகவே ஈழத்தவர்களும் அங்கீகரித்தார்கள் என்பது வெள்ளிடைமலை.

  33. தமிழன் says:

    // தயவுசெய்து காங்கிரஸ் ஈழத்தமிழருக்கு எதிராக கடந்த ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் செய்த நடவடிக்கைகளை யாராவது விலாவரியாக பட்டியலிடுங்கள்.//

    1. போர் நடத்தியது
    2. ஆயுதங்கள் அளித்தது
    3. சாட்டிலைட் மூலம் படம் எடுத்து கொடுத்தது
    4. ராடார் அளித்தது
    5. புலிகளின் 12 கப்பல்களை (போர் கப்பல்கள் அல்ல வியாபார கப்பல்களை) இந்திய போர் கப்பல்களை வைத்து மூழ்கடித்தது
    6. விமானம் மூலம் உணவு பொட்டலங்களை போட மறுத்தது (ராஜிவ் இதையாவது செய்தார்)
    7. போர் நிறுத்தம் வேண்டிய தொலைநகலை பத்மநாதன் அனுப்பியது ராஜபக்சேயின் அலரி மாளிகைக்கோ அல்லது அவர் இருந்த ஜோர்தானுக்கோ அல்ல – இந்திய தூதரகத்திற்கு

    ஆனால் இதில் எதிலும் கலைஞரின் பங்கு கிடையாது. அவரால் செய்திருக்கு கூடியது எதுவும் இல்லை என்பது நிஜம்

    இவர்களுக்கு கலைஞரை திட்ட காரணம் வேண்டும். இங்கு நடக்கும் ஆட்சியில் குறை கூற ஒன்றும் இல்லை. அதனால் இதை வைத்து திட்டுகிறார்கள்

  34. தமிழன் says:

    பாருங்கள்
    ஈழ அகதிகளுக்கு ராஜஸ்தான் அரசு கல்லூரியில் இடம் அளிக்கிறது ஆதாரம் http://exams4india.com/medical-entrance-examinations/pmt-rajasthan/
    கேரள அரசும் கல்லூரிகளில் இடம் தருகிறது ஆதாரம் : http://www.webindia123.com/career/entrance/eng-state/keam/admission.htm

    இங்குள்ள ஈழத்தாயோ பள்ளிகல்வி கூட கற்கக்கூடாது என்கிறார்.

    ஈழத்தமிழ் குழந்தைகளை பள்ளிகளில் நுழைய தடை போட்டதன் நோக்ககும் யாழ் நூலகத்தை கொளுத்தியதன் நோக்கமும் ஒன்று தானே இது கூடவா புரியாது

    ராஜாஸ்தானிலும் கேரளாவிலும் பொறியியல், மருத்துவ கல்லூரிகளில் இடஓதுக்கீடே இருக்கிறது. IITல் இட ஒதுக்கீடு இருக்கிறது

    தமிழகத்தில் பள்ளிகல்வி கூட பெற தடை செய்தவரை ஆதரிப்பவர்களின் உண்மை நோக்கம் என்ன.

    இந்த பட்டியலில்…. யூ டூ பாலபாரதி 🙁 🙁 🙁

  35. தமிழன் says:

    பாருங்கள்
    ஈழ அகதிகளுக்கு ராஜஸ்தான் அரசு கல்லூரியில் இடம் அளிக்கிறது ஆதாரம் http://exams4india.com/medical-entrance-examinations/pmt-rajasthan/
    கேரள அரசும் கல்லூரிகளில் இடம் தருகிறது ஆதாரம் : http://www.webindia123.com/career/entrance/eng-state/keam/admission.htm

    இங்குள்ள ஈழத்தாயோ பள்ளிகல்வி கூட கற்கக்கூடாது என்கிறார்.

    ஈழத்தமிழ் குழந்தைகளை பள்ளிகளில் நுழைய தடை போட்டதன் நோக்ககும் யாழ் நூலகத்தை கொளுத்தியதன் நோக்கமும் ஒன்று தானே

  36. raja says:

    வா பகையே… வா…
    வந்தெம் நெஞ்சேறி மிதி.
    பூவாகவும் பிஞ்சாகவும் மரம் உலுப்பிக் கொட்டு.
    வேரைத் தழித்து வீழ்த்து.
    ஆயினும் அடிபணியோம் என்பதை மட்டும்
    நினைவில் கொள்!”

    ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்
    ஆயினும் போரது நீறும், புலி
    ஆடும் கொடி நிலம் ஆறும்.
    பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்
    பாசறை ஆயிரம் தோன்றும், கருப்
    பைகளும் ஆயுதம் ஏந்தும்.
    மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை
    மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த
    சிங்கள கூட்டங்கள் ஓடும்.

    Paaya Theriyum.Pathunga Theriyum.Payapada Theriyaathu.

    Intha Ulagathil Suriyanai Thottavanum illai. Thalaivar Prabakaranai Suttavanum illai.

    ( Nile Raja )

  37. கென் says:

    மிகத்தெளிவான தேவையான பதிவு தல.

    இதுதான் நிதர்சனம்.

  38. ela says:

    Is there any centralized non-profit organizations (also non-political) for the welfare of the refugees in TN?!

    a nice post… while most of the tamizhs in TN are so happy to go about blood boiling bragging about their Veeram, no one really is interested in coming up with any action that can potentially give postive future to these people! I am happy to read such post which raises about sheer empty bravado!

  39. மு. சுந்தரமூர்த்தி says:

    லக்கிலுக்,
    //காங்கிரஸ் ஈழத்தமிழருக்கு எதிராக கடந்த ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் செய்த நடவடிக்கைகளை யாராவது விலாவரியாக பட்டியலிடுங்கள். பொத்தாம்பொதுவாக ரா இதைச் செய்தது, அதைச் செய்தது என்று புலம்பெயர் ஸ்டைலில் சொல்ல வேண்டாம்.//

    நீங்களே தொடர்ந்து செய்திகள், வலைப்பதிவுகள் வாசித்து வருகிறவர் என்கிற முறையில் யாரையும் கேட்கவே தேவையில்லை. தற்போது செய்திகளிலும், வலைப்பதிவுகளிலும் அடிபட்டுக்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விவகாரம் ஒன்று:

    பல ஐரோப்பிய நாடுகள் உட்பட 17 நாடுகள் ஐ.நா. சபை மனித உரிமைகள் ஆணையத்தில் போரின்போது இலங்கை அரசு மனித உரிமை மீறியது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோரி இன்று விவாதம் நடைபெறுகிறது. இலங்கை அரசு இதற்கு எதிராக எதிர்மனு தாக்கல் செய்திருக்கிறது. அந்த மனுவில் இலங்கை அரசுக்கு ஆதரவாக கையொப்பம் இட்ட 13 நாடுகளில் இந்தியாவும் ஒன்று (பாகிஸ்தான், சீனா இன்ன பிற).
    இது குறித்த நாகார்ஜுனன் தன்னுடைய பதிவிலும், பின்னூட்டங்களிலும் தெரிவித்துள்ள விவரங்களையும், அதில் கொடுத்துள்ள ஆவணங்களையும் வாசித்துப் பாருங்கள்.

    http://nagarjunan.blogspot.com/2009/05/blog-post_20.html

    ஆர, அமர முதல்வர் கருணாநிதி இன்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறாராம். அது தொடர்பான செய்தி:
    http://www.hindu.com/2009/05/27/stories/2009052757200100.htm

    இன்னும் நீங்கள் மணலுக்குள் தலையைப் புதைத்துக்கொண்ட நெருப்புப் கோழியாய் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

  40. ஆக்கபூர்வமான பதிவு.பதிவர் கட்டமைப்பு (அதாங்க கூட்டம் சேர்க்கிறது)அமைப்பதில் நீங்கள் வல்லவர் என்பது பழைய பதிவுகளின் நினைவோட்டத்தில் வந்து போகிறது.இப்போதைக்கு தேவையானதும் எதிர்காலத்தில் அதுவே ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக அமைவதற்கும் முக்கிய தேவை மனித,பொருளாதார,சுயநலமில்லாத நீண்ட நோக்குடன் கூடிய கட்டமைப்புக்கள்,அதற்கான அடிப்படை அஸ்திவாரத்தை அமைப்பது நல்லது.

    //நன்கொடை என்ற நாகரீகப் பிச்சைக்கு பதில் அவர்களின் கல்விக்கும் வேலை வாய்ப்புக்குமான ஏற்பாடுகளை நம்மாலான அளவில் செய்து கொடுப்போம்.//

    அடைப்பானுக்குள்ள வார்த்தைகளைத் தோண்டிப்பார்த்தால் மிஞ்சுவது பொருளாதாரமே.எனவே நன்கொடைப் புறக்கணிப்பில் எனக்கு உடன்பாடில்லை.உயரிய நோக்குடைய நல்ல அமைப்புடன் பொருளாதாரத்தையும் கட்டமைப்பது நல்லது.

    தமிழக அகதி முகாம்களில் வாழ்பவர்களுக்கு கல்வி,வேலை வாய்ப்புக்களுக்கான வசதிகளுடன் அவர்கள் தங்கள் எதிர்காலத்தையும் வருங்கால சந்ததியையும் மேலும் தங்கள் தாய்மண்ணில் மீள் அமர்த்திக் கொள்வதற்கும் வழிவகைகளை ஆராய வேண்டும்.

    நாம் பிரபாகரன் பற்றிய கவலையிலும்,குழப்பும் கருத்துக்களிலும் வலம் வந்து கொண்டிருக்கையில் இலங்கை அரசு மனிதர்களை அடையாளம் காணும் முகாம்களிலும் அதே நேரத்தில் உலக அழுத்தங்களுக்கு ஈடு கொடுத்துக் கொண்டும் கூடவே தனது பொருளாதார கட்டமைப்புக்களை சீர்செய்யவும் முயற்சிகளை முன் வைக்கிறது.32 நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து தொழில்முன்னெடுப்புக்கு விண்ணப்பித்துள்ளன.அதே வேளை சீனாவும் தனது 1 பில்லியன் உதவிகளுடன் இலங்கையை ஸ்வாகா செய்யக் காத்துக் கொண்டிருக்கிறது.இதில் தமிழர்கள் கவனம் செலுத்த வேண்டியதும் அவசியம்.இந்தியா,சீனா,பாகிஸ்தான் கூட்டுப் பொருளாதாரப் போட்டிகளுடன் முன்பே அஸ்திவாரம் அமைத்துக் கொண்ட ஈரான்,ஜப்பான் போன்றவை இலங்கையின் பொருளாதாரப் போரில் நமது பார்வையையும் நோக்க வேண்டியது அவசியம்.

    புலம்பெயர் தமிழர்கள் தமிழக திரைப்படங்களில் முதலீடு செய்வது தெரிகிறது.இவர்கள் எதிர்கால நிலைப்பாடு என்ன என்பதும் சிந்திக்க வேண்டியுள்ளது.

    ஆயுதப்போரின் இறுதியில் பொருளாதாரப் போருக்கு இலங்கை இப்போது தயார் செய்து கொண்டிருக்கிறது.இதில் வடக்கு கிழக்குகளை எப்படி நிர்மாணிக்கப் போகிறதென்பதும் தமிழர்களின் எண்ணங்களை,உணர்வுகளை எப்படி கையாளப் போகிறதென்பதும் கூர்ந்து நோக்க வேண்டியவை.

    (பின்னூட்டம் பதிவு மாதிரி நீண்டு விட்டதோ?)

  41. மன்னிக்கவும் மீண்டும் ஒரு பின்னூட்டத்திற்கு.பதிவர் லக்கிலுக் ஜனரஞ்சகமாக பல பதிவுகளைத் தொட்டாலும் கட்சி என்ற கோட்டுக்குள்ளேயே நின்று கூவுவது வருத்தம் தருவது மட்டுமல்ல அவரது எழுத்தின் மீது இருக்கும் நம்பிக்கையையும் குறைக்கிறது.அவர் உங்க பக்கத்துல நின்னுகிட்டு இருந்தா கொஞ்சம் என் சார்பாக ஒரு குரல் விடுங்க:)

  42. // மீண்டும் மீண்டும் பிரபாகரன் உயிரோடிருப்பதாக நிரூபிப்பதில் நாம் செலவழிக்கும் ஆற்றலை ஆக்க பூர்வமாக இது போன்ற விஷயங்களில் செலவழித்தால் அம்மக்களுக்கு ஏதேனும் நிவாரணம் கிடைக்கக் கூடும். //

    Well Said Bala… 🙂

    நான் எழுதிய பதிவு “வாழ்க அகதிகள் மூகாம் ! ” பற்றி உங்கள் கருத்து கூறவும்.

    http://guhankatturai.blogspot.com/2009/05/blog-post_25.html

  43. jeyapal says:

    நல்ல பதிவு.
    இந்தியா அகதிகள் பற்றிய ஐ.நா. ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடாத ஒரு நாடு. அந்த வரையில் இந்தியாவின் சட்டங்கள் அகதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று கட்டுப் படுத்தலாம். மனித நேயம் உள்ள எவருமே இந்த அகதிகளைக் காலம் காலமாக அகதி வாழ்க்கை வாழுவதை விரும்ப மாட்டார்கள். ஆட்சியாளரிடம் கோரிக்கையாக வையுங்கள். பத்திரிகைகளுக்கும் எழுதுங்கள். இந்தியாவிலிருக்கும் நல்ல உள்ளங்கள் தான் இதற்காகப் பாடுபட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.