எரியும் நினைவுகள்- யாழ் நூலகம் குறித்த ஆவணப்படம் திரையிடல்! நான் போய் இருந்த போது மாலை ஐந்து மணி தான் ஆனது. ஆனால் அதற்குள்ளாக படத்தின் இயக்குனர் சோமிதரன் மற்றும் அவரது குழுவினருடன், படம் பார்க்க பலரும் வந்திருந்தது வியப்பை ஏற்படுத்தியது. இரு சக்கர வாகனத்தில் வந்திருக்கேன் என்று நினைத்து என்னை பார்வையாளர்களுக்கு பிஸ்கெட் வாங்க அனுப்ப நினைத்து வந்து கேட்ட சோமி ஏமாந்து போனார், பேருந்தில் வந்தேன் என்ற என் பதிலைக் கேட்டு! 🙂 அப்புறம் அவசரமாக வேறு ஒரு நண்பரை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தோம். என்னிடமும், சோமியிடம் தலைக்கு நூறு ரூபாய் வாங்கிக்கொண்டு போனார் அந்த நண்பர். (இலக்கிய கூட்டங்களில் வழங்கப்படும் வழக்கமான சக்கரை வியாதிக்காரர்களின் ‘மாரி பிஸ்கட்’ தான்) சரியாக மாலை 6.16க்கு படம் ஓடத்தொடங்கியது. பொதுவாக குறும்படம் திரையிடப்படும் இடங்களில் படம் தொடங்குவதற்கு முன் ஒர் அறிமுக உரை இடம்பெறும். இங்கு அப்படி ஏதும் இல்லாமல்.. நேரடியாக படத்திற்கு போனது.. பார்வையாளர்களை தயார் படுத்தாமலேயே போனது போல் தோன்றியது. படம் ஓடிக்கொண்டிருந்த போது என் அருகில் இருந்த ஒரு நபர் அழுதுகொண்டிருந்தார் (!!!!!), லீனாமணிமேகலை போன்ற பலரும் அழுததாக பின்னர் அறிந்தேன். சிறப்பு அழைப்பாளராக வந்து பேசிய பாலுமகேந்திராவும் அழுதார். ரவிக்குமார் எம்.எல்.எ பேசி முடித்த பின், அனேகர் அழுவதை உணர்ந்தவராக அவரும் கண்களை சும்மாச்சுக்கும் கசக்கிக்கொண்டிருந்தது பார்த்த போது எனக்கு சிரிப்பு வந்து விட்டது. இதை நான் மட்டும் கவனித்ததாக நினைத்திருந்தேன். ஆனால் தம்பி த.அகிலனும் கவனித்தது படம் முடிந்து அவனோடு பேசிய போது தான் தெரியவந்தது. 250 பேர் உட்கார்ந்து பார்க்கக்கூடிய நிலையில் இருந்த அரங்கில் கிட்டத்தட்ட எல்லா இருக்கைகளும் நிரம்பி இருந்தது மனதிற்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ரூ.100/-க்கு படத்தின் டி.வி.டி விற்பனை செய்யப்பட்டது அதையும் வாங்கிக்கொண்டு வந்து வீடு சேர்ந்தேன். பல பதிவர்களும், பத்திரிக்கையாளர்களும் அறிவு ஜீவிகளும் நிறைந்து காணப்பட்டார்கள். (பதிவில் வலையேற்ற பாலுமகேந்திரா+ரவிக்குமாரின் பேச்சை கொண்டு போயிருந்த வாய்ஸ் ரிகாடரில் பதிவு செய்தேன். 2.30எம்.பி என்று காட்டுகிறது.. ஆனால் ஓட மறுக்கிறது.. என்ன செய்றதுன்னு தெரியலை 🙁 )

-OoO-

கடந்த மாதம் சென்னை அண்ணா சாலையில் இருக்கும் ராஜ்வீடியோ விஷனில்.. சில படங்களின் சி.டி+ டி.விடிக்கள் வாங்கினேன். வாங்கியதிலிருந்து போட்டுப் பார்க்காமல்.. அட்டைப் பெட்டியில் தூங்கிக்கொண்டிருந்தது. அதில் ஒரு டி.வி.டியை எடுத்து இன்று பார்க்க நினைத்து.. கணினியில் போடு பார்த்தால்.. “0-பைட்” என்று காட்டுகிறது. ஒன்றுமே பதிவு செய்யாமல் பேக் பண்ணி விற்று இருக்கிறார்கள். நாளை போய் மாற்றிக் கேட்க வேண்டும். பில் வேறு தொலைந்து விட்டது. :(. நண்பர்களே.. கம்பெனி அய்ட்டம் வாங்கினாலும் இனி உஷாராக இருக்கனும் போல..!

-oOo-

அக்டோபர் ரெண்டாம் தேதி முதல் பொது இடங்களில் புகைபிடிக்கும் தடைச்சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று அன்புமணி தெரிவித்திருக்கிறார். மகிழ்ச்சியான செய்தி தான். டாக்டர்.ராமதாஸ் ஏற்கனவே மதுக்கடைகளை ஒழிக்கவேண்டும் என்று அறிக்கைகளும் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இருவரின் சமூக அக்கரையும் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும்.. இதே கருத்தை தன் கட்சிக்காரர்களிடமும் இவர்கள் கொஞ்சம் கடுமையாக காட்டினார்கள் எனில் நன்றாக இருக்கும். பல பா.à®®.க காரர்கள் இவ்விரண்டுக்கும் அடிமையாகவே இருக்கிறார்கள் இன்றும்! உடல் நலக்குறைவுள்ள ஒருவரை டாக்டர் ‘அசைவம் சாப்பிடக்கூடாது’ என்று சொன்னால்… கசப்புக்கடைகளை ஒழியுங்கள் என்று நோயாளி சொன்னால் எப்படி?

-OoO-

சினிமாவில் ஒளிப்பதிவராகி விடவேண்டும் என்ற வேட்கையுடன் அலையும் தம்பி அவன். பல மாதங்களுக்கு பின் இன்று பார்க்க நேர்ந்தது.

‘அண்ணே.. கல்யாணம் ஆகிடுச்சா?’

“இல்லப்பா.. இன்னும் பண்ணல”

‘உங்களுக்கு என்ன வயசாகிடுச்சுண்ணே’

“முப்பத்தி நாலு. ஏன்டா.. இப்ப வயசா கேக்குற?”

‘இல்ல.. எனக்கே இருபத்தியெழு ஆகிடுச்சு.. அதனால கேட்டேன். ஆமாண்ணே.. இன்னொன்னு கேட்டா தப்பா நெனைக்க மாட்டீங்கள்ல..’

“இல்ல கேளு”

‘அந்த மாதிரி சமயத்துல எப்படிண்ணே சமாளிகிறீங்க?’

“எந்த மாதிரி சமயத்துல?”

‘தெரியாத மாதிரி கேக்காதீங்கண்ணே.. மூட் வர்ற சமத்துல எப்படி கன்ரோல் பண்ணுறீங்கன்னு கேட்டேன்’

“மொதல்ல ஒன்னு புரிஞ்சுக்கோ.. மூட் வர்றதும், வராம போறதுக்கும் நம்மளோட மனசு தான் காரணம். அத கட்டுப்படுத்த தெரிஞ்சா போதும். ஒரு தொல்லையும் இல்லை. அதையும் மீறிச்சுன்னா.. எல்லோரும் என்ன பண்ணுவாங்களோ.. அத பண்ணவேண்டியது தான்.. இதுக்கெல்லாம் தனியா கிளாசா எடுப்பாங்க போடா”

-oOo-

யாழ் நூலக வரலாறு தெரியாதவர்கள் இங்கே சொடுக்கினால் படித்து அறிந்து கொள்ளலாம். நன்றி நூலகம்


Comments

10 responses to “விடுபட்டவை – ஜூன் 1. 2008”

  1. 🙁

    🙁

    🙂

    😐

  2. யாழ் நூலக வரலாறு மென்நூல் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

  3. //அக்டோபர் ரெண்டாம் தேதி முதல் பொது இடங்களில் புகைபிடிக்கும் தடைச்சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று அன்புமணி தெரிவித்திருக்கிறார். மகிழ்ச்சியான செய்தி தான். டாக்டர்.ராமதாஸ் ஏற்கனவே மதுக்கடைகளை ஒழிக்கவேண்டும் என்று அறிக்கைகளும் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இருவரின் சமூக அக்கரையும் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும்.. இதே கருத்தை தன் கட்சிக்காரர்களிடமும் இவர்கள் கொஞ்சம் கடுமையாக காட்டினார்கள் எனில் நன்றாக இருக்கும். பல பா.ம.க காரர்கள் இவ்விரண்டுக்கும் அடிமையாகவே இருக்கிறார்கள் இன்றும்! உடல் நலக்குறைவுள்ள ஒருவரை டாக்டர் ‘அசைவம் சாப்பிடக்கூடாது’ என்று சொன்னால்… கசப்புக்கடைகளை ஒழியுங்கள் என்று நோயாளி சொன்னால் எப்படி?//
    Smoke panratha vida sonna.. eppadi ellam samalikiraru parunga bala..

  4. அன்பின் பாலபாரதி,

    ‘விடுபட்டவை’ பகுதியில் மிக அருமையாக எழுதுகிறீர்கள்.
    வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது இன்னொருவர் டயறியைத் திருட்டுத்தனமாகப் படிப்பதுபோல.

    தினமும் இப்பக்கத்தைப் படித்துவிட்டே தூங்கப்போகிறேன்.
    வாழ்த்துக்கள்..!
    தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே 🙂

  5. ஆசிப் மீரான் Avatar
    ஆசிப் மீரான்

    தலை

    நீங்க இந்த மாதிரி விசயத்துக்கு தனியா டிச்யூசன் எடுக்குறதா நம்ம பாகசலேருந்து யாராவது அவருக்கு சொல்லியிருப்பாங்க. அது தெரியாம நீங்க பாட்டுக்கு ஏதோ சொன்னா என்ன அர்த்தம்? உங்களுக்குத் தெரிஞ்சதை அக்கறையா கேக்குறவங்களுக்கும் சொல்லிக் கொடுங்க தலை

  6. இது போல தினமும் எழுதும் குறிப்புகள் சுவாரசியமாக இருக்கின்றன. வலைப்பதிவென்பது ஒரு டைரிக் குறிப்பென்ற அறிமுகத்துடன்தான் நான் பதிவிட வந்தேன்.
    விரைவில் வலைப்பதிவுக்கான தனித்துவ அடையாளங்களில் இவ்வகை பத்தி எழுத்துக்கள் அடையும் போல்த்தெரிகிறது. நிறையப் பேர் இது போல எழுதுவார்கள். நானும்..

  7. தூயா Avatar
    தூயா

    சோமி இந்நூலை உருவாக்க ரொம்ப கஸ்டப்பட்டார்….

  8. \\அத கட்டுப்படுத்த தெரிஞ்சா போதும்\\
    நெத்தி அடி

  9. 1. நேரடி வர்ணனைக்கு நன்றி. சில பல முக்கிய பிரச்சினையால் வர இயலாமல் போய் விட்டது.

    2. முகம்மது பின் துக்ளக் பார்த்தாச்சா? இன்னும் சிடி ரிடர்ன் வரலை… நீங்கள் கேட்ட ஆங்கிலப் படங்களின் தமிழ் டிவிடிக்களை இன்னும் சதீஷ் தரவில்லை. சதீஷ் தந்தவுடனேயே உங்களுக்கு தந்துவிடுகிறேன்.

    3. வெச்சிட்டாங்களே ஆப்பு! 🙁 இனிமே என்ன பண்ணப் போறீங்க?

    4. மனதை கட்டுப்படுத்துவது குறித்து எனக்கு ட்யூஷன் எடுக்கவும்.

    5. நேரம் கிடைக்கும் போது வாசிக்கிறேன். சில விஷயங்களை கொஞ்சம் சீரியஸாக நேரம் ஒதுக்கி வாசிக்க வேண்டியிருக்கிறது.

  10. பாலபாரதி!

    முதலில் விடுபட்டவை தினக்குறிப்புக்குப் பாராட்டுக்கள். தொடர வாழ்த்துக்கள்.

    //படம் ஓடிக்கொண்டிருந்த போது என் அருகில் இருந்த ஒரு நபர் அழுதுகொண்டிருந்தார் (!!!!!), லீனாமணிமேகலை போன்ற பலரும் அழுததாக பின்னர் அறிந்தேன். சிறப்பு அழைப்பாளராக வந்து பேசிய பாலுமகேந்திராவும் அழுதார்//

    சரவணபவனில் சாப்பிடும் போது, நான் ஒரு சம்பவத்தைச் சொல்ல, நீங்கள் அதிர்ந்து போயிருந்தீர்களே, அந்தச் சம்பவத்தின் நிகழ்களம் கூட யாழ். நூலகப் பகுதிதான். அந்த நூலகத்தைப் பலரும், ஒரு அறிவுசார் தளமாகவும், அதன் இழப்பாகவுமே பார்ப்பதுண்டு. ஆனால் அந்தச் சூழலில் சிறிலங்காப்படைகளுடன் எதிர்த்துப் போராடிய போராளிகள் ஒவ்வொருத்தரும், அதனை சகபோராளியாகவே உணர்வதுண்டு. எப்போதும் அதன் நினைவுகள் ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *