இணையம்+ கணினி குறித்த சந்தேகமா உங்களுக்கு?

பொதுவாக பாரம் (Forum) குறித்த தெளிவான பார்வை என்னிடம் இருந்ததில்லை. அது ஒரு தொல்லையாக மட்டுமே இதுவரை பார்த்து வந்திருக்கிறேன். வலைப்பதிவுகளில் எழுதுவது போல அங்கேயும் கதை கவிதை கட்டுரை என்று எழுதிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் எனக்கு வியப்பாகத் தோன்றும்.

நம் கருத்துக்களை நம்ம வலைப்பக்கத்தில் சொல்லாமல் இப்படி ஒரு கட்டம் போட்ட சட்டத்துக்குள் சொல்லுறாங்களேன்னு பல நாள் வியந்திருக்கிறேன். இவ்வகை பாரங்களில் மொக்கை போடுபவர்களும் உண்டு! பின்னூட்ட கும்மி போன்ற வகைகளும் கூட உண்டு!

தமிழ், இணையம், கணினி போன்ற எனக்கு தேவையான பலவிசயங்களை அலசும் நுட்பமானவர்களும், வல்லுனர்களும் ஒரே இடத்தில் கூடி பேசினால் என்னவாகும்! என்னைப் போன்ற ‘கணினி கைநாட்டுக்கு’ நிறைய அறிவுத்தீனி கிடைக்கும்.
http://ravidreams.net/forum/

நண்பர் ரவிசங்கர்.. தொடங்கி இருக்கும் பாரம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. உங்களுக்கும் பயன்படலாம். எட்டிப் பார்த்து முடிவு செய்யுங்கள்.

பாஸ்டன்பாலா, ரவி, மயூரேசன், நந்தா போன்ற பலரும் உபயோகமான விசயங்களைப் பற்றி பேசுவதும், சந்தேகங்களுக்கு விடையளிப்பதுமாக இருப்பதை பார்க்கும் போது மகிழ்வாகவும், பாரத்தின் பயன்பாடு குறித்தும் அறிந்துகொள்ள முடிகிறது.


Comments

10 responses to “இணையம்+ கணினி குறித்த சந்தேகமா உங்களுக்கு?”

  1. அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்

  2. பாலா, இப்படி அறிமுகப்படுத்துவீங்கன்னு எதிர்ப்பார்க்கல. நன்றி. நீங்க சொன்ன காரணங்களுக்காகத் தான் நானும் நிறைய மன்றங்ளை எட்டிப் பார்க்காமல் இருந்தேன். அதனாலேயே, அந்தக் கூறுகள் இல்லாத மாதிரி இந்த மன்றம் தொடங்கினோம்.

    **

    அப்புறம், forum க்கு தமிழ்ல “மன்றம்” என்றே சொல்வோமே..

  3. மன்றம்.. நல்லாதான் இருக்கு! எனக்கு சின்ன வயசு முதலே பாரம்(படிவம்) என்றாலே அலர்ஜி! அதைக்கண்டால் ஓடி ஒளிவேன். சில சமயம் அதைக்கொடுப்பவர்களிடம் ஏகத்துக்கும் கேள்வி கேட்டு அந்த படிவத்துல இருக்கிறதை விட அதிகமா நானே கேள்வியை கேட்டுடுவேன். :))

    அறிமுகப்படுத்தனும்னு தோணிச்சு ரவி!

    வலைப்பதிவுகளில் இல்லாத, என் பதிவுகளை எட்டிப் பார்க்கும் என் நண்பர்கள் சிலருக்காகத்தான் இந்த பதிவு!

  4. அன்பு பாலா

    பாரம் அறிமுகத்திற்கு நன்றி.

    முத்தமிழ் கூகிள் குழுமத்தின் உறுப்பினராக நான் இருக்கிறேன். http:/groups.google.com/group/muththamiz அங்கு சுமார் ஆயிரம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தமிழில் மிக அதிகமான மடல்கள் வரும் ஒரே குழுமம் என்றும் சொல்லலாம், பல வித விவாதங்கள், கட்டுரைகள், கவிதைகள் என அது ஒரு தனி உலகம்.

    கருத்து சுதந்திரம் இருந்தாலும் ஒரு சில கட்டுப்பாடுகளும் இருக்கின்றன.(முக்கியமாக தனி மனித தாக்குதல்கள், சாதிமத, இன தாக்குதல்கள், பெண்களை இழிவு படுத்துதல் போன்ற மடல்கள் மட்டுறுத்தப்படுகின்றன) அதனாலேயே பலரும் குழுமங்களிலேயே அதிகம் எழுதுகிறார்கள். ஏன் பல பதிவர்களும் தொடர்ந்து குழுமங்களில் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

    சிலருக்கு குழுமங்கள் பிடிக்கின்றன. சிலருக்கு வலைப்பதிவுகள். அவரவர்க்கு அது அது.

  5. தூயா Avatar
    தூயா

    🙂

  6. எட்டிப்பார்த்துடுவோம்

  7. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

  8. மதுவதனன் மௌ Avatar
    மதுவதனன் மௌ

    நன்றி பாலபாரதி,

    இத வாசிச்ச உடன அங்க போய் உறுப்பினர் ஆகி ரண்டு இடுகைக்குப் பதிலும் போட்டுட்டன். உங்கட டொரண்ட் பற்றின கேள்விக்கும் சின்னதா பதில் போட்டிருக்கிறன்.

  9. puduvai siva Avatar
    puduvai siva

    Thank you verymuch to show the site

    siva
    puduvai.

  10. can any one tell about the work with adsense publish my website to the visitors .
    in this site different type of ad and jobs. any one can tell me about this type of work by the tamil language. thanking you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *