சென்னையில் ஆர். எஸ்.எஸ் அலுவலகத்தின் குண்டு வைத்து பலியான தீவைரவாதி ஒருவனின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர் இறந்து 13 ஆண்டுகள் கழித்தும் அடையாளம் தெரியாததால்.. அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக 28மே 2008 ம் தேதி தினத்தந்தி 11ம் பக்கத்தில் செய்தி வெளியிட்டு உள்ளது. அதே தேதியில் வந்திருக்கும் தினகரன் 5ம் பக்கத்தில் அடையாளம் தெரிந்ததால் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டு இருக்கிறது.

அதே போல.. கால்டாக்ஸி டிரைவர் தனசேகர் என்பவனி காவல்துறை கது செய்திருக்கிறது. அவன் மீது குற்றம் ஒரு பெண்ணுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பினான் என்று புகார். 28.மே.2008 தேதிகளில் வெளியான தினகரன் 18ம் பக்கத்தில் அந்த பெண் பயிற்சி நர்ஸ் என்கிறது, தினத்தந்தியோ பக்கம் 10 ல் டாக்டர் என்கிறது. இரண்டில் எது உண்மை! புண்ணிய ஆத்மாக்கள் கொஞ்சம் நிறைய கவனத்துடன் செய்திகளை வெளியிடுவார்களேயானால்.. என் போன்ற.. சாதாரண பொதுமக்கள் குழம்ப வேண்டி இருக்காது. இது தவறான செய்தியை வெளியிட்டவர் மீது செலவு இல்லாமல் வழக்கு தொடுத்து தண்டனை வாங்கிக்கொடுக்க ஏதாவது வழி இருக்கான்னு.. மக்கள் சட்டம் சுந்தரராஜன் தான் சொல்லனும்!

-oOo-

ஒரு மொபைல் வாங்கலாம் என்று ஒருவருடன் சென்னையில் நேற்று அலைந்ததில் பல உண்மைகள் புலப்பட்டன! முதலின் போன இடம் விவேக் ஸ்டோர். நோக்கியாமாடல்.3500 விலை ரூ. 5.748/- என்றார்கள். சிறிதூரம் போய் யுனிவெர்செல்லில் விலை கேட்டோம். அதே மாடல் ரூ. 200 முதல் கடையை விட அதிகம் சொன்னார்கள். அதவது.. ரூ 5,948/-. வெளியில் வந்து நில நண்பர்களுக்கு போன் செய்து கேட்டதில் அவர்கள் சிபாரிசின் பேரில் மொபைல் ஸ்டோர் என்ற கடைக்கு போனோம். அதே மாடல். மற்ற கடைகளை விட சற்று குறைவாக இருந்தது. ரூ. 5.478/- என்றார்கள். உடன் வந்தவருக்கும் இன்னும் ஒரு கடையில் பார்த்து விடலாம் என்ற எண்ணமிருந்தது. ‘சுபிக்‌ஷாவுலையும் மொபைல் விக்குறாங்க! அங்கேயும் விசாரியேன்’ என்றார். அந்த கடையில் இருந்து வெளியில் வந்து, சுபிக்‌ஷா நம்பர் பிடித்து விசாரித்ததில்.. எனக்கு இன்னும் ஆச்சரியம் அதிகமானது. அதே மாடல் விலை ரூ.5.417/-. பிறகென்ன.. சுபிக்‌ஷா போய் மொபைல் வாங்கினோம். அந்த மொபைல் பெட்டியின் மீதுரூ.6,679/- என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

நீதி/நிதி: ஒரு பொருள் வாங்கும் போது பல இடங்களில் விசாரித்தால் கொஞ்சம் சேமிக்கலாம். அல்லது மிச்சப்படுத்தலாம். 🙂

-oOo-

சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பாக இயங்கி வரும் “பிரீபெய்டு ஆட்டோ” இனி கோயம்பேட்டிலும் கிடைக்கும். நேற்று அமைச்சர்கள் நேரு,பரிதி ஆகியோர் துவக்கி வைத்துள்ளனர். என்னைப் போன்றவர்களுக்கு இனி ஜாலி தான். அதிகத்தொகையை கொடுத்து விட்டு அழவேண்டியதிருக்காது. 🙂

{சென்னையில் கால் ஆட்டோ – 044-39993999 ஓடிக்கொண்டிருப்பது பலருக்கு தெரிந்திருக்கலாம். காலை7 முதல் மாலை 7 வரை மட்டுமே கால் ஆட்டோ கிடைக்கும். ஞாயிறு விடுமுறை.  பயணதூரம் மீட்டரில்கணக்கெடுக்கப்படுகிறது. கூடுதலாக வெறும் ரூ.20/- வாங்குகிறார்கள். }

-OoO-

ஊடகத்துறையிலும் சரி, அச்சுத் துறையிலும் சரி.. துறைசார்ந்த விசயங்களைத் தவிர வேறு வாசிப்பு என்பதே இல்லாமல் தான் 80% பேர் இருக்கிறார்கள் என்பது வருந்தக்கூடிய உண்மை! என்னோட வேலை பார்த்த ஒரு சக ஊழியர் ஒருவர் பெருமையாக சொன்ன செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ‘இது வரை நான் ஒரு புத்தகம் கூட படிச்சதில்லை… படிக்கிற காலத்திலே இருந்தே..அப்படித் தான். எப்படியோ பாசாகி வந்துட்டேன்.’ என்றார். :(.

இத்தனைக்கும் இவர் க்ரைம் பீட் பார்ப்பவர் வேறு! 🙁

-oOo-


Comments

7 responses to “விடுபட்டவை 28.மே.2008”

  1. 1. நீங்கள் தினகரன், தினத்தந்தியோடு தினமலரும் வாசித்திருந்தால் இன்னமும் நகைச்சுவையாக இருந்திருக்கும்.

    2. சுபிக்‌ஷா, மொபைல் ஸ்டோரை விட ரிச்சீ ஸ்ட்ரீட்டில் வாங்கியிருந்தால் இன்னமும் குறைந்தவிலையில், இன்னமும் நவீன செல்பேசியை வாங்கியிருக்க முடியும். என்ன நோக்கியாவுக்கு பதிலாக நோக்லா வாங்கவேண்டியிருந்திருக்கும்.

    3. கால் ஆட்டோ என்பது புதியதாக இருக்கிறது. இதுவரை நான் பார்த்த ஆட்டோக்கள் மூன்று சக்கரத்தில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. காலால் ஓடும் ஆட்டோவை காண ஆசை.

    4. க்ரைம் பீட் பார்த்தவர் உங்கள் ஹார்ட் பீட்டை எகிறவைத்திருக்கிறார். சில பேர் தாவூ தீர வாசித்து அறிவு பெறுகிறார்கள். பல பேர் வாசித்தவர்களின் வாயை பிடுங்கி அறிவு பெறுகிறார்கள்.

  2. சார்.. 6060 7777க்கு கால் பண்ணுங்க.. :)))

  3. உங்களின் இந்த புதிய(?) ஸ்டைல் அலசல் பதிவுகள் ரெம்ப நல்லாயிருக்குது.

  4. தமிழநம்பி Avatar
    தமிழநம்பி

    வேறுபட்டவகையில்-
    விளையாட்டுத்தனமாக-
    பயனுள்ள செய்தி!
    நன்றி!
    பாராட்டுகள்!
    -த.ந.

  5. Prabhu Rajadurai Avatar
    Prabhu Rajadurai

    பாலபாரதி,
    எப்பவுமே ஒன்னோட நின்னுக்கிறது நல்லது. இல்லைன்னா குழப்பம்தான்…செய்தித்தாளாயிருந்தாலும் சரி, மொபைல் போனா இருந்தாலும் சரி!

    பாருங்க இப்ப நோக்லான்னு சொல்றார். ஆமாம், இதை விட குறைந்த விலைக்கு ஏறக்குறைய மினி டிவி ரேஞ்சுக்கு சைனா மொபைல் கிடைக்குதுங்க…ரெண்டு சிம் கார்டு வசதியுடன்!

  6. //இதை விட குறைந்த விலைக்கு ஏறக்குறைய மினி டிவி ரேஞ்சுக்கு சைனா மொபைல் கிடைக்குதுங்க…ரெண்டு சிம் கார்டு வசதியுடன்!//

    அதுக்கு பேரு தாங்க நோக்லா.

    நோக்லா மட்டுமில்லை… சோனே எரிக்சம், மோடெராலோன்னு என்று வேறு வேறு பெயர்களிலும் கிடைக்குது. ஐபோன் கூட ரொம்ப சீஃப்.

  7. புதுசா இருக்கே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *