சங்கர் இந்த பெயர் கொஞ்ச மாதங்களுக்கு முன் பத்திரிக்கை உலகை கலக்கியது. தமிழகத்தையே உலுக்கிய டெலிபோன் ஒட்டுக் கேட்பு வழக்கில் திமுகவின் அமைச்சர் பூங்கோதை நடத்திய அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிரான ஆதாரங்களை வெளியிட்டார் என்று கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் இந்த சங்கர். ஊழல் ஒழிப்புத் துறையின் உயரதிகாரியான உபாத்தியாயாவின் அலுவலகத்தில் வேலை செய்த சங்கர், அதிகார பீடங்களின் ஊழல்களின் குணத்தை போட்டுடைத்தவர்.

எக்மோரில் இருக்கும் கோர்ட்டுக்கு அவரை அழைத்து வந்தார்கள். தப்பு தப்பு இழுத்து வந்தார்கள் என்பது தான் சரி.. குழுமி இருந்த ஊடகவியலாளர்களுடன் நானும் நின்றிருந்தேன். சங்கரின் மேலுதடு வீங்கிப் போய் இருந்தது. காவலர்களின் கட்டுப்பாட்டையும் மீறி, அவரிடம் மைக்கை நீட்டினேன்.(னோம்)
‘நான் எந்த தப்பு செய்யவில்லை. தப்பு செய்தவங்களை அம்பலப்படுத்தியிருக்கேன்.என்ன தண்டனை வேணும்னாலும் கொடுக்கட்டும். இது தப்புன்னா.. இதை நான் செஞ்சுகிட்டே இருப்பேன்’என்று அவர் முடிக்கும் முன்னரே தள்ளிக்கொண்டு போனது காவல்துறை.

அவர் பணி நீக்கம் செய்யப்படதும்.., எல்லோரும் அவரை மறந்து போனோம். சென்னை உயர்நீதி மன்றத்தின் பக்கம் போகும் பேதெல்லாம் வழக்குரைஞர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் சங்கரை பார்த்திருக்கிறேன். அவர் கேஸு போய்கிட்டு இருக்கு அதனால தான் இங்க அடிக்கடி வர்றார் என்றார் ஒரு நண்பர்.

இன்று சவுக்கு என்ற பெயரில் பதிவுகளை வலையேற்றியமைக்கு.., வழிப்பறி செய்ததாகவும், கத்தியைக்காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படிருப்பதாக அறிகிறேன்.

நல்ல விசயம். ஆதாரங்களை அள்ளிக்கொடுத்து, ஏமாற்றுகின்றவர்கள் மீது நடவடிக்கை எடு- என்று எழுதுகிறவன் தப்பு செய்கிறவன். அவனை அள்ளிக்கொண்டு போய் நையப்புடைப்பீர்கள். ஆனால்.. ஆதாரத்தில் சொல்லப்படிருக்கும் விசயங்களை எப்படி எளிதாக மறந்து போகிறீர்கள் என்று தெரியவில்லை.

உங்கள் மொழியில் சொல்வதென்றால்.. “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்….” மீதியை நீங்களே முடித்துக்கொள்ளுங்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே..! ”தீதும், நன்றும் பிறர் தர வாரா…” என்ற கணியனின் வார்த்தைகளுக்கு உங்களுக்கு பொருள் தெரிந்திருக்கும். தேர்தல் வேறு வருகிறது. வேறு என்ன நான் சொல்ல.

ஒரு மூத்த பத்திரிக்கையாளரின் ஆட்சியில் உண்மையை எழுதியதற்காக கொடுக்கப்படும் பரிசு கண்டு பூரித்துப் போய் இருக்கிறேன் நான். 🙁


தொடர்புடைய சுட்டி.
ஊழலுக்கு எதிரான சவுக்கு தன் வேலையை நிறுத்தாது:-
http://www.savukku.net/2010/07/blog-post_22.html