ஒரு கேள்வி ஒருவர் முன் வைக்கப் பட்டால் அதற்கு சாதாரணமானவர்கள் பதில் சொல்வதற்கும் பொது வாழ்வில் இருப்பவர் பதில் சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு. ஒரு அரசியல்வாதியிடம் அவரது அரசியல் நடவடிக்கைகள் குறித்து யார் வேண்டுமானாலும் கேள்வி எழுப்பலாம். பதில் சொல்லியே ஆக வேண்டும். மக்களின் பிரதிநிதியாக இருப்பவர் அவர்.  அப்படி பதில் சொல்ல விருப்பமில்லையென்றாலும் அதை நாசூக்காக தாண்டிச் செல்ல வேண்டுமே அன்றி, நீ யார் என்னை கேட்க என்று எகிறுவது நல்ல பண்பாகாது. இதே அளவுகோல் பொது வாழ்வின் எல்லாத் துறைக்கும் பொருந்தும்.

அரசியல்வாதிகளோ, சினிமா துறையினரோ பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏதேனும் கேள்விக்கு எரிந்து விழுந்தால் அது பரபரப்புச் செய்தியாக புலனாய்வு பத்திரிக்கைகளில் வெளியாகிறது. கருணாநிதி, தினகரன் எரிப்பு சம்பவத்தில் டில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் எரிந்து விழுந்தது, விஜய் தன் ரசிகர்களை அதட்டியது போன்றவற்றுக்கு எழுந்த சலசலப்பை இங்கே உதா-வாக குறிப்பிடலாம்.

இவையெல்லாம் கூட ஒரு கண நேரம் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமையால் எழுந்த கோப வெளிப்பாடுதான். ஆனால் ஒரு இலக்கியவாதியிடம் அவரது இலக்கிய செயற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினால் எழுத்து மூலமாகவே கேட்பவனை வசைபாடுவது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம். இந்த செயலை சாரு, ஜெமோ என்ற இரு இலக்கியவாதிகளுமே செய்தாலும் இலக்கிய/இணைய உலகில் இவர்கள் இருவருக்கும் காட்டப்படும் பாரபட்சம் ஆச்சரியமூட்டும் அளவுக்கு பெரிது.

ஆத்திரத்தில் அரிவாளைத் தூக்கிக் கொண்டு ஓடி பத்து பேரை வெட்டிச் சாய்ப்பவனை விட பல நாள் திட்டமிட்டு தீராத வன்மத்துடன் ஒற்றை ஆளுக்கு விஷம் கொடுத்து கொல்பவனை அபாயம் மிக்கவனாகக் கருதுகிறது நமது சட்டம்.

தன்னை கேள்வி கேட்பவனை எதிர்கொள்ளும் விதம் சாரு, ஜெயமோகன் இருவருக்குமே ஒன்றுதான். கேள்விக்கு சரியான பதிலைச் சொல்லாமல் கேள்வியை முன்வைத்தவரை கேவலப்படுத்துவது, வசை பாடுவது என்பதுதான் அது.

சாரு சரமாரியாக கெட்ட வார்த்தைகளைப் போட்டுவிட்டு தன்னிடம் பதிலில்லை என்பதை பச்சையாக வெளிக்காட்டிக் கொள்கிறார். அதே நேரம் ஜெயமோகனோ ஏதோ தீவிரமாக பதில் சொல்வதான பாவனையில் கேள்வி கேட்டவரை அதே அளவு இன்னும் சொல்லப்போனால் அதைவிடவும் மோசமாக திட்டுகிறார்.

சாரு இதை செய்த போது பொங்கி எழுந்து அவரை அம்பலப் படுத்திய துப்பறியும் புலிகள் யாரும் இப்போது கொட்டாவி விடக் கூட வாயைத் திறக்கக் காணோம். தவறிழைத்தவர்கள் யார் என்பதை பொறுத்தே நமது அறிவு ஜீவிகளும் கூட அதை எதிர்கொள்ளும் விதத்தை முடிவு செய்வார்களேயானால் பின் இவர்களுக்கு தீவிர சார்பு நிலையுடன் இயங்கும் சராசரி மனிதர்களான விசிலடிச்சான் குஞ்சுகளான திரை ரசிகர்களையோ இல்லை அரசியல் தொண்டர்களையோ நக்கலடிக்க என்ன அருகதையிருக்கிறது? அந்த சராசரிகள் இவர்களைக் காட்டிலும் எவ்வளவோ உயர்வானவர்கள் – அவர்களின் சார்பு நிலையை வெளிப்படையாகச் சொல்லும் தைரியமேனும் அவர்களுக்கு உண்டு. இந்த அறிவு ஜீவிகளுக்கு????

இப்படி திட்டி எழுதிய இடுகையை சாரு பாணியிலேயே ஜெ.மோவும் தூக்கி விட்டார். சாருவுக்கு நடந்தது போலவே தன்னையும் யாரேனும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து அசிங்கப்படுத்தி விடுவார்களோ என்று கொஞ்சம் உள்ளூர அச்சமிருந்திருக்கும் போல. எனவே முன்னெச்செரிக்கையாக அவர் இன்று எழுதியிருக்கும் தனது அடுத்த பதிவில் அப்படி எழுதப்போகும் பதிவர்களை கட்டம் கட்டி விட்டார்…

//என்னைப்பொறுத்தவரை இந்தவிஷயத்தில் வெளிபப்டையாகவும் நேர்மையாகவும் சிந்திக்கவும் பேசவும் மிகச்சிலரால்மட்டுமே முடியும். பெரும்பாலானவர்கள் , குறிப்பாக தங்களை எழுத்தாளர்களாக எண்ணிக்கொண்டிருக்கும் பதிவர்கள் மற்றும் சிற்றிதழ் அரசியலாளர்கள், இந்தமாதிரி எந்த ஒரு விஷயத்தையும் தங்களை முற்போக்கான, அறச்சீற்றம் கொண்ட கொள்கைத்தங்கங்களாகவும் மானுடநேய மாமனிதர்களாகவும் காட்டிக்கொள்வதற்கான சந்தர்ப்பமாகவே பயன்படுத்திக்கொள்வார்கள். //

வேறொரு கான்டெக்ஸ்டில் வைத்து பதிவர்கள் தங்களைத் தாங்களே எழுத்தாளர்கள் என்று கருதிக் கொள்பவர்கள் என்று சொல்கிறார் இவர். (இதற்கு முன் கூட தன்னை விமர்சிப்பவர்களை கூசிச்சிறுகும் குற்றுயிர்கள் என்று குறிப்பிட்டதாக நினைவு) எனில் யார் வந்து சான்று தர வேண்டும், இன்னின்னார் எழுத்தாளர்கள், இவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் இல்லை என்று? எந்த தாசில்தார் அலுவலகத்தில் சான்று பெற வேண்டும் என்பதையும் இந்த மாமேதையே சொன்னால் தேவலாம்.

சாருவுக்கு வந்த கடிதமும், ஜெமோவுக்கு வந்தகடிதமும் அடக்கத்தில் மாறுபட்டு இருக்கிறது. உடனே அய்யனாரை (நம்ம அடர்கானகபுலி –இல்லை 😀 ) அரசியல்/வேறு தளம் என்று எல்லாம் விமர்சிக்க கிளம்பிவிடுவார்கள். ஆதரவு அறிவு ஜீவிக்கூட்டத்தினர். மொத்தத்தில் கேள்வி கேட்க/சந்தேகம் கேட்கக் கூட  எவனுக்கும் உரிமையில்லை.

ங்கொத்தா.. ங்கொம்மா என்று திட்டுவோம். அப்படியில்லையெனில் கொஞ்சம் நுண்ணுணர்வோடு திட்டுவோம். அவ்வளவு தான். என்ன கொடும சார் இது? 🙁

அல்லது அனல் வாதம் புனல் வாதம் போல ஏதேனும் அமானுஷ்யமான முறையில் நம் எழுத்து எதிர் கொண்டு வர வேண்டும் என போட்டிகள் உள்ளதோ என்னவோ… தெரியவில்லை. அடுத்த பதிவில் அதையெல்லாம் விரிவாகச் சொன்னால் எங்களைப் போன்றோர் எல்லாம் எழுத்தாளராக முடியுமா முடியாதா என்பதை பரிட்சித்துப் பார்த்துக் கொண்டு, தகுதியில்லை எனில் ஒதுங்கிக் கொள்ளவும் முடியும். தயை கூர்ந்து இந்த உதவியை செய்து தகுதியற்றவர்கள் தங்கள் எழுத்தாளராகி விட்டதான மாயையில் இருந்து வெளி வர உதவினால் தமிழ்த் தாய் தமிழ்ச்சுழலை காத்த உங்களையும், உங்கள் குலம், கொற்றம்.. இன்னபிறவற்றையும் வாழ்த்துவாள். 🙂 .

ஜெமோ-வின் தொடர்புடைய சுட்டி


Comments

10 responses to “இலக்கிய உலகின் தாதாக்கள்”

  1. தன்னை லேசாக ஒருவர் விமர்சித்துவிட்டார் என்றவுடன், நீ போலி, பாவனையாளன், இலக்கிய ஆக்கங்களைப் படிப்பதில்லை ஆனால் நான் தியாகி, வரலாற்றை வார்ப்பவன் etc etc.

    சாருவுக்கு வந்த கடிதம் மாதிரிகூட இல்லை இது. லேசான விமர்சனம்தான் (அதுவும் இவர் நன்றாக எழுதுவாரென்றும் சொல்கிறது). விமர்சித்தவரும் பல வருடங்களாக இலக்கியத்தில் இயங்கி வருபவர், சிறுபத்திரிகை ஆசிரியரும்கூட. அவருக்குத்தான் இந்த மாதிரியான பதில்.

    சாரு கோபத்தில் ஓத்தா, ஒம்மா என்று திட்டிவிட்டு அழித்துவிட்டார். நுண்ணர்வில் சிறந்த ஜெமோ அதையே ஜாலக்காகச் செய்துவிட்டு நீக்கிவிட்டார்.

    அடிப்படையில் இவர்களுக்கு இருக்கும் குணம் – தன்னை விமர்சிப்பவனை காலி செய்ய வேண்டும் – அவ்வளவே.

  2. அதிஷா Avatar
    அதிஷா

    ஜெமோவுக்கு கடுதாசி போட்டவர் ஏற்கனவே நிறைய புக்கெல்லாம் எழுதி இலக்கிய உலகத்துக்கு பரிச்சயமானவர்னு நினைக்கிறேன். அவருக்கே இந்த கதினா!.. சாருவே பரவால்ல முன்ன பின்ன தெரியாத யாரோவதான் திட்டினாரு..

  3. அன்பான பாலபாரதி,

    ஆபாசமாக எதையாவது எழுதி நீக்குவதற்கும் விவாதம் சார்பான உரையாடலை எந்த காரணத்தினாலோ நீக்குவதற்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் கூடவா நமக்கு புரியாது? புரியாதது போனற் பாசாங்கை ஏதும் செய்ய இயலாது.

    சரி. ஜெயமோகனின் இடுகை நீக்கப்பட்ட சர்ச்சையை விடுத்து அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயத்தைப் பற்றி என்னுடைய கருத்து:

    ()

    அய்யனாருக்கான ஜெயமோகனின் பதிலை மீண்டும் படித்துப் பார்த்தேன். ஜெயமோகன் மீது பொறாமையாக இருக்கிறது. தான் சொல்ல நினைப்பதை இத்தனை கச்சிதமாக பொருத்தமான வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பது சொல்ல முடிவதற்குப் பின்னால் நிச்சயம் அதற்கான உழைப்பும் தேடுதலும் வரமும் இருக்கிறது.

    இது பொதுவாகவே எல்லா வாசகர்களிடமும் விமர்சகர்களிடமும் உள்ள கேள்விதான். அதாவது நாம் மட்டும் நம்முடைய வாழ்க்கையில் இயல்கிற எல்லா சமரசங்களையும் செய்து கொண்டு லெளதீகத்தின் எல்லா இன்பங்களையும் அனுபவித்துக் கொண்டு தாம் ஒருவேளை நம்பும், அனுதாபிக்கும் கொள்கைகளுக்காக அணுவளவும் தியாகம் செய்யாமலிருப்போம். (ஆனால் பொதுவில் பேசும் போது நம்முடைய பாவனைகள் வேறு மாதிரியாக இருக்கும்.)

    இவ்வாறிருக்கும் நாம் எழுத்தாளனையும் பொதுவாழ்க்கையில் இருப்பவனையும் நோக்கி, அவன் சிறிய அளவு சமரசத்திற்காக முயன்றாலும் அல்லது அவ்வாறான சந்தேகம் நமக்கு வந்தாலும் அவனைப் பற்றி கூசாமல் உடனே அவதூறாக பேசுவதற்கு தயாராக இருப்போம்.

    ஜெயமோகன் இதுவரை தம்மை ஆழமாக நிருபீத்துக் கொண்ட,பிற்கால வரலாறு குறிப்பிடும்படியான தரமான இலக்கிய ஆககங்களை ஆய்வுகளை செய்தவொரு எழுத்தாளர். அவர் எழுதும் பல ஆய்வுக் கட்டுரைகளுக்குப் பின்னாலும் அதற்கான செறிவான உழைப்புள்ளதை அவரது விமர்சகர்கள் கூட ஒப்புக் கொள்வார்கள். உதாரணமாக ‘நாவல்’ என்கிற கோட்பாடு நூலை நான் வாசிக்கும் போது பிரமிப்பில் ஆழந்து போனேன். தமிழில் இதுவரை வெளியான அனைத்து முக்கியமான – ஜனரஞ்சகப்படைப்புகள் உட்பட – நாவல்களை வாசிக்காமல் அந்த நூலை எழுதியிருக்கவே முடியாது. தமிழின் நவீன இலக்கியத் தடத்தில் ஜெயமோகன் அளவிற்கு ஆழமாக எழுதிக் குவித்த அவருக்கு மாற்றான எந்தவொரு எழுத்தாளரையும் குறிப்பிட முடியாது. (அவர் முன்வைக்கும் இந்து்த்துவ அரசியல் மீதான விமர்சனங்களைப் பற்றி இங்கு நான் பேசவில்லை)

    அவர் தற்போது சினிமாத்துறையில் நுழைந்திருக்கிறார். இதனால் தம்முடைய பொருளாரத் தேவைகள் நிறைவேறியிருப்பதாகவும் அதுவே இன்னும் அதிக சுதந்திரமாக எழுதுவதற்கான சூழ்நிலையை தருவதாக வெளிப்படையாகவே அவர் எழுதியிருக்கிறார். இதுவரை அவர் பணியாற்றிய படங்கள் (கஸ்தூரிமான் தவிர) நான் கடவுளும், அங்காடித்தெருவும் தரமான படங்களே. பின்னாளிலும் பொருளாதாரத் தேவைகளுக்காக அவர் வணிகப்படங்களுக்காக எழுதி அது தரும் சுதந்திரத்தில் நல்ல இலக்கியங்கள் எழுதி நமக்கு கிடைக்குமென்றால் என்னைப் பொறுத்தவரை அது ஏற்கக்கூடியதும் புரிந்துக் கொள்ளக்கூடியதுமாகும்.

    இத்தனை சொற்ப திரைப்படங்களில் பணிபுரிந்ததற்குள்ளாகவே, ‘அவர் சமரசத்தில் இறங்கி விட்டார், அங்கே போய் வசனம் எழுதும் நேரத்தில் உருப்படியாக இன்னும் நல்ல இலக்கியம் எழுதலாமே’ என்று நோகாமல் உபதேசம் செய்வதெல்லாம் மகா அநியாயம்.

    எழுத்தாளன் தன் வாழ்நாளெல்லாம் பொருளாதாரத் தேவைகளுக்காக லோல்பட்டு இலக்கியம் செய்து பின்பு மருத்துவ உதவி கூட இல்லாமல் சாக வேண்டும். (புதுமைப்பித்தன், ஜி.நாகராஜன் போன்றவர்களை நினைவு கூருங்கள்) நாம் அவர் எழுதுவதையெல்லாம் மெதுபகோடா சாப்பிட்டுக் கொண்டே வாசித்து விட்டு ‘பலே பலே’ என்று சிலாகித்துவிட்டு அவன் செத்தபிறகு ‘பாவம் நல்ல எழுத்தாளம்பா, வறுமையில செத்துப் போனான்’ என்று வருடத்திற்கொரு நினைவு கூர வேண்டுமா? இதைத்தான் அய்யனார் எதிர்பார்க்கிறாரா?

  4. >விஜய் தன் ரசிகர்களை அதட்டியது

    இது என்ன புதுசா இருக்கு? ஒருவேளை யூட்யூபில் எடிட் பண்ணிய வீடியோவை சொல்றீங்களா? அப்படி என்றால், அது கேள்வி கேட்டதற்கான அதட்டல் இல்லை. பேசவிடாமல் சலசலப்பலை அமைதியாக்கச் செய்த அதட்டல் என்று முழுமையாக இன்னொரு வீடியோவைப் (எடிட் செய்யப்படாதது) பார்த்ததில் அறிகிறேன்.

    சத்தியமா நான் விஜை ரசிகன் எல்லாம் இல்லை 🙂

  5. அறிவிசீவியல்லாத ஜெமோ வாசகன் Avatar
    அறிவிசீவியல்லாத ஜெமோ வாசகன்

    மிகப் பிரமாதமான கட்டுரையை ஏன் ஜெ நீக்கினார் என தெரியவில்லை ,

    இந்த அய்யனார் காலச்சுவடு காலத்திலிருந்தே ஜெவை வாராவர்ரம் திட்டிக் கொண்டிருந்த ஆள் , ஜெ கோபமாக ஏதோ சொன்னார் என்று எழுத தெரிகிறதே தவிர அவர் எழுதியுள்ளது குறித்த விமர்சனங்களை காணோமே ?

    வம்பு மட்டுமே பேசத்தெரிந்த உங்களுக்கும் சேர்த்துதான் அந்த கட்டுரை .

  6. அறிவிசீவியல்லாத ஜெமோ வாசகன் Avatar
    அறிவிசீவியல்லாத ஜெமோ வாசகன்

    இந்தா மறுபடியும் போட்டுட்டாருங்கய்யா , அய்யனாரு பேரிலாம http://www.jeyamohan.in/?p=7452

  7. அய்யா அறிவு சீவியல்லாத ஜெமோ வாசகரே, மும்பையிலிருந்து வந்து மீண்டும் இந்த சுட்டியைத் தந்தமைக்கு நன்றி. :)))

  8. அறிவிசீவியல்லாத ஜெமோ வாசகன் Avatar
    அறிவிசீவியல்லாத ஜெமோ வாசகன்

    மும்பைலிருந்து வந்தா என்ன , முக்கு தெருவில இருந்து வந்தா என்ன ?

    அழிச்சிட்டு ஓடிட்டாருன்னீங்க , அவர்தான் பதில் போட்டுட்டாரே , இவ்வளவு தெளிவா ஏன் கோபப்டுறாருன்னு பதில் எழுதியிருக்காரே , சொல்லுங்கய்யா.

  9. யாருடைய அடிப்பொடியுமல்லாத இலக்கிய வாசகன் Avatar
    யாருடைய அடிப்பொடியுமல்லாத இலக்கிய வாசகன்

    அய்யா அறிவுசீவியல்லாத ஜெமோ வாசகரே,

    குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்ததால் தானே முதல்ல அந்த இடுகைய தூக்கிட்டு, இப்போ அதுலேர்ந்து பெயரையெல்லாம் எடுத்துட்டு பொதுமைப் படுத்தி போட்டிருக்கார். ஜெனரலைஸ் பண்ணிட்டா ஏன் என்னை நீங்க இப்படி சொல்றீங்கன்னு யாரும் கேள்வி கேட்க முடியாதுன்னு யோசிச்சு, அப்படியே கேட்டாலும் நான் உங்களைச் சொல்லலையேன்னு செந்தில் கவுண்டமணி வாழப்பழ ஜோக் போல சமாளிச்சுறலாம்னு ப்ளான் பண்ணி… ஐயோ பாவமுங்க உங்க எழுத்தளரு… ரொம்பத்தான் பெண்டு நிமிருது போல.. 🙂

  10. யாருடைய அடிப்பொடியுமல்லாத இலக்கிய வாசகன் Avatar
    யாருடைய அடிப்பொடியுமல்லாத இலக்கிய வாசகன்

    follow up-ற்காக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *