ஆட்டிசம்: சில புரிதல்கள்- நூல் வெளியீடு அழைப்பிதழ்

aatisam book realse 4

எங்கள் பையனின் வளர்ச்சி எல்லாம் சரியாகத்தான் இருந்ததாக நாங்கள் நம்பிகொண்டிருந்தோம். ஒன்னரை வயதில் மருத்துவரும், ஓர் ஆட்டிசக்குழந்தையின் தகப்பனாகிய நண்பர் ஒருவரும் தான் கனி கண்ணோடு கண் பார்க்கவில்லை அதனால் ஆட்டிசக் குறைபாடு இருக்கலாம் என்று சந்தேகத்தைச் சொன்னார்கள்.

தொடக்கத்தில் நாங்கள் நம்பவில்லை. அதற்கு காரணமுமிருந்தது. பொதுவாக ஆட்டிசக் குழந்தைகள் யாரையுமே கண்ணோடு கண் காண்பதில்லை. ஆனால் கனியோ எங்களிருவரையும் கண் பார்த்துச்சிரிப்பான். அதே சமயம் வீட்டுக்கு வந்துபோகும் நண்பர்களையோ உறவினர்களையோ அவன் நேரடியாகப் பார்ப்பதில்லை. இது எங்களுக்குப் பின்னாளில் தான் தெரியவந்தது. சில குழந்தைகளையும், பல பேரப்பிள்ளைகளையும் பார்த்த வயதான கிழவ, கிழவிகளால் கூட இதனை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதும், இரண்டு, மூன்று வயது குழந்தைகளைப் பெற்றெடுத்த, நண்பர்களாலும் கூட இதனை அடையாளம் காணமுடியாமல் போதும் தான் பெரும் சோகம்.

அப்போது தான் எங்களுக்கு தோன்றியது.. குழந்தையை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கியவர்களால் கூட, ஆட்டிசத்தை அடையாளம் காண்பது எளிதாக இல்லையெனில்.. இதனைக்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம்.

தங்களின் குழந்தைக்கு இன்னது என்று உணர்ந்துகொள்ள முடியாமல் இருக்கும் ஆயிரக்கணக்கான பெற்றோரில் ஒருவருக்காவது இப்புத்தகம் பயன்பட்டால் மிகுந்த மகிழ்ச்சியடைவோம்.

சரி, என் குழந்தை நல்லா இருக்கு. நோ ப்ராபளம் என்பவரா.. நீங்கள்.. அப்படியெனில்.. நீங்களும் தான் என் இலக்கு. அதற்கான காரணங்கள் இரண்டு உண்டு,

ஒன்று:- பாதிப்பறியாமல் உங்கள் சுற்றுவட்டத்தில் இருக்கும் குழந்தைகளை அடையாளம் காணவும், அக்குழந்தைகளுக்கு முன்கூட்டிய பயிற்சிகளைத்தொடங்குவதற்கும் நீங்கள் உதவக்கூடும். அதற்கு ஆட்டிசம் பற்றிய புரிதல் உங்களுக்கும் அவசியம்.

இரண்டு:- குறைவான ஆட்டிசப்பாதிப்பு உள்ள குழந்தைகளையும், அதிலிருந்து மீண்டுவரும் குழந்தைகளையும் சிறப்பு பள்ளிகளுக்கு அனுப்பவேண்டாம், சாதாரணப்பள்ளிகளுக்கு அனுப்புங்கள் என்று மருத்துவர்களும், தெரபிஸ்டுகளும் வலியுறுத்துகின்றனர். ஆனால், இக்குழந்தைகளை பெரும்பாலான பள்ளிகள் சேர்த்துக்கொள்ள மறுத்துவிடுகின்றன. அதற்கு பள்ளி சொல்லும் காரணம், தங்கள் பிள்ளைகளுக்கு ஏதாவது வந்துவிடுமோஎன்று மற்ற பெற்றோர் பயப்படுவதாக சொல்கிறது. தொட்டுவிட்டால் ஒட்டிக்கொள்கின்ற தொற்று நோய் அல்ல ஆட்டிசம். சாதாரணக்குழந்தையின் பெற்றோராக நீங்கள் இருக்கும் பட்சத்தில், ஆட்டிசக்குழந்தைகளை ஒதுக்கவேண்டாம், அவர்களையும் நாம் இயல்பு வாழ்க்கையை வாழவழிசெய்யமுடியும். இவர்களுக்கான உரிமையை மறுப்பவரிடம் இக்குழந்தைகளின் சார்பில் நீங்களும் வாதிடமுடியும். அதற்கு இப்புத்தகம் துணைநின்றால் உள்ளபடியே மகிழ்வேன்.

இக்காரணங்களினாலயே ஆட்டிசம் குறித்து நீங்களும் அறிந்து வைத்துக்கொள்ளுங்கள்…கொள்ளவேண்டும் என்றும் விரும்புகிறேன்.

எனது ஆட்டிசம் பற்றிய புரிதல்களை தொகுத்து, நூலாக்கொண்டு வர பாரதி புத்தகாலயம் இசைந்துள்ளது. அதன் வெளியீடு எதிர்வரும், 2013 மார்ச் 30ம் தேதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு, தியாகராயர் நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவில் நடைபெற உள்ளது.

வாய்ப்புள்ளவர்கள் வாருங்கள். குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் வந்தால் இன்னும் மகிழ்ச்சி!

This entry was posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், அப்பா, ஆட்டிசம், ஆட்டிஸம், கவிதை, குழந்தை வளர்ப்பு, மதியிறுக்கம் and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to ஆட்டிசம்: சில புரிதல்கள்- நூல் வெளியீடு அழைப்பிதழ்

 1. விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் சார்….

 2. Anand says:

  உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

 3. நூலின் நோக்கம் நிறைவேற என் நல்வாழ்த்துகள்!

 4. Selvam says:

  Let me know the detail how can get this via post

 5. Ramadoss says:

  I have gone through your blogs on Autism.May i have your telephone no pl to enable me to contact you as my grand daughter who is around 3 years now has autism symptoms. pl do reply

 6. தனி மடலில் தொடர்பு கொண்டுள்ளேன்.

 7. Arumugam says:

  Dear BalaBharathi,
  Really very good guide and awareness ,i am in Singapore we find my son had Autism around age of 3.5yrs nursery school deducted until we don’t know the word Autism .Now he was 5rs old studying special education weekly 3days ,just 2.5hrs a day .
  Lot of improvements till he need to goalong longway ,his speech delay but he singing ,he is not writting but he drawing .Let we try ……but i hope my son will come up ……suceed the world .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.