Tag: விடுபட்டவை

  • விடுபட்டவை 08-11-11

    கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் தில்லு முல்லு, முல்லு தில்லு என்று ஏகப்பட்டது நடந்திருப்பதாகக்கூறி, ஸ்டார் ஹெல்த் இன்சூயரன்ஸுக்கு கொடுக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்தார் முதல்வர் ஜெயலலிதா. பலரும் எதிர்ப்பு காட்டிய நிலையில், கொஞ்ச நாளுக்கு பிறகு அத்திட்டம் எம்.ஜி.ஆர் பெயரில் தொடரும் என்று அறிவிப்பு வெளியானது. சமீபத்தில் புதிய காப்பீட்டுத் திட்டத்திற்கான டெண்டர் விடப்பட்டது. நம் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் நான்கும் களத்தில் குதித்தன. கடந்த முறை தனியாரிடமிருந்து கிடைத்த, அனுபவத்தில் இம்முறை…

  • விடுபட்டவை 04 ஜூன்2010

    ஒரு வருடங்களுக்கு மேலாக யோசித்து யோசித்து.. கடைசியாக திரட்டிகளில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இனி விடுபட்டவையை .. இங்கு நேரடியாகவோ அல்லது ரீடர் மூலமாகவோ பார்த்துக்கொள்ளலாம். என்னிக்கோ ஒன்னு எழுதுறோம்.. அதையும் தூக்கிட்டுப் போய் திரட்டியில் இணைக்க வேண்டியதிருக்கு.. பல சமயம்.. நெட் படுத்தும் பாட்டில் இணைக்க முடியாமல் திரும்பி வரும் படி ஆகிடுது. சரி.. கொஞ்ச நாட்கள் இப்படியும் இருந்து பார்ப்போம். — இலக்கிய(!) கட்டுரைகளை ஆரம்பத்தில் படிக்கும் போது இருக்கும் மோகம் சில நாட்கள்…

  • விடுபட்டவை 29 மார்ச்2010

    தமிழகத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் நூல்கள் இதுவரை நாட்டுடமையக்கப் பட்டுள்ளன. இதில் பலரின் பெயர் எனக்கு தெரியாததாக இருக்கிறது. கடந்த முறை தமிழகரசு சிலரின் பெயர்களை முன்மொழிந்தது அதில் சில குடும்பத்தினர்.. உரிமை கொடுப்பதற்கு மறுத்துவிட்டனர். (சுரா,கண்ணதாசன்..மேலும் சில..) அப்படியானவர்களை தவிர்த்து, நாட்டுடமையாக்கப்பட்டவர்களின் பட்டியலும், அவர்களின் நூற்பட்டியலும் தேவைப்படுகிறது. விபரம் தெரிந்தவர்கள்… எழுதினால் பயனுள்ளதாக இருக்கும். இந்தபதிவு உங்களுக்கு உதவக்கூடும்.. ~~~~ கிட்டதட்ட ஒருவருடங்களுக்கு மேலாக என்னால் அதிக அளவில் பதிவர் சந்திப்புகளில் கலந்துகொள்ள முடியவில்லை. அதற்கான…

  • விடுபட்டவை 04/03/10

    கேள்வி :- அய்யா நீங்கள் ஏற்கனவே கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகி விடக் கூடாது என்று  சொல்லியிருக்கிறீர்கள்.    இப்போதெல்லாம் மடாதிபதி களால்  ஆசிரமங்களில் அத்துமீறல் நடப்பதாக  அடிக்கடி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறதே? (திருச்சியில் 03/03/10 அன்று நடந்த செய்தியாளர்களின் சந்திப்பில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு முதல்வரின் பதில் கீழே) கலைஞர் :- சமீப காலமாக  அத்தகைய செயல்கள் அதிகமாகத் தான் நடக் கின்றன.    அது பற்றி ஆலோசித்து,  எத்தகைய நடவடிக்கையை  அரசு மேற்கொள்ளலாம் என்பது குறித்து…

  • விடுபட்டவை 03-03-2010

    கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு நாள் தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி, பத்திரிக்கைகளின் செய்தி பிரிவுகளுக்கு கூரியரில் ஒரு பார்சல் வந்தது. பார்சலை திறந்து பார்க்கும் வரை யாருக்கும் தெரியாது.. அது இவ்வளவு பெரிய சமாச்சாரம் என்பது. நான்கு பக்க கடிதமும், கூடவே ஒரு சிடியும் இருந்தன அதில். கடித வரிகளை வைத்து அதை எழுதியவர் ஒரு பெண் என்பதை யூகிக்க முடிந்தது. கூடவே சிடியில் இருந்தது 30 நிமிடங்கள் ஓடக்கூடிய அறைக்காட்சிகள். அதில் இருந்த சாமியாரும்,…