sivappu

ஐந்தாம் வகுப்பில் படிக்கும் அருண் என்ற சிறுவனும், அவனது நண்பர்களும் ஒரு வேற்றுக்கிரக்க வாசியைச் சந்திக்கிறார்கள். அதனுடன் விண்கலத்தில் பயணமாகி, அதன் உலகிற்குச் செல்கின்றனர். அங்கே என்னென்ன பார்த்தார்கள் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதைக் குழந்தைகளுக்கான மொழியில் எளிமையாக எழுதியுள்ளார் நூலாசிரியர் க.சரவணன்.

மதுரையில் ஒதுக்குப்புறமாகக் குடிசையில் வாழும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் அருண். அவனுடைய நண்பர்களோ வேறு பகுதியில் வசிக்கும் மத்தியதர குடும்பத்தினர். அருண் வீட்டில் மின்சாரம் இல்லை என்பதே நண்பர்களுக்கு பெரும் அதிர்ச்சியான செய்தி. அதோடு அவனுடனேயே சென்று அவனது வீட்டில் தங்கி, அவன் வாழ்க்கையை, இக்குழந்தைகள் உணரும் தருணத்தினை அழகாகப் பதிவு செய்துள்ளார்.

குழந்தைகளின் வாசிப்புக்கு ஏற்ற சுவாரஸ்யமான கதை.

++++++++++++++++++
நூல்: சிவப்புக்கோள் மனிதர்கள்

ஆசிரியர்: க. சரவணன்

விலை: ரூ.50/-

வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன் (பாரதி புத்தகாலயம்)

நூல் தேவைக்கு: 044-24332924 / 24332424

#வாசிப்பு #வாசகப்பரிந்துரை #சிறுவர்_நூல்
#இளையோர்_நூல்

#thamizhbooks #thamizhbookscbf