(குழந்தைகளுக்கான கதை)
இச்சிலை பாரீஸில் உள்ளது. (இணையத்தில் ranelagh paris- என்று தேடவும்)
அந்த ஊரில் ஒரு பாட்டி நீண்ட காலமாக வடை சுட்டு, பிழைத்துக்கொண்டிருந்தாள். வெளி ஊர்களுக்கு போவோர், வருவோர் எல்லாம் அவளிடம் வடை வாங்குவார்கள். ஊரின் எல்லையில் பாட்டியின் கடை இருந்தது. கடை என்றால்.. பெரிய அளவில் யோசிக்கவேண்டாம். ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து, மூன்று கற்களை வைத்து, சுள்ளிகள் கொண்டு, நெருப்பு மூட்டி, அதன் மேல் வடைச்சட்டி வைத்து, வடை சுடுவாள்.
அந்த திருட்டுக் காகத்திற்கு, பாட்டியிடமிருந்து மீண்டும் வடை திருடி விடவேண்டுமென்பது ஆசை. அடிக்கடி பாட்டி அமர்ந்திருக்கும் மரக்கிளையில் வந்து அமர்ந்து, பாட்டியை நோட்டம் விட்டுக்கொண்டிருக்கும்.
ஒரு நாள் சமயம் பார்த்து, மரக்கிளையில் இருந்து, கீழே வந்தது காகம். மெல்ல தத்தித்ததி நடை போட்டு, பாட்டி சுட்டி வைத்திருந்த வடைச்சட்டியின் அருகில் போனது.
வடையை கவ்விக்கொண்டு பறந்து செல்ல காகம் எத்தனித்த போது, மறைத்து வைத்திருந்த தடியை எடுத்து ஓங்கி, ஒரு அடிவிட்டாள் பாட்டி.
“நீ புத்திசாலியா? நரி புத்திசாலியா-ன்னு போட்டி போடுறதுக்கு என் கடையில இருந்துதான் வடையை திருடிகிட்டு போவியா? நான் இப்பம் கண்ணாடி போட்டிருக்கேன்” என்று பாட்டி கத்திய பின் தான், அடிவாங்கிய காகம் பாட்டியைப் பார்த்தது. புதுக்கண்ணாடியில் இருந்தாள் பாட்டி.
படம் உதவி: கூகிளார் 🙂
—————
மேலும் சில குழந்தைகளுக்கான கதைகள்
ஹிஹி சூப்பர் தல
நன்றி எல்கே! 🙂
ஹா..ஹா… இன்றைய விவரமான பாட்டி…