வெகு நாட்களாக டபாய்த்துக் கொண்டிருந்த சாந்தாமணியை கிட்னாப் செய்து வந்து இன்று கென் தலையில் கட்டியாகிவிட்டது. ஸ்ஸப்ப்ப்ப்ப்….பா… இனியாவது அவனின் புலம்பல்கள் குறையுமென்று நம்புகிறேன். இனி விழும் அடிகளெல்லாம் வெறும் உள்காயங்களையே தரும் என்பதாலும், கென்னும் ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் என்பதாலும் வெளிப்படையாக புலம்பும், கெட்ட வார்த்தைகளால் அர்ச்சிக்கும் அவனது உரிமை இன்று முதல் ரத்து செய்யப் படுகிறது.
இனிமேல் சுந்தரும், ஆசிப்பும் பப்ளிக்கா கென்கிட்ட ஐ லவ் யூ சொல்ல முடியாது… சொல்லிட்டு தப்பிக்கவும் முடியாது…. 🙂
சில மணித்துளிகளுக்கு முன்பாக மண வாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கும் கென்னுக்கும், அவனது வாழ்கைத் துணைவிக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.
பி.கு: என் நட்பு வட்டத்தில் மிச்சமிருக்கும் ஒரே பேச்சிலரான சென்ஷிக்கும் பெண் ஏற்கனவே ரெடி என்பதால் விரைவில் இன்னொரு டும் டும் டும் சத்தத்தை எதிர்பாருங்கள். சென்ஷி@, சீக்கிரம் எங்கள் கல்யாணமானோர் சங்கத்து ஜோதில வந்து ஐக்கியமாகுய்யா…. ஒருத்தன் மட்டும் ஜாலியா சுத்தினா பாக்கற எங்களூக்கு வயத்தெரிச்சலா இருக்குல்ல…
27 Responses to கென்னுக்கும், சாந்தாமணிக்கும் டும் டும் டும்